search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATP ranking"

    உலக டென்னிஸ் வீரர் தரவரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் (8,045 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்தார். #Djokovic
    பாரீஸ்:

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் (8,045 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

    முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,480 புள்ளிகள்) 2-வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (6,020 புள்ளிகள்), அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ (5,300 புள்ளிகள்) ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே (5,085 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் (4,310 புள்ளிகள்), குரோஷியா மரின் சிலிச் (4,050 புள்ளிகள்), ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் (3,895 புள்ளிகள்) ஆகியோர் முறையே 3 முதல் 8 இடங்களில் தொடருகின்றனர்.
    ஜப்பான் வீரர் நிஷிகோரி (3,390 புள்ளிகள்) 2 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தையும், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் (3,155 புள்ளிகள்) ஒரு இடம் பின்தங்கி 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷிய வீரர் காரென் கச்சனோவ் 7 இடங்கள் ஏற்றம் கண்டு 11-வது இடத்தை பெற்றுள்ளார்.
    உலக டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 46 இடங்கள் முன்னேறி 115-வது இடத்தை பிடித்துள்ளார். #Ramkumar #ATPRanking
    நியூயார்க்:

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,310 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (7,080 புள்ளிகள்) 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா), மரின் சிலிச் (குரோஷியா) ஆகியோர் முறையே 3 முதல் 7 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். டோமினிச் திம் (ஆஸ்திரியா) ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஒரு இடம் சரிந்து 9-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஜோகோவிச் (செர்பியா) 10-வது இடத்தில் நீடிக்கிறார்.

    இந்திய வீரர் யுகி பாம்ப்ரி ஒரு இடம் ஏற்றம் கண்டு 86-வது இடத்தை பெற்றுள்ளார். அமெரிக்காவின் உள்ள நியூபோர்ட்டில் நடந்த ‘ஹால் ஆப் பேம்’ சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீரர் ஸ்டீவ் ஜான்சனிடம் தோல்வி கண்டு 2-வது இடம் பெற்ற இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 46 இடங்கள் முன்னேறி 115-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலில் கெர்பர் (ஜெர்மனி), ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கிவிடோவா (செக்குடியரசு), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), ஜூலியா கோர்ஜெஸ் (ஜெர்மனி) முறையே 1 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.
    ×