search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pat cummins"

    ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சக பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியில் தகவல் அனுப்பிய புகாரில் அவர் பதவி விலகி உள்ளார்.

    4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுக்காக டிம் பெய்ன் கேப்டன் பதவியை தற்போது இழந்துள்ளார். அவர் குறித்த தகவல்கள் வெளியானதால் இது இந்த முடிவை எடுத்துள்ளார்.

    ஆசஸ் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் டிம் பெய்ன் பதவி விலகி உள்ளதால் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. முதல் போட்டி வருகிற 8-ந் தேதி பிரிஸ்பனில் தொடங்குகிறது.

    மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. ஜனவரி 18-ந் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், டென்னிஸ் லில்லி, ஸ்டீவ்வாக் ஆகியோர் அவரை வெகுவாக பாராட்டி இருந்தனர்.

    இதனால் டிம் பெய்ன் இடத்தில் கம்மின்ஸ் கேப்டன் ஆகிறார். 28 வயதான அவர் ஏற்கனவே துணை கேப்டனாக பணிபுரிந்து உள்ளார். இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலிய தேர்வுகுழு புதிய கேப்டனை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    மெல்போர்ன் டெஸ்டில் 6 ரன்களுக்குள் புஜாரா, விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா ஆட்டமிழந்து 72 வருடகால மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது. 292 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. கம்மின்ஸ் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து 3-வது வீரராக களம் இறங்கிய புஜாரா (0), 4-வது வீரராக களம் இறங்கிய விராட் கோலி (0), 5-வது வீரராக களம் இறங்கிய (1) ரகானே, 6-வது வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா (5) ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ரோகித் சர்மாவைத் தவிர மற்ற மூன்று பேரையும் கம்மின் 6 பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வீழ்த்தினால். இதில் விராட் கோலி, ரகானேவை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.



    கடந்த 25 வருடங்களாக இப்படி 3 முதல் 6-ம் நிலை வரை களம் இறங்கும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது கிடையாது. நான்கு பேரும் சேர்ந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்ததன் மூலம் குறைவாக பெற்ற ரன்கள் என்று கடந்த 72 ஆண்டு காலமாக இருக்கும் மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர்.

    இதற்கு முன் 1946-ல் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் (3 முதல் 6 வரை) 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர். அதன்பின் தற்போதுதான் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.



    1969-ல் ஐதராபாத்தில் நியூசிலாந்திற்கு எதிராக 9 ரன்களும், 1983-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 9 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்துள்ளனர்.
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விராட் கோலி, புஜாரா, ரகானேவை சாய்த்தார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது.

    292 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஜோடியான ஹனுமா விஹாரி - மயாங்க் அகர்வால் 12-வது ஓவர்கள் தாக்குப்பிடித்தனர்.

    கம்மின்ஸ் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த புஜாரா கம்மின்ஸ் வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ரன்ஏதும் எடுக்காமல் அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் ரகானே 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்தியாவின் நட்சத்திர வீரர்களான புஜாரா, விராட் கோலி, ரகானே ஆகியோரை ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வெறும் 6 பந்தில் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் 28 ரன்கள் வரை விக்கெட் ஏதும் இழக்காத இந்தியா 32 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து வந்த ரோகித் சர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் 292 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
    மைதானத்தில் மோதல் போக்கை கடை பிடிக்க மாட்டேன் என்று விராட்கோலி கூறியதற்கு ஆஸ்திரேலிய வீரர் கும்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். #AUSvIND #Cummins #ViratKohli
    மெல்போர்ன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 20 ஓவர் தொடர் நாளை மறுநாள் (21-ந்தேதி) தொடங்குகிறது.

    இந்த தொடரில் இந்தியா- ஆஸ்திரேலிய வீரர்கள் இடையே ஆடுகளத்தில் உசுப்பேற்றி வாக்குவாதம் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    கோலியிடம் மோதல்போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருந்தால் சாதிக்கலாம் என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபெலிசிஸ் அறிவுரை வழங்கி இருந்தார்.

    விராட்கோலி இது தொடர்பாக கூறும்போது, மோதல் போக்கை தான் முதலில் கடைபிடிக்க போவதில்லை என்று கூறி இருந்தார்.

    இதற்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் கும்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். மைதானத்தில் அமைதியாக இருந்தால்தான் ஆச்சரியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    மோதல் போக்கை கடை பிடிக்க மாட்டேன் என்று விராட்கோலி தெரிவித்துள்ளார். அவர் அவ்வாறு இருந்தால்தான் ஆச்சரியம். அவர் சிறந்த போட்டியாளராக திகழ்கிறார். நாங்கள் போட்டி மனப்பான்மையோடு ஆடுவோம்.

    கோலியை வித்தியாசமாக கருத மாட்டோம். இதற்கு முன்பு நேரிட்டதுபோல் எதுவுமே நடக்காது. எங்கள் டெஸ்ட் அணி ஒன்று கூடியதும், எப்படி விளையாடுவது, தனி நபர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதற்காகவே இருக்கும்.

    இவ்வாறு கும்மின்ஸ் கூறியுள்ளார். #Cummins #ViratKohli
    விராட் கோலியால் ஆஸ்திரேலியா தொடரில் ஒரு சதம் கூட அடிக்க முடியாது என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். #AUSvIND #ViratKohli
    இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் ஸ்மித், வார்னர் ஓராண்டு தடையால் விளையாட முடியாது. அதேவேளையில் விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சரியான கலவையில் இருப்பதால் இந்த முறை தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், நாதன் லயன் கூட்டணியுடன் பந்து வீசி வரும் வேகப்பந்து வந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், இந்த முறை விராட் கோலியால் ஒரு சதம் கூட அடிக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘என்னுடைய தைரியமான, போல்டான கணிப்பு என்னவென்றால், விராட் கோலியால் இந்த முறை ஒரு சதம் கூட அடிக்க இயலாது என்பதுதான். அவர்களை எதிர்கொண்டு துவம்சம் செய்ய தயாராகி வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.



    விராட் கோலி 2014-15 சீசனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான்கு சதங்கள் விளாசினார். நான்கு டெஸ்டில் 692 ரன்கள் குவித்தார். சராசரி 86.50 ஆகும். அதேவேளையில் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது மூன்று டெஸ்டில் 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.  
    ×