search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private schools"

    அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNGovtSchools #Sengottaiyan
    காஞ்சிபுரம்:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலையில் காஞ்சிபுரம் வந்தார். அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்ற அவர் விஜயேந்திரரை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து வழக்கருத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார்.

    பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-


    முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றி வருவதன் மூலம் அனைத்து துறைகளும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கை, நடந்த நிவாரணப் பணிகள் பாராட்டும்படி இருந்தன. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.

    அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களின் பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி ஆசை இதன் மூலம் நிறைவேறும்.

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNGovtSchools #Sengottaiyan
    உயர்கல்விக்கு பிளஸ்-1 தேர்வு மார்க் தேவையில்லை என்ற அரசின் முடிவால் பிளஸ்-1 பாட திட்டத்தை தனியார் பள்ளிகள் மீண்டும் கை கழுவும் சூழ்நிலை ஏற்படும் என்று சில ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன.
    சென்னை:

    பிளஸ்-2 முடித்த பிறகு கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் அங்கு முதல் வருட பாடத்திட்டத்தை கையாள்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    மேலும் மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவு தேர்விலும் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.

    பிளஸ்-1 பாட திட்டத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள் நடத்தாமல் புறக்கணித்து விட்டு அதிக தேர்ச்சிக்காக பிளஸ்-2 பாட திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததே காரணம் என தெரிய வந்தது.

    அதை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 தேர்வை பொது தேர்வாக அரசு அறிவித்தது. மேலும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மதிப்பெண்கள் சேர்த்து ஒரே மதிப்பெண் சான்றிதழாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வு அரசு பொது தேர்வாக நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிப்புக்கு தலா 600 மதிப்பெண் வீதம் தனித்தனியாக மார்க் சான்றிதழ் வழங்கப்படும்.

    மேலும் உயர்கல்வியில் சேர பிளஸ்-2 மதிப்பெண் மட்டுமே போதுமானது என்றார். தற்போதைய திட்டத்தினால் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதாகவும், பாடங்களை சரிவர படிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

    எனவே உயர்கல்வியில் சேர பிளஸ்-2 மதிப்பெண் மட்டுமே போதுமானது என உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

    இதற்கு சில ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அரசின் இத்தகைய முடிவால் பிளஸ்-1 பாட திட்டத்தை தனியார் பள்ளிகள் மீண்டும் கை கழுவும் சூழ்நிலை ஏற்படும்.

    அரசு பள்ளிகளை தவிர தனியார் பள்ளிகள் பிளஸ்-1 பாடத்திட்டத்தை விட பிளஸ்-2 பாடத்திட்டத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். ஏனெனில் பிளஸ்-2 தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் காட்டுவதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

    அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் எப்போதும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கு சமமான முக்கியத்துவம் அளித்து வந்தனர். ஆனால் தனியார் பள்ளிகள் பிளஸ்-1 பாடத்தை தவிர்த்து விட்டு பிளஸ்-2 தேர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தனர். இதனால் அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேரும் நிலை இருந்தது என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.

    மேலும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிலும் சேர்ந்து பயிற்சி பெற்று போட்டி தேர்வுகளில் பங்கேற்கிறார்கள். அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடங்களின் வழியே தான் போட்டி தேர்வுக்கான பயிற்சியை பெற முடியும்.

    இந்த சூழ்நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படும் போது மாணவர்களால் நல்ல ஊக்கத்துடன் படிக்க இயலாது என்றும் அவர் கூறினார்.

    இருந்த போதிலும் அரசின் தற்போதைய முடிவை தனியார் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர். உயர் கல்வியில் சேர 1200-க்கு பதிலாக 600 மதிப்பெண் சான்றிதழே போதுமானது என்ற அரசின் அறிவிப்பு மாணவர்களின் மனச்சுமையை பெரிதளவு குறைக்கும் என தெரிவித்துள்ளனர். #Plus1 #Plus2 #TNMinister #Sengottaiyan
    அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. #Plastic #PlasticBan
    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அரசின் இந்த உத்தரவின் படி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு ஜனவரி 1-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

    இந்தநிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-


    அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளிவளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Plastic #PlasticBan
    தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாரால் பொன்னேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட மாணவர்களின் பெற்றோரிடம் 4 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ஏழை மாணவர்களுக்கு அரசு உத்தரவுப்படி 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை எனவும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து தமிழ்நாடு மெட்ரிக் பள்ளித்துறை ஆய்வாளர் அருள்செல்வம், உதவி ஆய்வாளர் பல்லவ செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அரசு விதிமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து சென்றனர். இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறும் போது, ‘பல்வேறு தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை நடைபெற்று வருகிறது.

    கண் துடைப்புக்காக அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதி கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

    இனி வரும் காலங்களில் ஏழை-நடுத்தர மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விதிமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிககை எடுக்க வேண்டும்’ என்றனர்.
    ×