search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "patrolling"

    • பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் போலீசார் தொண்டநந்தல் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
    • சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மேட்டு தெருவை சேர்ந்த கோலஸ் மனைவி ரீத்தாமேரி(38) என்பவரை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் போலீசார் தொண்டநந்தல் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மேட்டு தெருவை சேர்ந்த கோலஸ் மனைவி ரீத்தாமேரி(38) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் ஊராங்காணி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் ஊராங்காணி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை அருகே தும்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினகரன்(வயது23) என்பவர் சாராயம் விற்றார். உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தேவபாண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவி (45) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் தேவபாண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவி (45) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், ரவியை கைது செய்து அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் கீழ்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (20) என்பவர் சாராயம் விற்று கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • மணல் கொள்ளையர்கள் போலீஸை கண்டதும் மாட்டுவண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.
    • மலட்டாறு வாய்க்காலில் அனுமதி இன்றி மர்ம நபர்கள் 3 மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் தொட்டிமேடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலட்டாறு வாய்க்காலில் அனுமதி இன்றி மர்ம நபர்கள் 3 மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது போலீசார் வருவதை கண்டவுடன் மாட்டு வண்டியை அப்படியே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். உடனே போலீசார் 3 மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். 

    • திருமருகல் அருகே ஆதலையூர் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
    • இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திரும ருகல் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமு தல் செய்தனர்.

    திருக்கண்ணபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் திருமருகல் அருகே ஆதலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.ஆதலையூர் சுடுகாடு அருகே சாராயம் விற்ற கீழசன்னாநல்லூர் பாப்பா குளத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் (வயது 28) அந்த பகுதியில் சாராயம் விற்றது தெரியவந்தது.

    மேலும் இவர் காரை க்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்துவருவது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து திருக்கண்ணபுரம் போலீ சார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ×