வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேவகோட்டை அருகே உள்ள வெண்ணியூர் ஊராட்சியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தேவகோட்டை அருகே உள்ள வெண்ணியூர் ஊராட்சியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன், காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம், தேவகோட்டை யூனியன், கண்ணங்குடி யூனியன், ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா, கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருப்புவனம் அரசு மருத்துவமனை மற்றும் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய வற்றில் புற நோயாளிகள் பிரிவு, தாய்-சேய் நலப்பி ரிவு, மருந்தகம், மருந்துகளின் இருப்பு மற்றும் பராமரிப்புப் பதிவேடு, தேவையான மருந்துகளின் எண்ணிக்கை மற்றும் ஊசிபோடும் அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவ லகத்தின் செயல்பாடுகள், தேவகோட்டை யூனியன், வீரை ஊராட்சி, கைக்குடி நடுநிலைப்பள்ளியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையல் அறைக்கூடம் மற்றும் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கண்ணங்குடி கிராமத்தில் ரூ.7.36 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியையும், கண்டியூர் ஊராட்சி, வலையன்வயல், கீழக்குடியிருப்பில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com