search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery caviar collective"

    திண்டுக்கல் அருகே கிராமத்திற்காக அமைக்கப்பட்ட காவிரி தண்ணீர் கடந்த ஒரு வாரமாக நீர் தேக்க தொட்டியில் இருந்து வீணாக வெளியேறுவதை தடுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகே ஆத்தூர் யூனியனுக்குட்பட்ட காந்தி கிராமம், அம்பாத்துரை, தொப்பம்பட்டி, செட்டியப்பட்டி, கலிக்கம்பட்டி, ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் மற்றும் அதன் குக்கிராமங்களில் கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.

    எனவே ஆத்தூர் யூனியனில் உள்ள 22 கிராம ஊராட்சி பகுதிகளுக்கும் காவிரியில் கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக பணி நடைபெற்று முடிந்து உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் காவிரி தண்ணீரை சேமித்து வைத்து சப்ளை செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த வாரம் இந்த காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணியில் சேர்க்கப்பட்ட காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்திற்கு தினசரி 4 லட்சம் தண்ணீர் வழங்கும் ஒப்பந்தம் மூலம் தண்ணீர் சப்ளை தொடங்கியது.

    ரெட்டியார்சத்திரம் அக்கரைப்பட்டி நிர் உந்து நிலையத்தில் இருந்து ஆத்தூர் ஒன்றிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்க தொட்டிகளுக்கும் இறுதியாக காந்திகிராம பல்கலைக் கழகத்தில் உள்ள நீர் தேக்க தொட்டிக்கும் தண்ணீர் செல்வது போல் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு தண்ணீர் நாள் முழுவதும் திறக்கப்படும் போது ஆத்தூர் யூனியனில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நீர் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது. இவ்வாறு ஏற்றப்படும் தண்ணீர் கிராம மக்களுக்கு சப்ளை தொடங்கப்படாததால் தண்ணீர் அனைத்தும் நீர் தேக்க தொட்டி நிரம்பி வழிந்து கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் தினமும் வீணாகிறது. ஒருபுறம் தண்ணீர் இன்றி பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி கொண்டிருக்கும் சூழலில் மறுபுறம் தங்களது கிராமத்திற்காக அமைக்கப்பட்ட காவிரி தண்ணீர் கடந்த ஒரு வாரமாக நீர் தேக்க தொட்டியில் இருந்து நிரம்பி வழிந்து ஓடி குளம் போல் தேங்கி நிற்பதை பார்த்து பொது மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் விணாகி கொண்டிருக்கும் காவிரி தண்ணீரை பொது மக்களுக்கு சப்ளை செய்ய போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    ×