search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OnePlus"

    • ஒன்பிளஸ் நிறுவனம் லேப்ஸ் கம்யூனிட்டி ரிவ்யூ விண்ணப்ப முறையை சமீபத்தில் துவங்கியது.
    • ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2R மாடல் ஜூலை 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்த நார்டு ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு பட்ஸ் 2R மாடல் ஜூலை 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    டீசரில் ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. டீசரில் ஃபாஸ்ட் அன்ட் ஸ்மூத் (Fast and Smooth) எனும் வாசகம் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் தான் ஒன்பிளஸ் நிறுவனம் லேப்ஸ் கம்யூனிட்டி ரிவ்யூ விண்ணப்ப முறையை துவங்கியது. இதில் தேர்வு செய்யப்படுவோர் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனினை பயன்படுத்தி, அதனை ரிவ்யூ செய்ய முடியும்.

     

    இதுதவிர ஒன்பிளஸ் வலைதளத்தில் பிரத்யேக போட்டிகள் நடத்தப்படுகின்றன. நேற்று (ஜூன் 23) துவங்கிய சிறப்பு போட்டிகள் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அந்த வகையில் புதிய நார்டு பட்ஸ் 2R மாடல் அறிமுகமாகும் ஜூலை 5-ம் தேதியே புதிய நார்டு 3 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம்.

    டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் அலர்ட் ஸ்லைடர் வழங்கப்படும் என்றும் கிரீன் நிறத்தில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெளியான ரென்டர்களில் இந்த ஸ்மார்ட்போன் கிரே நிறம் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதுதவிர புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்கள் ஒன்பிளஸ் ஏஸ் 2V மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஏஸ் 2V ஸ்மார்ட்போன் மாடலை சமீபத்தில் தான் சீன சந்தையில் அறிமுகம் செய்தது.

    மற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே, இந்த மாடலும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதுதவிர ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபில் போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றி ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரென்டர்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ரென்டர்களின் படி ஒன்பிளஸ் V ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஹேசில்பிலாடு பிரான்டிங், அலர்ட் ஸ்லைடர், லெதர் போன்ற ஃபினிஷ் மற்றும் கிளாஸ் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. ரென்டர்களில் ஆன்டெனா பேன்ட்கள் காணப்படுவதால், இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

     

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள், பெரும்பாலும் பெரிஸ்கோப் கேமரா சேர்த்து வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் கேமரா பம்ப் பேக் பேனலின் மத்தியிலும், எல்இடி ஃபிளாஷ் வலதுபுற ஓரத்திலும் காணப்படுகிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பவர் பட்டனிலேயே பொருத்தப்பட்டு இருக்கிறது.

    வெளிப்புற டிஸ்ப்ளேவின் மேல்புறம் பன்ச் ஹோல் கேமரா திரையின் மத்தியல் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் திரை எந்த அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், வெளிப்புற ஸ்கிரீன் சற்றே பெரிதாக காட்சியளிக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

    Photo Courtesy: @OnLeaks @smartprix

    • ஒன்பிளஸ் நார்டு 3 மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
    • ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    நார்டு 3 மாடல் அதிகாரப்பூர்வ படங்கள், விலை, 80 வாட் சார்ஜிங் என பல்வேறு அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு 3 மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

     

    டீசரில், புதிய ஸ்மார்ட்போன் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும், போஸ்டரில், தி லேப் (The Lab) வாசகம் இடம்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் கம்யுனிட்டி ஃபோரமில் வெளியான தகவல்களின் படி நார்டு 3 மாடல் இந்தியா, ஐரோப்பா மற்றும் APAC பகுதிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    முன்னதாக தி லேப் வாசகம், ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T சாதனங்களின் வெளியீட்டுகளுக்கு பயன்படுத்தியது. ஒன்பிளஸ் கம்யுனிட்டிக்குள் தி லேப் வாசகம் வெற்றிகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நார்டு 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 2770x1240 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    • நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
    • பாப்-அப் எக்ஸ்பீரியன்ஸ் அவுட்லெட் போன்று இந்த பேருந்துகள் செயல்பட இருக்கின்றன.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போனினை இந்தியா கொண்டுவந்துள்ளது. 2023 சர்தேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஒன்பிளஸ் 11 கான்செப்ட் மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய அதிநவீன கூலிங் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தும் நோக்கில் ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் உருவாக்கப்பட்டுஇருக்கிறது.

