search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New York"

    துபாயிலிருந்து அமெரிக்கா சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த 100-க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #FlyEmirates
    நியூயார்க்:

    துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமானம் இன்று நியூயார் ஜே.எப்.கே விமான நிலையத்தில் தரையிறங்கியது. சுமார் 521 பயணிகள் விமானத்தில் இருந்த நிலையில் 100-க்கும் அதிகமான பயணிகள் தங்கள் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றான ஏர்பஸ் ரகத்தை சேர்ந்த இந்த விமானம் துபாயிலிருந்து கிளம்பும் போது 10 பயணிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூற அவர்கள், விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். எனினும், எதற்காக திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
    4-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. #YogaDay #NewYork
    நியூயார்க்:

    4-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், ராஜ்ய பிரதிநிதிகள், ஆன்மிக தலைவர்கள், குழந்தைகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. துணைப்பொதுச்செயலாளர் அமினா முகமது பேசுகையில், “இன்றைய உலகம் நம்ப முடியாத அளவுக்கு சிக்கலானது. நமது முக்கிய மதிப்புகள் அழிந்து கொண்டிருக்கிற சவாலை சந்தித்து வருகிறோம். நமது வாழ்க்கையில் பல்வேறு அழுத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதையெல்லாம் கடந்து நின்று இன்றைய தினம் இளைய தலைமுறையினர் யோகாவில் ஈடுபட்டு உள்ளனர். நமது உடல், உள்ள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அதில் யோகா மிக முக்கியமான, சரியான பங்களிப்பு செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன், இந்தியாவில் தோன்றிய யோகா கலையின் பாரம்பரிய பெருமைகளை விளக்கினார். அவரும் யோகா பயிற்சி செய்தார்.

    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி யோகா தினத்தையொட்டி வெளியிட்டு இருந்த செய்தி கொண்ட வீடியோ திரையிட்டு காட்டப் பட்டது.  #YogaDay #NewYork #Tamilnews
    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஓட்டல்களில் பரிமாறப்படும் 24 கேரட் தங்க கோழிக்கறியை சாப்பிட ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். #goldchickenwings
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை ஈர்க்க சமைத்த கோழிக்கறியின் மீது 24 கேரட் தங்கத்துகள்களை தூவி விற்பனை செய்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும், ஒரு முறை வருகை தந்தவர்கள் மீண்டும் மீண்டும் வருவதாகவும் ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.

    மேலும், தங்கம் கலந்த உணவை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பதால் இந்த உத்தியை நடைமுறைப்படுத்தியதாகவும் ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. வழக்கமான முறையில் செய்யும் கோழிக்கறிபோல் பொறித்து எடுக்காமல் கோழிக்கறி மீது, பரவலாக தங்க துகள்கள் தூவப்பட்டு பரிமாறப்படுகிறது.



    மேலும், கோழிக்கறியை வழக்கமாக நாம் அனைவரும் பொன்னிறமாக பொறித்து உண்ணுவோம். ஆனால் அந்த பாரில் கோழிக்கறி மீது முழுக்க முழுக்க தங்கத்துகள்களை தூவி, கோழியை தங்க உணவாக மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி வருகின்றனர். அந்த பாரில் பரிமாறப்படும் 10 துண்டுகள் கொண்ட தங்க கோழிக்கறியின் விலை இந்திய மதிப்பில் 3000 ரூபாய். இருப்பினும், தங்க கோழிக்கறியை சாப்பிட வாடிக்கையாளர்கள் குவிகின்றனர். #goldchickenwings
    அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக குர்சோச் கவுர் என்ற சீக்கியப் பெண் துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #GursoachKaur #TurbanedPoliceOfficer
    நியூயார்க்:

    அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக சீக்கியப் பெண் ஒருவர், துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    அவரது பெயர், குர்சோச் கவுர். இவர் கடந்த வாரம் தான் நியூயார்க் போலீஸ் அகாடமியில் படித்து முடித்தார்.

    இந் நிலையில் அவர் நியூயார்க் நகர துணை போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பது அங்கு உள்ள சீக்கிய மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்து உள்ளது.



    இதுபற்றி சீக்கிய அதிகாரிகள் சங்கம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள ஒரு பதிவில், “நியூயார்க் நகரில் தலைப்பாகை அணிந்த முதல் பெண் துணை போலீஸ் அதிகாரியை வரவேற்கிறோம். அவரை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். நீங்கள் இந்தப் பதவியில் அமர்வது, இதே போன்று சட்ட அமலாக்கல் துறையில் நாமும் அமர வேண்டும் என்ற உந்துதலை மற்றவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது” என கூறப்பட்டு உள்ளது.  #GursoachKaur #TurbanedPoliceOfficer

    ×