search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramkumar"

    துரை செந்தில்குமார், ராம் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் இரு படங்களை அடுத்தடுத்து தயாரிக்க இருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #DhanushWithSathyajyothi #Dhanush
    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

    இந்த நிலையில், தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த 2 படங்களை தயாரிக்கவிருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணையும் படத்தையும், ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.


    இதில் துரை செந்தில்குமார் இயக்கும் படத்திற்கு விவேக் - மெர்வின் இணைந்து இசையமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர தனுஷ் வெற்றிமாறனின் வடசென்னை 2, அசுரன் படங்களில் நடிக்கவிருக்கிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், தான் இயக்கி நடிக்கும் பிரம்மாண்ட படம் என இந்த ஆண்டு தனுஷ் பிசியாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    தனுஷ் நடிப்பில் அடுத்ததாக `எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீசாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Dhanush #DhanushWithSathyajyothi

    ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படத்திற்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்துள்ளது. #Ratsasan
    வணிக ரீதியிலான பொழுதுபோக்கு படங்களின் மத்தியில், ஒரு சில திரில்லர் சினிமாக்கள் மக்களிடையே மிகப்பெரிய அதிர்வுகளை உண்டாக்கும். அந்த வகையிலான ஒரு திரைப்படம் தான் ‘ராட்சசன்’. இப்படத்தின் வித்தியாசமான கதையமைப்பால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. 

    இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, வணிக ரீதியாக அதிக வசூல் செய்த படம் என்று நிரூபணம் ஆகியுள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு பெரும் அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது. 

    ராட்சசன் படத்தின் பெருமைகளுக்கு மகுடம் சூட்டுவது போல, தற்போது இந்த படம் IMDB தரவரிசையில் இந்தியாவின் சிறந்த படங்களின் வரிசையில் இரண்டாவது மிகச்சிறந்த படமாக மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்படங்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவுக்கே புத்துணர்ச்சி அளித்திருக்கிறது.

    மேலும் IMDB தர வரிசையில் தென்னியந்திய சினிமாக்களில் ராம்சரணின் ரங்கஸ்தலம், விஜய்சேதுபதியின் 96 மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி ஆகிய படங்களும் சிறந்த படங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.



    ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், கிறிஸ்டோபர் சரவணன் ஆகியோர் நடித்திருந்தனர். ராம்குமார் இயக்க, ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்திருந்தார்.
    விஜய் சேதுபதியின் 96 மற்றும் விஷ்ணு விஷாலின் ராட்சசன் படங்களை பார்த்த இயக்குநர் ஷங்கர் படத்தையும், படக்குழுவையும் பாராட்டியுள்ளார். #96TheMovie #Ratsasan
    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த 4-ந் தேதி வெளியாகிய 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளிக் காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். 

    அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். 

    அதேபோல் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் 5-ந் தேதி வெளியான சைக்கோ த்ரில்லர் படமாக ராட்சசன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், இரு படங்களின் காட்சிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
    இந்த நிலையில், படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் 96, ராட்சசன் படக்குழுவை பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

    `96, ஏதாவது ஒரு காட்சியில் தனிப்பட்ட முறையில் நம்மை தொடர்புபடுத்துகிறது. அதுவே இந்த படத்தின் அழகு. விஜய் சேதுபதி அற்புதமான நடிப்பு. திரிஷாவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. பிரேம்குமாருக்கு வாழ்த்துக்கள். ராட்சசன், மற்றொரு சுவாரஸ்யமான படம். ரசிகர்கள் இயக்குநர் ராம்குமாருக்கு கைதட்டி வாழ்த்து தெரிவிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அது அவருக்கே உரியதாகும்' இவ்வாறு கூறியுள்ளார். #96TheMovie #Ratsasan

    `வடசென்னை' படத்தை தொடர்ந்து, இயக்கத்தில் பிசியாகி இருக்கும் தனுஷ் அடுத்ததாக ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Dhanush #RamKumar
    `முண்டாசுப்பட்டி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராம்குமார். அவரது இயக்கத்தில் அடுத்ததாக `ராட்சசன்' படம் வருகிற 5-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் - அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்த நிலையில், ராம்குமார் அடுத்ததாக தனுஷுடன் இணையவிருக்கிறார். பேண்டஸி படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கவிருக்கிறது.



    தனுஷ் தற்போது வரலாறு சம்பந்தப்பட்ட பிரம்மாண்ட படமொன்றை இயக்கி, நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    தனுஷ் நடிப்பில் `வடசென்னை' படம் வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Dhanush #RamKumar

    உலக டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 46 இடங்கள் முன்னேறி 115-வது இடத்தை பிடித்துள்ளார். #Ramkumar #ATPRanking
    நியூயார்க்:

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,310 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (7,080 புள்ளிகள்) 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா), மரின் சிலிச் (குரோஷியா) ஆகியோர் முறையே 3 முதல் 7 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். டோமினிச் திம் (ஆஸ்திரியா) ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஒரு இடம் சரிந்து 9-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஜோகோவிச் (செர்பியா) 10-வது இடத்தில் நீடிக்கிறார்.

    இந்திய வீரர் யுகி பாம்ப்ரி ஒரு இடம் ஏற்றம் கண்டு 86-வது இடத்தை பெற்றுள்ளார். அமெரிக்காவின் உள்ள நியூபோர்ட்டில் நடந்த ‘ஹால் ஆப் பேம்’ சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீரர் ஸ்டீவ் ஜான்சனிடம் தோல்வி கண்டு 2-வது இடம் பெற்ற இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 46 இடங்கள் முன்னேறி 115-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலில் கெர்பர் (ஜெர்மனி), ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கிவிடோவா (செக்குடியரசு), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), ஜூலியா கோர்ஜெஸ் (ஜெர்மனி) முறையே 1 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.
    ×