    புதிய கூலிங் தொழில்நுட்பத்தை ஒன்பிளஸ் நிறுவனம் ஆக்டிவ் க்ரியோஃபிளக்ஸ் தொழில்நுட்பம் (Active CryoFlux technology) என்று அழைக்கிறது. இதன் திறன்கள் குறித்து ஒன்பிளஸ் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. ஆனால் ஸ்மார்ட்போனினை கையில் வைத்திருக்கும் போது, பின்புற பேனலில் சிறிய பைப்லைனில் நீல நிற திரவம் ஓடுவதை பார்க்க முடியும்.

    டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது. ஒன்பிளஸ் ரோட் ட்ரிப் நிகழ்ச்சியின் அங்கமாக இது நடத்தப்பட்டது. இதன் மூலம் ஒன்பிளஸ் பிராண்டு மற்றும் ரசிகர்கள் இடையே உறவை மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 32 அடி நீளமுள்ள இரண்டு பேருந்துகள், நாட்டின் 25 நகரங்களை சற்றி பயணம் செய்ய இருக்கிறது.

    பாப்-அப் எக்ஸ்பீரியன்ஸ் அவுட்லெட் போன்று இந்த பேருந்துகள் செயல்பட இருக்கின்றன. ஒன்பிளஸ் 11 சீரிஸ், ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட், ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2, ஒன்பிளஸ் கீபோர்டு ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் மானிட்டர் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும். ஒன்பிளஸ் பாப் அப் எக்ஸ்பீரியன்ஸ் பேருந்து - சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோ, கோயம்புத்தூர், சென்னை, பூனே, கொச்சி மற்றும் பல்வேறு நகரங்களில் பயணம் செய்ய இருக்கிறது.

     

     

    ஒன்பிளஸ் புதிய கூலிங் தொழில்நுட்பம் 2.1 டிகிரி வரை வெப்பத்தை குறைக்கும் என்பதால், பயனர்கள் தடையின்றி கேமிங் செய்ய முடியும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கேம்களின் ஃபிரேம் ரேட் 3 முதல் 4fps வரை அதிகரிக்கும். மேலும் இந்த கூலிங் தொழில்நுட்பம் ஃபாஸ்ட் சார்ஜிங்கின் போதும் உதவுகிறது.

    டெல்லி நிகழ்வின் போது ஒன்பிளஸ் தனது ஒன்பிளஸ் 5ஜி ஸ்கெட்ச்பாட் பற்றி விளக்கம் அளித்து இருக்கிறது. இதில் ரோபோடிக் கை இடம்பெற்று இருக்கிறது. 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் இது எளிதில் படங்களை வரையும். பயணத்தின் போது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில் ஒன்பிளஸ் நிறுவனம் சிறு போட்டிகள் நடத்தி வெற்றி பெறுவோருக்கு ஒன்பிளஸ் பட்ஸ் Z2 மாடலை பரிசாக வழங்குகிறது.

    • ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனிற்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் கூப்பன் வடிவில் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், அதிவேக 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை இதன் அம்சங்கள் ஆகும். இந்திய சந்தையில் ரூ. 38 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 10R மாடல், ஸ்மார்ட்போன் வல்லுனர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்த நிலையில், ஒன்பிளஸ் 10R வாங்க நினைத்தோர், தற்போது இந்த மாடலை வாங்க நல்ல தருணம் உருவாகி இருக்கிறது. ஒன்பிளஸ் கம்யுனிட்டி சேல் எனும் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனிற்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சலுகை விவரங்கள்:

    ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இத்துடன் ஒன்பிளஸ் 10R எண்டூரன்ஸ் எடிஷன் ரூ. 43 அயிரத்து 999 விலையில் விற்பனைக்கு வந்தது.

    தற்போது கம்யுனிட்டி சேல் விற்பனையின் கீழ் ஒன்பிளஸ் 10R மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் கூப்பன் வடிவில் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஐசிஐசிஐ மற்றும் ஒன் மெட்டல் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்த சலுகைகளை தொடர்ந்து ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் ரூ. 32 ஆயிரத்து 999-க்கு வாங்கிட முடியும்.

    ஒன்பிளஸ் 10R அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 10R மாடலில் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR 10+, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் சிப்செட், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ், 5ஜி, டூயல் பேண்ட் வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சார்ஜிங் வசதி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    • தோற்றத்தில் ஒன்பிளஸ் பேட் மாடல் ஆப்பிள் ஐபேட் போன்றே காட்சியளிக்கிறது.
    • இதேபோன்ற மதிப்பெண்களை ஆப்பிள் ஐபேட் மாடலும் பெற்று இருந்தது.

    ஒன்பிளஸ் பேட் மாடல் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கண்டறியும் சோதனையை பிரபல யூடியூப் சேனல் நடத்தியது. அதில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் அனைத்து வித கடினமான சோதனைகளிலும் அசத்தி இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு டேப்லெட் சந்தையில் கிடைக்கும் சிறந்த டேப்லெட்களில் ஒன்றாக ஒன்பிளஸ் பேட் உள்ளது. சாதனங்கள் உற்பத்தியின் போதே மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக டியுரபிலிட்டி இருக்க வேண்டும். ஒன்பிளஸ் பேட் மற்றும் அதனுடன் வழங்கப்படும் ஸ்டைலோ அக்சஸரீ சமீபத்தில் ஜெர்ரிரிக்எவ்ரிதிங்கின் (JerryRigEverything) டெஸ்டில் ஈடுபடுத்தப்பட்டது.

    அதில் புதிய ஒன்பிளஸ் பேட் மாடல் பெருமளவு டெஸ்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. புதிய டேப்லெட் மாடல் அசத்தலான டியுரபிலிட்டி கொண்டிருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், இது ஒன்பிளஸ் நிறுவனம் உறுதியான சாதனங்களை உருவாக்கி வருவதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்து இருக்கிறது.

    தோற்றத்தில் ஒன்பிளஸ் பேட் மாடல் ஆப்பிள் ஐபேட் போன்றே காட்சியளிக்கிறது. டியூரபிலிட்டி டெஸ்டின் படி, ஒன்பிளஸ் பேட் மாடலின் ஸ்கிரீனை ஸ்கிராட்ச் செய்ததில் அது ஆறு மதிப்பெண்களை பெற்றது. இதேபோன்ற மதிப்பெண்கள் தான் ஆப்பிள் ஐபேட் மாடலும் பெற்று இருந்தது. ஒன்பிளஸ் பேட் மாடலின் டிஸ்ப்ளே நேரடி தீயில் காண்பிக்கப்பட்ட நிலையிலும், பத்து நொடிகள் வரை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

     

    பத்து நொடிகளை கடந்த பிறகே, அதன் பிக்சல்கள் சரியத் துவங்கின. மேலும் இவை நிரந்தரமாக சரியாமல், சிறிதுநேரத்தில் மீண்டும் பழைய நிலைக்கே சீராகிவிட்டன. IPS LCD ரக பேனல் இதுபோன்றே இருக்கும். ஒன்பிளஸ் பேட் மாடலின் ஃபிரேம் ஆர்கிடெக்ச்சர், சாதனத்தை சுற்றிலும் மெட்டல் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இத்துடன் சிறிய பிளாஸ்டிக் பகுதி ஸ்டைலோவின் வயர்லெஸ் சார்ஜிங்கிற்காக வழங்கப்பட்டு இருக்கிறது.

