என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஜூலையில் இந்தியா வரும் ஒன்பிளஸ் நார்டு  3 - அசத்தல் டீசர் வெளியானது
    X

    ஜூலையில் இந்தியா வரும் ஒன்பிளஸ் நார்டு 3 - அசத்தல் டீசர் வெளியானது

    • ஒன்பிளஸ் நிறுவனம் லேப்ஸ் கம்யூனிட்டி ரிவ்யூ விண்ணப்ப முறையை சமீபத்தில் துவங்கியது.
    • ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2R மாடல் ஜூலை 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்த நார்டு ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு பட்ஸ் 2R மாடல் ஜூலை 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    டீசரில் ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. டீசரில் ஃபாஸ்ட் அன்ட் ஸ்மூத் (Fast and Smooth) எனும் வாசகம் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் தான் ஒன்பிளஸ் நிறுவனம் லேப்ஸ் கம்யூனிட்டி ரிவ்யூ விண்ணப்ப முறையை துவங்கியது. இதில் தேர்வு செய்யப்படுவோர் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனினை பயன்படுத்தி, அதனை ரிவ்யூ செய்ய முடியும்.

    இதுதவிர ஒன்பிளஸ் வலைதளத்தில் பிரத்யேக போட்டிகள் நடத்தப்படுகின்றன. நேற்று (ஜூன் 23) துவங்கிய சிறப்பு போட்டிகள் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அந்த வகையில் புதிய நார்டு பட்ஸ் 2R மாடல் அறிமுகமாகும் ஜூலை 5-ம் தேதியே புதிய நார்டு 3 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம்.

    டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் அலர்ட் ஸ்லைடர் வழங்கப்படும் என்றும் கிரீன் நிறத்தில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெளியான ரென்டர்களில் இந்த ஸ்மார்ட்போன் கிரே நிறம் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதுதவிர புதிய ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்கள் ஒன்பிளஸ் ஏஸ் 2V மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஏஸ் 2V ஸ்மார்ட்போன் மாடலை சமீபத்தில் தான் சீன சந்தையில் அறிமுகம் செய்தது.

    மற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே, இந்த மாடலும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதுதவிர ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×