search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officer Inspection"

    • சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன், காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம், தேவகோட்டை யூனியன், கண்ணங்குடி யூனியன், ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா, கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருப்புவனம் அரசு மருத்துவமனை மற்றும் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய வற்றில் புற நோயாளிகள் பிரிவு, தாய்-சேய் நலப்பி ரிவு, மருந்தகம், மருந்துகளின் இருப்பு மற்றும் பராமரிப்புப் பதிவேடு, தேவையான மருந்துகளின் எண்ணிக்கை மற்றும் ஊசிபோடும் அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவ லகத்தின் செயல்பாடுகள், தேவகோட்டை யூனியன், வீரை ஊராட்சி, கைக்குடி நடுநிலைப்பள்ளியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையல் அறைக்கூடம் மற்றும் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கண்ணங்குடி கிராமத்தில் ரூ.7.36 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியையும், கண்டியூர் ஊராட்சி, வலையன்வயல், கீழக்குடியிருப்பில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டனர்.

    • பொது மக்களிடம் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்
    • அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியில் தாசில்தார் அலுவலகத்தில் இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்தில் செயல்பாடுகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொது மக்களிடம் பொது இ- சேவை மையத்தில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், வருவாய் அலுவ லர்கள் அன்னலட்சுமி, கவுரி மண்டல துணை தாசில்தார் அரிதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • சென்னை நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.
    • இந்த ஆய்வின் போது மாவட்டத்தில் நடைபெறும் நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    சேலம்:

    சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்கா–ணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் சென்னை நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது மாவட்டத்தில் நடைபெறும் நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து சேலம் இரும்பாலை சாலையில் புதுரோடு சந்திப்பை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கப்படவுள்ள பணிக்காக சுமார் 30-க்கும் மேற்பட்ட மரங்களை அகற்ற வேண்டியுள்ளது.

    இதேபோல் சேலம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திலுள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணிகளுக்காக அவ்வப்பொழுது மரங்கள் அகற்றப்படுகிறது. அவ்வாறுஅகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக 10 மடங்கு மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகளின் ஓரங்களில் நடப்பட்டு வருகிறது.

    இதற்காக, சேலம் இரும்பாலை சாலையில் சோளம்பள்ளம் பகுதி–யில் நாற்றங்கால் அமைக்கப்பட்டு சுமார் 2000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நாற்றங்காலை சென்னை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு செய்தார். மேலும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் நடப்பட்ட மரக்கன்றுகளை பார்வையிட்டார். இதையடுத்து அந்த பகுதியில் அவரும் மரக்கன்றுகளை நட்டார்.

    ஆய்வின்போது கண்கா–ணிப்புப் பொறியாளர் பன்னீர்செல்வம், கோட்டப் பொறியாளர் துரை, உதவிக்கோட்டப் பொறியா–ளர்கள் சந்தோஷ்குமார், பிரபாகரன் பற்றும் உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது
    • பணிகள் குறித்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் எஸ்.பழனி தலைமையில் வருடாந்திர ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின் போது தீ விபத்து மற்றும் தடுப்பு பணிகளுக்கான பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது.

    குடியாத்தம் தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து இயற்கை இடற்பாடுகள் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணியின் போது கொண்டு செல்லப்படும் உபகரணங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    அந்த உபகரணங்கள் சரியானபடி உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது மேலும் தீ தடுப்பு கருவிகள் சரியான முறையில் இயங்குகின்றதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது இந்த ஆய்வின் போது குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் கே. லோகநாதன் உடன் இருந்தார்.