    வளைத்து பார்க்கப்படும் பெண்டு டெஸ்ட் (Bend Test) சோதனையில் ஒன்பிளஸ் பேட் மாடல் அதிக உறுதியாக இருந்ததோடு, ஓரளவுக்கு தான் சிதைந்தது. டேப்லெட்-இன் பின்புறத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்த பிறகு தான் ஃபிரேம் மடிந்தது. எனினும், டிஸ்ப்ளேவுக்கு அதிக சேதங்கள் ஏற்படவில்லை. மாறாக வெளியிலும் வரவில்லை. பல்வேறு ஐபேட் மாடல்கள் இந்த சோதனையில் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     

    ஒன்பிளஸ் ஸ்டைலோ மாடல் பெண்டு டெஸ்டை எதிர்கொள்ளும் போது நிலைத்திருக்கவில்லை. இதன் உள்புறம் 82 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் பிரெஷர் சென்சிங்கிற்காக காப்பர் பேட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டைலோவில் உள்ள காந்த பொருள், டேப்லெட்டுன் இணைந்திருக்க செய்கிறது.

    ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் பேட் மாடல் டியூரபிலிட்டி டெஸ்டின் பல்வேறு நிலைகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று அசத்தியது. ஆப்பிள் ஐபேட் மாடலுடன் ஒப்பிடும் போதும், இந்த டேப்லெட் அதன் உறுதித்தன்மை விவகாரத்தில் சிறந்து விளங்குவது தெரியவந்துள்ளது.

    • ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் இணைத்தில் வெளியாகி உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மாடல் உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான நார்டு 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக நார்டு 3 ஸ்மார்ட்போன் உருவாகி இருக்கிறது. புதிய நார்டு 3 மாடல் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு 3 வெளியீடு, விலை பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

    இந்த வரிசையில், டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் நார்டு 3 அம்சங்கள், இந்திய வெளியீடு மற்றும் விலை விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர நார்டு 3 ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஏஸ் 2V போன்றே காட்சியளிக்கிறது.

     

    ஒன்பிளஸ் நார்டு 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.74 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட பன்ச் ஹோல் டிஸ்ப்ளே

    மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர்

    12 ஜிபி, 16 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ்

    50MP பிரைமரி கேமரா

    8MP இரண்டாவது லென்ஸ்

    2MP மூன்றாவது கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்டு 3 மாடலின் விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதன் வெளியீடு ஜூன் மாத வாக்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    • ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நார்டு 3 பெயர் இடம்பெற்று இருக்கிறது.
    • புதிய நார்டு 3 ஸ்மார்ட்போன் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று தகவல்.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், புதிய நார்டு 3 ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

    பிரபல டிப்ஸ்டரான முகுல் ஷர்மா ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் பெயரை ஒன்பிளஸ் வலைதள சோர்ஸ் கோடில் பார்த்ததாக தெரிவித்து இருக்கிறார். புதிய நார்டு 3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

     

    சமீபத்தில் தான், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி நார்டு 3 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். அம்சங்களை பொருத்தவரை புதிய நார்டு 3 மாடலில் 6.7 இன்ச் Full HD+ பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 50MP சோனி IMX766 பிரைமரி கேமரா, 8MP இரண்டாவது லென்ஸ், 2MP டெரிடரி சென்சார் என மூன்று கேமரா லென்ஸ்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் அல்லது 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

