search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்"

    • 8-ந் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.
    • இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.

    ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.

    ஐசிசி 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. இருப்பினும், அந்த தொடர் மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஆனால் இப்போது நடத்தப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியா முதல் முறையாக தனியாக நடத்துகிறது.

    லீக் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். பங்கேற்கும் பத்து நாடுகளும் மற்ற ஒன்பது அணிகளுடன் ஒரு முறை மோதும். அதன்பிறகு முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில் வரும் 8-ந் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.



    • உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அறிவித்துள்ளன.
    • இந்த முறையும் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறவில்லை.

    டெல்லி:

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 5-ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்நிலையில் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறவில்லை. துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

    உலகக்கோப்பைக்கான இந்திய அணி:-

    1. ரோகித் சர்மா 2. சுப்மன் கில் 3. விராட் கோலி 4. ஸ்ரேயாஸ் அய்யர் 5. ஹர்திக் பாண்ட்யா 6. ஜடேஜா 7.கே.எல்.ராகுல் 8. குல்தீப் யாதவ் 9. முகமது சமி 10. முகமது சிராஜ் 11. பும்ரா 12. ஷர்துல் தாகூர் 13. சூர்யகுமார் யாதவ் 14. இஷான் கிஷன் 15. அக்சர் படேல்

    உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அறிவித்துள்ளன.

    • இந்தியா பாகிஸ்தானுக்கு வராவிட்டால் உலகக்கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    • ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம்.

    சென்னை:

    6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.

    இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

    போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என இந்திய வீரர் அஷ்வின் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்கு நாம் செல்லாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்படி நடப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆசிய கோப்பை தொடரை அங்கு நடத்தக்கூடாது என நாம் சொல்லும் போது அவர்களும் நமது இடத்துக்கு வரமாட்டோம் என்று சொல்வார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்.

    ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம். இது 50 ஓவர் உலகக்கோப்பைக்கு ஒரு முன்னிலையாக இருக்கலாம். துபாயில் பல தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×