search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public request"

    திண்டுக்கல் அருகே கிராமத்திற்காக அமைக்கப்பட்ட காவிரி தண்ணீர் கடந்த ஒரு வாரமாக நீர் தேக்க தொட்டியில் இருந்து வீணாக வெளியேறுவதை தடுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகே ஆத்தூர் யூனியனுக்குட்பட்ட காந்தி கிராமம், அம்பாத்துரை, தொப்பம்பட்டி, செட்டியப்பட்டி, கலிக்கம்பட்டி, ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் மற்றும் அதன் குக்கிராமங்களில் கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.

    எனவே ஆத்தூர் யூனியனில் உள்ள 22 கிராம ஊராட்சி பகுதிகளுக்கும் காவிரியில் கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக பணி நடைபெற்று முடிந்து உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் காவிரி தண்ணீரை சேமித்து வைத்து சப்ளை செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த வாரம் இந்த காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணியில் சேர்க்கப்பட்ட காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்திற்கு தினசரி 4 லட்சம் தண்ணீர் வழங்கும் ஒப்பந்தம் மூலம் தண்ணீர் சப்ளை தொடங்கியது.

    ரெட்டியார்சத்திரம் அக்கரைப்பட்டி நிர் உந்து நிலையத்தில் இருந்து ஆத்தூர் ஒன்றிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்க தொட்டிகளுக்கும் இறுதியாக காந்திகிராம பல்கலைக் கழகத்தில் உள்ள நீர் தேக்க தொட்டிக்கும் தண்ணீர் செல்வது போல் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு தண்ணீர் நாள் முழுவதும் திறக்கப்படும் போது ஆத்தூர் யூனியனில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நீர் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது. இவ்வாறு ஏற்றப்படும் தண்ணீர் கிராம மக்களுக்கு சப்ளை தொடங்கப்படாததால் தண்ணீர் அனைத்தும் நீர் தேக்க தொட்டி நிரம்பி வழிந்து கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் தினமும் வீணாகிறது. ஒருபுறம் தண்ணீர் இன்றி பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி கொண்டிருக்கும் சூழலில் மறுபுறம் தங்களது கிராமத்திற்காக அமைக்கப்பட்ட காவிரி தண்ணீர் கடந்த ஒரு வாரமாக நீர் தேக்க தொட்டியில் இருந்து நிரம்பி வழிந்து ஓடி குளம் போல் தேங்கி நிற்பதை பார்த்து பொது மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் விணாகி கொண்டிருக்கும் காவிரி தண்ணீரை பொது மக்களுக்கு சப்ளை செய்ய போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    நங்கவள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு வந்து கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். #tamilnews
    நங்கவள்ளி:

    சேலம் அருகே நங்கவள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த கடன் சங்கத்தில் ரூ.5 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு கடன் சங்கத்தின் போர்டு கலைக்கப்பட்டது.

    தற்போது கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட 73 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று அவர்களுடைய வேட்பு மனுக்கள் பரீசிலனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நங்கவள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலையில் திடீரென திரண்டு வந்து கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். மேலும் வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது:-

    கடன் சங்கத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் கணக்கில் 12 கோடி ரூபாயிக்கு மேல் டெபாசிட் செய்துள்ளனர். தற்போது தேர்தல் நடத்தி நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே ஊழல் நடந்ததால் போர்டு கலைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஊழல் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன? உத்தரவாதம் இருக்கிறது. ஆகவே டெபாசிட் தொகையை கொடுத்து விட்டு தேர்தல் நடத்துங்கள். இல்லையென்றால் தேர்தலை நடத்த விடமாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    சென்னை-ராமேசுவரம் இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் சிவகங்கை வட்ட அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
    சிவகங்கை:

    சிவகங்கை வட்ட அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கக்கூட்டம், அதன் தலைவர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் இக்னேசியஸ் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். இந்த கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் மெய்யப்பன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் வடிவேலு, வட்ட பொருளாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், மாதந்தோறும் மருத்துவ படி ரூ.1,000 வழங்க வேண்டும், பண்டிகை முன்பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், விவசாயிகளின் கடனை ரத்துசெய்ய வேண்டும், மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக தொண்டிக்கு அகல ரெயில் பாதை அமைக்க வேண்டும், சென்னை-ராமேசுவரம் இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கருப்பையா நன்றி கூறினார்.

    அருப்புக்கோட்டையில் இருந்து பாலையம்பட்டி வழியாக கட்டங்குடி சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டையில் இருந்து பாலையம்பட்டி வழியாக செல்லும் கட்டங்குடி சாலை, பொய்யாங்குளம், தொட்டியான்குளம், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம், தொழிற்பயிற்சி கல்லூரி, நூற்பாலை மில்கள் உள்ளது.

    இந்த சாலை வழியாக தான் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    இந்த மினி பஸ் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    ஊத்துக்கோட்டை அருகே சேதமடைந்துள்ள சிற்றம்பாக்கம் தடுப்பணை கரைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றபாக்கம் பகுதியில் 1983-ம் ஆண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே 480 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு அணை கட்டப்பட்டது. 10 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சேமித்து வைக்கும் தண்ணீரை தேவைப்படும்போது கிருஷ்ணா நதி கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு திறந்து விடுவது வழக்கம்.

    வெள்ளம் ஏற்பட்டால் உபரிநீர் ஆரணி ஆற்றில் பாய்ந்து செல்லும். உபரி நீர் தானாக ஆற்றில் பாய்வதால் தடுப்பு அணைக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க 480 மீட்டர் தூரத்துக்கு கரைகள் அமைக்கப்பட்டது.

    கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பேய் மழைக்கு ஆரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதில் தடுப்பு அணைக்கு ஒட்டி அமைக்கப்பட்ட கரைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    இதையடுத்து 2016-ம் ஆண்டு ரூ.1 கோடி செலவில் பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு கரைகள் சீரமைக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பு அணை முழுவதுமாக நிரம்பியது. இதனால் உபரி நீர் ஆரணி ஆற்றில் பாய்ந்தது.

    தண்ணீர் கரை புரண்டு ஓடியதால் தடுப்பு அணைக்கு ஒட்டி உள்ள கரைகள் மீண்டும் சேதமடைந்து உள்ளன. இது இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.

    கோடை வெயில் காரணமாக தடுப்பு அணை தற்போது முழுவதும் வறண்டு காணப்படுகிறது. எனவே இப்போது கரைகளை சீர்செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


    ×