    ஒன்பிளஸ் போனாக மறுபெயரிடப்படும் ஓபோ A57 ஆனது கலர்OS க்கு பதிலாக ஆக்சிஜன் OS 12.1 உடன் வரும் என கூறப்படுகிறது.
    ஓபோ A57 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் அந்த போனை ஒன்பிளஸ் நிறுவனம் மறுபெயரிட்டு குறிப்பிட்ட சந்தைகளில் குறைந்த விலையில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஓபோ A57 OnePlus பிராண்டிங்கின் கீழ் FCC சான்றிதழைப் பெற்றுள்ளது, இது தோற்றத்தில் ஒன்பிளஸ் போனைப் போல இருந்தாலும் அதன் உட்புறத்தில் சில மாற்றங்களை செய்து வெளியிட ஒன்பிளஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

    oppo

    ஒன்பிளஸ் போனாக மறுபெயரிடப்படும் ஓபோ A57 ஆனது கலர்OS க்கு பதிலாக ஆக்சிஜன் OS 12.1 உடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் இது 5000mAh பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அந்த ஸ்மார்ட்போன் ஓபோவுக்கு பதிலாக ஒன்பிளஸ் லோகோவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் வாய்ப்புகள் உள்ளன.

    ஓபோ A57-ன் விலை ரூ.13,500 ஆக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மறுபெயரிடப்பட்டு வெளியிடப்பட உள்ள ஒன்பிளஸ் போனும் கிட்டத்தட்ட அதே விலையில், அதாவது ரூ.15 ஆயிரத்துக்கும் கீழ் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு சீரிஸாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனம் 8T எனும் ஃபிளாக்‌ஷிப் போனை கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது அந்த போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி அந்த போன் தற்போது ரூ. 28,999-க்கு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் விற்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் அறிமுகமான புதிதில் அதன் விலை ரூ.42,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து 4 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.38,999 க்கு விற்பபை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் விலை மேலும் ரூ.10 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ.28,999-க்கே கிடைக்கிறது.

    oneplus

    அதன்படி 8 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி உடன் கூடிய ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட் போன் ரூ.28,999-க்கும், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி உடன் கூடிய மாடல் ரூ.31,999-க்கும் கிடைக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் லூனார் சில்வர் மற்றும் ஆக்வாமெரைன் கிரீன் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8T ஆனது முதன்மையான குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்டையும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,500 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. பின்புறம் குவாட் கேமரா அமைப்பை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இது 30 ஆயிரத்திற்கும் கீழ் கிடைப்பது நல்ல ஆஃபராக பார்க்கப்படுகிறது.
    விரைவில் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை ஒன்பிளஸ் வெளியிடும் என கூறப்பட்டு வந்தது. ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு 2022ம் ஆண்டு பிசியான ஆண்டாக இருந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு அந்த நிறுவனம் தொடர்சசியாக போன்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதுவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ, 10R ரேஸிங் எடிசன், நார்டு 2T, நார்டு CE 2 லைட் ஆகிய மாடல்கள் இந்த ஆண்டு இதுவரை வெளியிடப்பட்டு உள்ளன.

    அடுத்ததாக அந்நிறுவனம் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை வெளியிடும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலாக ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு வெளியாகும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்‌ஷிப் போனாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் கேமராக்களைப் பொறுத்தவரை எந்தவித மாற்றமும் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப் மற்றும் 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இத்துடன் LDRR5 ரேம், UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். உடன் வரலாம். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த போன் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி திறனுடன் இந்த போன் இருக்கும் என கூறப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் வேறு பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் இம்மாத துவக்கத்தில் தனது ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போன் 150W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டு, இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒன்பிளஸ் 10R பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் 10R லைட் ஸ்மார்ட்போன் விவரங்கள் இந்திய IMEI டேட்டாபேஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் PGZ110 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விரைவில் ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். 

     ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன்

    ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் அல்லது ஒன்பிளஸ் 10R லைட் மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் மாடலில் 6.59 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், மாலி G10 MC6 GPU, 8GB /12GB ரேம், 128GB / 256GB மெமரி, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஓ.எஸ். போன்ற அம்சங்கள் உள்ளன.
    ×