search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமையகம்"

    • எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
    • வழக்கில் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பதற்காக ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்.

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே அதிமுக தலைமையகத்தில் கடும் மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து, போலீசார் இரு தரப்பு ஆதரவாளர்களை வெளியேற்றி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சீல் வைத்தனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் வசம் சாவி ஒப்படைக்கப்பட்டது.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செவ்வமும் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இந்நிலையில், அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஏற்கனவே ஓபிஎஸ் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    வழக்கில் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பதற்காக ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ×