search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "First Woman"

    நிலவில் கால் பதிக்கும் முதல் பெண், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்று அந்நாட்டு துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறியுள்ளார். #VicePresident #MikePence #LandonMoon
    வாஷிங்டன்:

    நிலவில் முதன்முதலாக கால்பதித்த மனிதர் என்ற பெருமைக்குரியவரான நீல் ஆம்ஸ்ட்ராங் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆவார்.

    இந்த நிலையில், நிலவில் கால் பதிக்கும் முதல் பெண், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்று அந்நாட்டு துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறியுள்ளார்.

    இந்தியா உள்ளிட்ட 105 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ள சாட்டிலைட் 2019 என்ற கருத்தரங்கு வாஷிங்டனில் தொடங்கியுள்ளது. இதில் கலந்துகொண்டு மைக் பென்ஸ் பேசினார்.

    அப்போது, “ஜனாதிபதி டிரம்பின் வழிகாட்டுதலின்பேரில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் நிலவில் கால் பதிக்கும் முதல் பெண் நிச்சயமாக அமெரிக்க நாட்டினராகத்தான் இருப்பார்” என்று அவர் கூறினார். #VicePresident #MikePence #LandonMoon 
    பெண் கலெக்டர் ஒருவர் 24 ஆண்டுகளுக்கு முன் தனது 41-வது வயதில் சபரிமலைக்கு சென்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சென்று வழிபட நீண்ட காலமாக தடை இருந்து வந்தது. இதனால் அந்த வயதில் உள்ள பெண்கள் அங்கு செல்வது இல்லை.

    இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி வழங்கி கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்கு செல்ல அனுமதிப்பது பற்றி கேரள அரசும், தேவஸ்தான போர்டும் ஆலோசித்து வருகின்றன.

    இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் கே.பி.வல்சலா குமாரி என்ற பெண் கலெக்டர் சபரிமலை கோவிலுக்கு சென்றுள்ள தகவல் தற்போது தெரியவந்து உள்ளது.

    கடந்த 1994-1995-ம் ஆண்டில் இவர் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். அப்போது கேரள ஐகோர்ட்டு உத்தரவின்படி, பக்தர்களின் வருகையையொட்டி செய்யப்பட்டு இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக வல்சலா குமாரி சபரிமலைக்கு 4 முறை சென்று உள்ளார்.

    புனித பயணம் செல்லும் பக்தராக அல்லாமல் முழுக்க முழுக்க அலுவலக பணியாக மட்டுமே அவர் அங்கு சென்று இருந்தார். அவர் சபரிமலைக்கு சென்றபோது அய்யப்பன் கோவிலில் உள்ள பதினெட்டாம் படியில் ஏறக்கூடாது என்று அவருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.



    வல்சலா குமாரி தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், 41 வயதிலேயே தன்னால் சபரிமலை கோவிலுக்கு செல்ல முடிந்ததாகவும், தற்போது அனைத்து தரப்பு பெண்களும் சபரிமலை கோவிலுக்கு சென்று வழிபட சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்து இருப்பது உண்மையிலேயே நல்ல தீர்ப்பு என்றும் வல்சலா குமாரி கூறி உள்ளார்.

    அப்போது பதினெட்டாம் படியில் ஏரி சபரிமலை கோவிலுக்கு செல்ல தனக்கு அனுமதி இல்லாததால் அந்த படிக்கு கீழே கையை கட்டிக் கொண்டு நின்றபடி அய்யப்பனை வழிபட்டதாகவும் இப்போது வல்சலா குமாரி கூறி இருக்கிறார்.

    41 வயதில் சபரிமலை கோவிலுக்கு சென்ற அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ள வல்சலா குமாரி, தனக்கு 50 வயது ஆனபிறகு அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட்டதாகவும் தற்போது அவர் தெரிவித்து உள்ளார்.

    சபரிமலையில் சிறந்த முறையில் திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து, பெண்களுக்கென்று தனி வரிசையை ஏற்படுத்தினால் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யமுடியும் என்று கூறி இருக்கும் வல்சலா குமாரி, சில நாட்கள் அல்லது வாரங்களில் பெண்கள் மட்டும் சென்று வழிபட அனுமதிக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்து இருக்கிறார். #Sabarimala

    அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக குர்சோச் கவுர் என்ற சீக்கியப் பெண் துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #GursoachKaur #TurbanedPoliceOfficer
    நியூயார்க்:

    அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக சீக்கியப் பெண் ஒருவர், துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    அவரது பெயர், குர்சோச் கவுர். இவர் கடந்த வாரம் தான் நியூயார்க் போலீஸ் அகாடமியில் படித்து முடித்தார்.

    இந் நிலையில் அவர் நியூயார்க் நகர துணை போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பது அங்கு உள்ள சீக்கிய மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்து உள்ளது.



    இதுபற்றி சீக்கிய அதிகாரிகள் சங்கம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள ஒரு பதிவில், “நியூயார்க் நகரில் தலைப்பாகை அணிந்த முதல் பெண் துணை போலீஸ் அதிகாரியை வரவேற்கிறோம். அவரை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். நீங்கள் இந்தப் பதவியில் அமர்வது, இதே போன்று சட்ட அமலாக்கல் துறையில் நாமும் அமர வேண்டும் என்ற உந்துதலை மற்றவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது” என கூறப்பட்டு உள்ளது.  #GursoachKaur #TurbanedPoliceOfficer

    ×