search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ODI World Cup Cricket"

    • நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை 315 ரன்கள் குவித்தது.
    • ஜிம்பாப்வே அணி தரப்பில் சிக்கந்தர் ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஹராரே:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் ஒரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட் களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கம் அமைத்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் விக்ரம்ஜித் சிங் 88 ரன், மேக்ஸ் ஓ'டவுட் 59 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

    இதையடுத்து களம் இறங்கிய வெஸ்லி பாரேசி 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 83 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை 315 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் சிக்கந்தர் ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாட உள்ளது.

    • 2011 உலக கோப்பையில் சென்னையில் 4 லீக் ஆட்டம் நடைபெற்றது. நாக்அவுட் போட்டிகள் நடைபெறவில்லை.
    • 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் சென்னையில் ஒரு ஆட்டம் கூட ஒதுக்கப்படவில்லை.

    சென்னை:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடைசியாக 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்தது. இலங்கை, வங்காளதேசம் ஆகியவை இணைந்து நடத்தியது.

    12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடைபெறுகிறது. 13-வது உலக கோப்பை போட்டியான இதை அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே 10 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த உலக கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை வெளியாகி உள்ளது. இந்த வரைவு அட்டவணையை ஐ.சி.சி.க்கு (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அனுப்பியுள்ளது.

    அதன்படி அக்டோபர் 5-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8-ந்தேதி நடைபெறும் என்று உத்தேச அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை அகமதாபாத்தில் அக்டோபர் 15-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அணி மோதும் 2 ஆட்டங்களும் சென்னையில் நடக்கிறது. ஆப்கானிஸ்தானுடன் அக்டோபர் 23-ந்தேதியும், தென்ஆப்பிரிக்காவுடன் அக்டோபர் 27-ந்தேதியும் அந்த அணி மோதுகிறது.

    உலக கோப்பை இறுதி ஆட்டம் நவம்பர் 19-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. அரைஇறுதி ஆட்டங்கள் நவம்பர் 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடக்கிறது. ஆனால் இதற்கான இடங்கள் இன்னும் முடிவாகவில்லை.

    இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு அரைஇறுதி ஆட்டம் சென்னையில் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 15-ந்தேதி முதல் அரை இறுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    2011 உலக கோப்பையில் சென்னையில் 4 லீக் ஆட்டம் நடைபெற்றது. நாக்அவுட் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் சென்னையில் ஒரு ஆட்டம் கூட ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த உலக கோப்பையின் ஒரு அரைஇறுதியை சென்னையில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

    2-வது அரைஇறுதி ஆட்டத்தை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 0-2 என்ற கணக்கில் இலங்கை அணி தோல்வியை தழுவியது.
    • நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

    அதைத்தொடர்ந்து இந்திய மண்ணில் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற நியூசிலாந்து 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    அதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று ஹமில்டன் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 41.3 ஓவரிலேயே 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி, ஹென்றி ஷிப்லே, டார்ல் மிட்சேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 59 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் வில் எங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 86 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். அதனால் 32.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்த நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2- 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்றது.

    இந்நிலையில் இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற ஐசிசி ஒருநாள் சூப்பர் லீக் தொடரின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரில் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இலங்கை அணி இத்தொடரில் தோல்வியை சந்தித்ததால் 2023 ஒருநாள் சூப்பர் லீக் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தை பிடித்தது.

    இதனால் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்துள்ளது.

    இதன் காரணமாக 2023 அக்டோபருக்கு முன்பாக நடைபெறும் தகுதி சுற்றில் நெதர்லாந்து போன்ற கத்துக்குட்டிகளுகடன் மோதி அதில் வென்றால் மட்டுமே 2023 உலக கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

    • இந்தியா பாகிஸ்தானுக்கு வராவிட்டால் உலகக்கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    • ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம்.

    சென்னை:

    6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.

    இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

    போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என இந்திய வீரர் அஷ்வின் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்கு நாம் செல்லாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்படி நடப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆசிய கோப்பை தொடரை அங்கு நடத்தக்கூடாது என நாம் சொல்லும் போது அவர்களும் நமது இடத்துக்கு வரமாட்டோம் என்று சொல்வார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்.

    ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம். இது 50 ஓவர் உலகக்கோப்பைக்கு ஒரு முன்னிலையாக இருக்கலாம். துபாயில் பல தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×