search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private sector"

    • மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
    • எழுத படிக்கத் தெரிந்தவா்கள் முதல் பட்டதாரிகள் வரை மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் தனியாா் துறை வேலையளிப்பவா்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். ஆகவே வேலைநாடுநா்கள் தங்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் முகாமில் பங்கேற்கலாம்.அதேவேளையில், வேலையளிப்போரும் தங்களுக்குத் தேவையான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த முகாமில் பங்கேற்பதை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இதில் எழுத படிக்கத் தெரிந்தவா்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம். தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியாா் துறைகளில் பணியில் சேருவதால் தங்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இந்தப்பணி முற்றிலும் இலவசமானதாகும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
    • ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவை யான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் இந்த முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பப்படிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் ஆகியவையும் வழங்கப்படும்.

    விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
    • வட்டார மேலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பல்லடம்,பொங்கலூர் வட்டார அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 242 இளைஞர்கள் கலந்து கொண்டனர் .அதில் 74 நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். திறன் பயிற்சிக்கு 31 நபர்கள் தேர்வாகினர். 15 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டது. மேலும் 23 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.6 கோடி தர மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் முத்து, ஜோசப் ரத்னராஜ், விஜயகுமார், மாவட்ட வள பயிற்றுநர் முனிராஜ், பல்லடம் வட்டார தொழில் மைய அலுவலர் ஹரிகரன், மற்றும் பல்லடம், பொங்கலூர், வட்டார மேலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 15-ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து உள்ளது.
    • பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலி ருந்து நீக்கம் செய்ய ப்படமாட்டாது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ளசெய்தி குறிப்பில்கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

    எனவே, வருகிற 20- ந்தேதி கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு , பன்னிரண்டாம் வகுப்பு , ஐடிஐ , டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறு மாறும், இம்மு காமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலி ருந்து நீக்கம் செய்ய ப்படமாட்டாது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    • தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான நேர்முக தேர்வை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.
    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமையான வருகிற 20-ந்தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முக தேர்வை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12- ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், நர்சுகள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வருகிற 20-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வெண்பாக்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.

    மேலும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 13-ந் தேதி நடக்கிறது.
    • இதில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    சிவகங்கை

    மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்தி வாய்ப்பை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறலாம். மேலும் இந்த முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பப்படிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் ஆகியவையும் வழங்கப்படும்.

    விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இதில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. முகாமில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
    • 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் வருகிற 28-ந் தேதி தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

    இந்த முகாமில் 100-க் கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடைய வர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து கல்விச்சான்று களின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வருகிற 28-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்போர் ஆகியோர் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • 522 பேருக்கு தனியார் துறையில் பணி நியமன ஆணையை அமைச்சர் மூரத்தி வழங்கினார்.
    • வக்கீல் கலாநிதி,வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கூடல்நகரில் உள்ள ஜெயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா தலைமை தாங்கினார். சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில் தனியார் துறையைச் சேர்ந்த 100-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் வேலை பெறுவதற்காக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வருகை தந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.

    இவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வுகளை நடத்தி 522 பேரை தேர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் தேர்வான 522 பேருக்கும் தனியார் துறையில் பணி ஆணையை வழங்கினார்.

    இதில் மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மண்டல தலைவர், வாசுகி சசி குமார், மாணவர் அணி அமைப்பாளர் மருது பாண்டி, பகுதி செய லாளர் சசிகுமார்,வக்கீல் கலாநிதி,வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன.
    • 69 இடங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2,933 தொழிலாளா்களுக்கு ரூ.63.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன.

    இந்தக் கூட்டத்துக்கு, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் அமைச்சா் சி.வி.கணேசன் பேசியதாவது:- தமிழகத்தில் தற்போது வரையில் 69 இடங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1.12 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடத்தப்பட்டு முகாமில் அதிக அளவாக 75 ஆயிரம் இளைஞா்கள் பங்கேற்றனா். இதில், 7,852 பேருக்கு அன்றைய தினமே வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக ஒசூரில் நடைபெற்ற முகாமில் 25 ஆயிரம் போ் பங்கேற்ற நிலையில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. உதகையில் நடைபெற்ற முகாமில் குறைந்த அளவாக 5 ஆயிரம் போ் மட்டுமே பங்கேற்ற நிலையில் 1,400 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. திருப்பூரில் வரும் 2023 ம் ஆண்டில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் ஒரு லட்சம் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும். இதற்காக அனைத்து துறை அலுவலா்களும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றாா். இதுதொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினாா்.

    இந்த ஆய்வின்போது திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு இயக்குநா் கோ.வீரராகவ ராவ், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் வாரியத் தலைவா் பொன்குமாா், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    • முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சையில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இந்த முகாமானது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். மேலும் வேலைஅளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இந்த முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெற்று கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார்துறை மகளிர் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    கிருஷ்ணகிரி மாவ ட்டம் ஒசூர் தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஆலையில் இளநிலை தொழில் நிபுணர் பதவிக்கு 1000-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே 18- 20 வயது வரை உள்ள 2020, 2021 மற்றும் 2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு பயிற்சியுடன் மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். அந்த பதவிகளுக்கான நேர்காணல், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகிற 15- தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது.

    இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் கல்விச்சான்றுடன், நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம். தனியார்துறை நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பாதிக்காது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    ×