search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஒன்பிளஸ் 10R விலை இவ்வளவு தானா? அசத்தல் சலுகை அறிவிப்பு!
    X

    ஒன்பிளஸ் 10R விலை இவ்வளவு தானா? அசத்தல் சலுகை அறிவிப்பு!

    • ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனிற்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் கூப்பன் வடிவில் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், அதிவேக 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை இதன் அம்சங்கள் ஆகும். இந்திய சந்தையில் ரூ. 38 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 10R மாடல், ஸ்மார்ட்போன் வல்லுனர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்த நிலையில், ஒன்பிளஸ் 10R வாங்க நினைத்தோர், தற்போது இந்த மாடலை வாங்க நல்ல தருணம் உருவாகி இருக்கிறது. ஒன்பிளஸ் கம்யுனிட்டி சேல் எனும் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனிற்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சலுகை விவரங்கள்:

    ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இத்துடன் ஒன்பிளஸ் 10R எண்டூரன்ஸ் எடிஷன் ரூ. 43 அயிரத்து 999 விலையில் விற்பனைக்கு வந்தது.

    தற்போது கம்யுனிட்டி சேல் விற்பனையின் கீழ் ஒன்பிளஸ் 10R மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் கூப்பன் வடிவில் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஐசிஐசிஐ மற்றும் ஒன் மெட்டல் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்த சலுகைகளை தொடர்ந்து ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் ரூ. 32 ஆயிரத்து 999-க்கு வாங்கிட முடியும்.

    ஒன்பிளஸ் 10R அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 10R மாடலில் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR 10+, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் சிப்செட், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ், 5ஜி, டூயல் பேண்ட் வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சார்ஜிங் வசதி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    Next Story
    ×