    முன்னதாக குடியாத்தம் தீயணைப்பு வீரர்களின் தீ தடுப்பு பணிகள் குறித்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

    • ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுகிறது
    • மாற்று பாதை அமைகிறது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் ரெயில் நிலையம் அருகே கே.பந்தாரப்பள்ளி பகுதியில் அரசனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ரெயில்வே கேட் எண் 94 நிரந்தரமாக மூடப்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பாலன் வட்டம் பொது மக்களுக்கு மாற்று பாதை வழியாக கீழ் தரைப்பாலம் அமைப்பதற்கான இடத்தை திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி நேற்று இடத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் த.குமார், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சந்தீப், உதவி கோட்ட பொறியாளர் விக்ரம் கஹானோலியா, மற்றும் பெங்களூர் கோட்டம் பாலன் வட்டம் பகுதி பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோரிக்கை மனுக்கள் அளித்தனர்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விரைவில் பவளவிழா நடைபெறுவதற்கான பல்வேறு ஏற்பாடுகள் முன்னாள் மாணவர்கள் சார்பாக செய்யப்பட்டு வருகிறது.

    விளையாட்டு மைதானத்தில் விளை யாட்டரங்கம் அமைப்பு தொடர்ச்சியாக அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோரிடம் ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து நேற்று

    மாலை, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் பாலமுருகன் பள்ளிக்கு வருகை தந்து, பள்ளி விளையாட்டு மைதானத்தையும், காலியாக உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.மேலும் விளையாட்டு மைதானத்தை மற்றும் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலுக்கு உரிய இடத்தையும் தேர்வு செய்தார்.

    இதற்கு பின்னர் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து விளக்கினார். கிராமப்புற மாணவர்கள் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற தமது ஆர்வத்தை தெரிவித்தார். பள்ளி சார்பாகவும், முன்னாள் மாணவர் சங்கம் சார்பாகவும் சால்வை அணிவித்து பாராட்டினர்.

    • பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து சோதனை
    • குடிசைகளை அகற்றி மாற்று இடம் வழங்க உத்தரவு

    வந்தவாசி:

    வந்தவாசி பகுதியில் பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து உதவி கலெக்டர் அனாமிகா ஆய்வு மேற்கொண்டார்.

    இன்னும் சில நாட்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வந்தவாசி எள்ளுப்பாறை, சவுரியார் பாளையம், பிருதூர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களை பார்வையிட்டு அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள குடிசைகளை உடனடியாக அகற்று மாறும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட்டார். மழைக்காலங்களில் குடிசைவாழ் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்தார்.

    தாசில்தார் முருகானந்தம், நகராட்சி கமிஷனர் மங்கையர்கரசன், நகரத் தலைவர் ஜலால், வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் கிருபானந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ஆய்வு அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறையிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளார்.
    • கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய நிலையில் உள்ள கோயில்களை ஆய்வு மேற்கொண்டார்.

    வெள்ளகோவில்.அக்.12-

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளக்கோயில் பகுதியில் கரூர் மற்றும் திருப்பூர் மாவட்ட தொல்லியல் துறை ஆலோசகர் அர்ச்சுனன், மிகவும் பழமையான கோவில்கள், கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய நிலையில் உள்ள கோயில்களை ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் வெள்ளகோவில் அருகே உள்ள புதுப்பை அங்காளம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் ஆய்வு அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறையிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளார்.

    • காட்டுப்புத்தூர் பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பள்ளிகள் மற்றும் அரசு அலுவவலகங்கள் ஆகியவற்றில் உள்ள கழிப்பிடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    திருச்சி :

    பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர்.ஆர்.செல்வராஜ், ஐ.ஏ.எஸ்.மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.பிரதீப்குமார், ஆகியோரின் அறிவுரைகளின்படி, திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி வார்டு எண். 15- காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள சமுதாய கழிப்பிடம் மற்றும் வார்டு எண்.06, தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள ஆண்கள் கழிப்பிடம் ஆகியவற்றை செயல்அலுவலர் ச.சாகுல் அமீதுஆய்வுமேற்கொண்டார்.

