search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nakshatra"

    • ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
    • உங்கள் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

    மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இனி நட்சத்திரத்திற்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...

    நட்சத்திர மரங்கள்:

    அஸ்வதி- ஈட்டி மரம்,

    பரணி-நெல்லி மரம்,

    கார்த்திகை-அத்திமரம்,

    ரோகிணி-நாவல்மரம்,

    மிருகசீரிடம்- கருங்காலி மரம்,

    திருவாதிரை-செங்கருங்காலி மரம்,

    புனர்பூசம்-மூங்கில் மரம்,

    பூசம்- அரசமரம்,

    ஆயில்யம்- புன்னை மரம்,

    மகம்-ஆலமரம்,

    பூரம் -பலா மரம்,

    உத்திரம்-அலரி மரம்,

    அஸ்தம்- அத்தி மரம்,

    சித்திரை- வில்வ மரம்,

    சுவாதி -மருத மரம் ,

    விசாகம்- விலா மரம்,

    அனுஷம்- மகிழ மரம்,

    கேட்டை-பராய் மரம்,

    மூலம்- மராமரம்,

    பூராடம்- வஞ்சி மரம்,

    உத்திராடம்- பலா மரம்,

    திருவோணம்- எருக்க மரம் ,

    அவிட்டம்-வன்னி மரம்,

    சதயம்-கடம்பு மரம்,

    பூரட்டாதி- தேமமரம்,

    உத்திரட்டாதி- வேம்பு மரம்,

    ரேவதி-இலுப்பை மரம்.

    • 27 நட்சத்திரங்கள் என்பது மிகவும் முக்கியமானது.
    • 27 நட்சத்திரங்களுக்கும் உரிய சிவ வடிவங்களையும் வணங்கி வரலாம்.

    மனித வாழ்வில் ராசிகளும், நட்சத்திரங்களும் பல மாறுதல்களையும், வளங்களையும், இன்ப- துன்பங்களையும் வழங்குவதாக, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் 27 நட்சத்திரங்கள் என்பது மிகவும் முக்கியமானது. இந்த பூமியில் பிறந்தவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் ஒரு நட்சத்திரத்திலேயே பிறந்திருக்க வாய்ப்புண்டு. அந்த வகையில் 27 நட்சத்திரக்காரர்களும், தங்களின் நட்சத்திரங்களுக்கான தெய்வங்களை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும்.

    27 நட்சத்திரங்களுக்கும் உரிய சிவ வடிவங்களையும் வணங்கி வரலாம். அந்த வகையில் இங்கே 27 நட்சத்திரங்களுக்காக சிவ வடிவங்கள் தரப்பட்டுள்ளது. அவற்றைப் பார்க்கலாம்.

    * அஸ்வினி - கோமாதாவுடன் கூடிய சிவன்

    * பரணி - சக்தியுடன் இருக்கும் சிவன்

    * கார்த்திகை - சிவபெருமான்

    * ரோகிணி - பிறை சூடிய பெருமான்

    * மிருகசீரிஷம் - முருகனுடன் இருக்கும் சிவன்

    * திருவாதிரை - நாகம் குடைபிடிக்கும் சிவன்

    * புனர்பூசம் - விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்

    * பூசம் - நஞ்சுண்ணும் சிவன்

    * ஆயில்யம் - விஷ்ணுவுடன் உள்ள சிவன்

    * மகம் - விநாயகரை மடியில் வைத்த சிவன்

    * பூரம் - அர்த்தநாரீஸ்வரர்

    * உத்ரம் - நடராஜ பெருமான்

    * ஹஸ்தம் - தியான கோல சிவன்

    * சித்திரை - பார்வதிதேவி, நந்தியுடன் சிவன்

    * சுவாதி - சகஸ்ரலிங்கம்

    * விசாகம் - காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்

    * அனுஷம் - ராமர் வழிபட்ட சிவன்

    * கேட்டை - நந்தியுடன் உள்ள சிவன்

    * மூலம் - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

    * பூராடம் - சிவ-சக்தி-கணபதி

    * உத்திராடம் - ரிஷபத்தின் மேல் அமர்ந்து பார்வதியுடன் இருக்கும் சிவன்

    * திருவோணம் - விநாயகருடன், பிறைசூடிய சிவன்

    * அவிட்டம் - மணக்கோலத்தில் உள்ள சிவன்

    * சதயம் - ரிஷபம் மீது சக்தியுடன் வீற்றிருக்கும் சிவன்

    * பூராட்டாதி - விநாயகரை மடியின் முன்புறமும்,

    சக்தியை அருகிலும் வைத்திருக்கும் சிவன்

    * உத்திரட்டாதி - கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

    * ரேவதி - குடும்பத்துடன் உள்ள சிவன்

    • உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் இருக்கிறார்.
    • உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை சிவபெருமான் ஆவார்.

    உத்திரட்டாதி நட்சத்திரகாரர்கள் மிகுதியான செல்வங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    27 நட்சத்திரங்கள் வரிசையில் இருபத்தாறாவது நட்சத்திரமாக உத்திரட்டாதி நட்சத்திரம் வருகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை மகா ஈஸ்வரனாக இருக்கும் சிவபெருமான் ஆவார். சனி பகவானின் ஆதிக்கம் கொண்டிருப்பதால் மிகுந்த பொறுமை குணமும், கடினமாக உழைப்பவர்களாகவும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான செல்வ வளங்களை பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை தங்கள் நட்சத்திர அதிபதியான சனி பகவானின் முழுமையான நல்லருளை பெறுவதற்கு வருடத்திற்கு ஒரு முறை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று, சனீஸ்வரனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும்.

    வாரந்தோறும் வரும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி, இனிப்பு அல்லது கற்கண்டுகள் நைவேத்தியம் வைத்து, வழிபட்டு வர வாழ்வில் சிறப்பான பலன்கள் ஏற்படுவதை காணலாம். சனி பிரதோஷ தினங்களில் சிவ பெருமானையும், அம்பாளையும் வழிபட்டு வர உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் பல நன்மைகள் உண்டாக்கும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

    தினமும் நீங்கள் காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக சனிபகவானின் வாகனமாகிய காகங்களுக்கு சிறிது உணவை வைத்த பிறகு சாப்பிடுவதால், சனீஸ்வர பகவானின் அருட்பார்வை உங்களுக்கு கிடைத்து அதனால் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகரிக்கும். ஏதேனும் சனிக்கிழமை தினத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடை மட்டும் இனிப்புகளை தானம் செய்வது நன்மை பயக்கும்.

    கோவில்களில் 2, 4, 6 போன்ற இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்கும் பசுமாடுகளுக்கு ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும் இரட்டை வாழைப்பழங்களை, சிறிது தேன் தடவி உணவாக கொடுப்பதன் மூலம் உங்கள் நட்சத்திரத்திற்கு மிகுதியான அதிர்ஷ்டங்கள் உண்டாக செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாகும்.

    ×