search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reduced"

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று 2 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து ஒவ்வொரு நாளும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் வந்தது.

    30-ந் தேதி வினாடிக்கு 5ஆயிரத்து 60 கனஅடியாக வந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 5ஆயிரத்து 429 கனஅடியாக அதிகரித்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தற்போது மழை குறைந்து உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் நேற்று முதல் சரிந்து வருகிறது.

    நேற்று காலை 4 ஆயிரத்து 18 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2 ஆயிரத்து 628 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    நீர்திறப்பை காட்டிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 36.72 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 37.33 அடியாக உயர்ந்தது. இன்று காலை இது 37.69 அடியாக உயர்ந்து உள்ளது.

    இதேபோல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 800 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 2 ஆயிரம் கனஅடியாக குறைந்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    தூத்துக்குடியில் முழு அளவில் சகஜ நிலை திரும்பியதாலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாலும் போலீஸ் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டு உள்ளது. #BanSterlite #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பொதுமக்கள் இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டதுமே 21-ந்தேதி காலையில் இருந்தே தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலையில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து துப்பாகி சூடு, அதை தொடர்ந்து வன்முறை காரணமாக தூத்துக்குடிக்கு நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டனர்.

    உச்சபட்சமாக 5 ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தார்கள். கமாண்டோ படையும் வரவழைக்கப்பட்டிருந்தது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் தூத்துக்குடியில் அமைதி திரும்பியது. முழுமையான அமைதி திரும்பும்வரை போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், அதன்பின்னர் போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவித்திருந்தார்.



    அதன்படி தற்போது தூத்துக்குடியில் முழு அளவில் சகஜ நிலை திரும்பியதாலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாலும் போலீஸ் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டு உள்ளது. வெளிமாவட்ட போலீசார் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இன்று கவர்னர் வந்துள்ளதால் அவருடன் பாதுகாப்புக்கு உள்ள போலீசார் தவிர குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.  #BanSterlite #SterliteProtest

    ×