    மேலும், பேருந்துநிலையம் மற்றும் பாரதியார் தெருவில் உள்ள 2பொதுகழிப்பிடங்கள், அனைத்து வார்டுகளிலும் உள்ள 16 -சமுதாய கழிப்பிடங்கள்

    மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடம் ஆகியவற்றில் உள்ள கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை பாதுக்காப்பான முறையில் மூடிவைத்திடவும், கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை சுற்றி உள்ள இடங்களில் முட்செடிகள் மற்றும் புல்பூண்டுகளை அகற்றி சுத்தமாக வைத்து பராமரித்து பாதுகாத்திட 3 -குழுக்கள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும், காட்டுப்புத்தூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 3000-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவவலகங்கள் ஆகியவற்றில் உள்ள கழிப்பிடங்களை தூய்மையாக பராமரித்தும் மற்றும் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை (செப்டிக் டேங்க்) உரிமையாளர்கள் மூடி பாதுகாக்காவும், பழுதடைந்த நிலையில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை ஒரு வார காலத்திற்குள் சீரமைத்து பேரூராட்சி பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் போது முறையாக பராமரித்து பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க இதன்வழி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின் போது பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதா, துணைத்தலைவர் சி.சுதா, இளநிலை உதவியாளர்கள் பாரதியார், இராஜேந்திரன், துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) கண்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • விரைவாக பணிகளை முடிக்க உத்தரவு
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    போளூர், செப்.24-

    போளூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று அரசின் முதன்மைச் செயலாளர் வணிகவரி ஆணையர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலரமான தீரஜ் குமார் ஆய்வு செய்தார்.

    அப்போது பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை நிராகரிக்கப்படும் போது அதன் காரணத்தை கணினியில் பதிவு செய்கிறீர்களா இல்லையா என்று தாசில்தார் கேட்டறிந்தார்.

    அவருடன் திருவண்ணாமலை கலெக்டர் முகேஷ் மற்றும் டி ஆர் ஓ டாக்டர் பிரியதர்ஷினி ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி ஏ பி ஆர் ஓ ஆசைத்தம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.

    அதே போல் அங்கிருந்து சென்று பேரூராட்சியின் மார்க்கெட் வணிக வளாகம் கட்டும் பணியை பார்வையிட்டார். அப்போது எத்தனை கடைகள் கட்டப்படுகின்றன. இதில் எத்தனை காய் காய்கறி கடைகள் மற்றும் இதர கடைகள் எத்தனை என்று கேட்டறிந்தார் இந்த பணியை எவ்வளவு நாளில் முடிப்பீர்கள் என்றும் கேட்டிருந்தார்.

    அப்போது கலெக்டர் முகேஷ் மண்டல அலுவலர் ஜிஜா பாய், பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரஜ்வான் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், துணை தலைவர் சாந்தி நடராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார் போளூர் பேரூராட்சியின் உறுப்பினர் மல்லிகா கிருஷ்ணமூர்த்தி, ஜோதி குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • உணவின் தரம் குறித்து சோதனை
    • மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை சோதித்துப் பார்த்தார்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 661 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் சம்பத் நேற்று ஆற்காடு தோப்புக்கானா நகராட்சி வடக்கு தொடக்கப் பள்ளிக்கு சென்று உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

    பின்னர் ஆற்காடு ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம் கற்பித்தல் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை சோதித்துப் பார்த்தார்.

    இதனைத்தொடர்ந்து பொது சுகாதாரத்துறை மூலமாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வீட்டிற்குச் சென்று முறையாக மருந்துகள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறதா மருத்துவர்கள் வீட்டிற்கு வந்து பரிசோதித்த பின்னர் மருந்துகள் வழங்கப் படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.

    அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மாணவர்கள் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்
    • 134 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றியம் பெரிய கொழப்பலூர், கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 134 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு என்னும், எழுத்தும், என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்க வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதை பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், நேரில் சென்று எண்ணும், எழுத்தும், திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேள்வி கேட்டு மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு செய்தார்.

    அப்போது 1 முதல் 5 வரை திருக்குறள் வாசித்த மாணவன், மற்றும் தூய்மை, சுகாதாரம், குறித்து கேள்வி கேட்கப்பட்டு இதில் சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், உடன் இருந்தனர்.

    ×