search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்
    X

    உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்

    உலக டென்னிஸ் வீரர் தரவரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் (8,045 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்தார். #Djokovic
    பாரீஸ்:

    உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் (8,045 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

    முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,480 புள்ளிகள்) 2-வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (6,020 புள்ளிகள்), அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ (5,300 புள்ளிகள்) ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே (5,085 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் (4,310 புள்ளிகள்), குரோஷியா மரின் சிலிச் (4,050 புள்ளிகள்), ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் (3,895 புள்ளிகள்) ஆகியோர் முறையே 3 முதல் 8 இடங்களில் தொடருகின்றனர்.
    ஜப்பான் வீரர் நிஷிகோரி (3,390 புள்ளிகள்) 2 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தையும், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் (3,155 புள்ளிகள்) ஒரு இடம் பின்தங்கி 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷிய வீரர் காரென் கச்சனோவ் 7 இடங்கள் ஏற்றம் கண்டு 11-வது இடத்தை பெற்றுள்ளார்.
    Next Story
    ×