search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money dispute"

    திசையன்விளையில் மோட்டார் சைக்கிளை வாங்கிவர கேட்ட பணத்தை தாய் தர மறுத்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
    திசையன்விளை:

    நெல்லை டவுனை சேர்ந்த கச்சேரி பாடகர் பாலன். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் கிருஷ்ணவேணி, மகன் லட்சுமிகாந்த் (வயது 18). லட்சுமிகாந்த் சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணவேணி திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை வேலை பார்த்து வந்தார். 

    இந்நிலையில் பாலன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நெல்லை டவுனில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு தனது குடும்பத்துடன் திசையன்விளை மணலிவிளையில் வாடகை வீட்டில் குடியேறினார். மகள் கிருஷ்ணவேணி பணிபுரிந்த அதே பள்ளியில் மகன் லட்சுமிகாந்தை பிளஸ்-1 சேர்த்தார். 

    பாலன் கச்சேரி பாடகர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அதேபோல் நேற்றும் வெளியூர் சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி, மகள், மகன் ஆகிய 3 பேரும் இருந்தனர். அப்போது மாணவன் லட்சுமிகாந்த், தனது மோட்டார் சைக்கிளை பழுது நீக்க நெல்லையில் உள்ள ஒர்க்ஷாப்பில் கொடுத்திருப்பதாகவும், அதனை வாங்கி வர ரூ.20ஆயிரம் தருமாறு தாயாரிடம் கேட்டுள்ளார்.  ஆனால் தன்னிடம் பணம் இல்லை என தாய் சுப்புலட்சுமி கூறிவிட்டார். இதையடுத்து தாய் மற்றும் அக்காளிடம் லட்சுமிகாந்த் சண்டையிட்டுள்ளார். பின்பு அவர்கள் இருவரும் வீட்டின்வெளியே வந்து அமர்ந்து விட்டனர். நள்ளிரவு 12.30 மணியளவில் தாயும், மகளும் வீட்டினுள் சென்றனர். 

    அப்போது அங்குள்ள அறையில் மாணவன் லட்சுமிகாந்த் தூக்கில் பிணமாக தொங்கினான். தனது பெல்ட்டிலேயே மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளான். இதை பார்த்த தாய் சுப்புலட்சுமி, அக்காள் கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

    மாணவன் உடலை பார்த்து அவர்கள் இருவரும் கதறி அழுதனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
    மோட்டார் சைக்கிளை வாங்கிவர கேட்ட பணத்தை தாய் தர மறுத்ததால் மாணவன் லட்சுமிகாந்த் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்வேளூர் அருகே பணத் தகராறில் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வலிவலம் சிவன் கீழவீதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 31). இவர் வேதாரண்யம் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி (26). இவரது வீட்டுக்கு கடந்த 19-ந் தேதி இரவு 11 மணியளவில் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் வந்து கணவன்-மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தாக்கியவர்களை பிடிக்க முயற்சித்தனர். அப்போது 2 பேர் மட்டும் பிடிப்பட்டுள்ளனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதையடுத்து பிடிப்பட்ட 2 வாலிபர்களையும் வலிவலம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அசோக்குமாரின் மனைவி மாலதிக்கு பேஸ்புக் மூலம் கோவையை சேர்ந்த அமுதன் என்ற டாக்டருடன் தொடர்பு இருந்ததாகவும், அதன் முலம் மாலதி பல்வேறு காரணங்களை கூறி  சிறுக சிறுக ரூ.30 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும், பிடிப்பட்ட வாலிபர்கள் தெரிவித்தனர். ஆனால் தனது மனைவி 8-ம் வகுப்பு மட்டும் படித்துள்ளதாகவும் முகநூல் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்று அசோக்குமார் போலீசாரிடம் கூறியுள்ளார். 

    இதையடுத்து வலிவலம் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கைதானவர்கள் திருவாருர் கம்பர் தெருவை சேர்ந்த முத்து (22), திருவாரூர் முதலியார் தெருவை சேர்ந்த அஜய் (24) என்று தெரியவந்தது. மேலும் தாக்குதலில் ஈடுபட்டு தப்பி சென்றுவிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சீட்டு பணத் தகராறில் ஆசிரியரை காரில் கடத்தி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பாப்பாங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52). விவசாய ஆசிரியராக பணி புரிந்தவர். இவரது மனைவி பெயர் சுமதி (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    பழனிசாமி சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி இவருக்கும், சிலருக்கும் பணத் தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை ஈரோட்டை சேர்ந்த கார் டிரைவர் சிலம்பரசன், மேலும் 2 பேர் காரில் வந்தனர். சிலம்பரசனின் மாமியார் பெயர் கிருஷ்ணகுமாரி.

    கிருஷ்ணகுமாரிக்கும், ஆசிரியர் பழனிசாமிக்கும் இடையே சீட்டு போட்டதில் பணம் கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினை உள்ளது. இதையொட்டி பழனிசாமி வீட்டுக்கு வந்த சிலம்பரசனும் அவருடன் வந்தவர்களும் பழனிசாமியிடம் 90 ஆயிரம் பணத்தை எப்போது கொடுப்பாய்...? கேட்டு தகராறு செய்த அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    பிறகு அவரை வலுகட்டாயமாக கடத்தினர். இதை தடுத்த அவரது மனைவி சுமதியை தள்ளி விட்டு விட்டு பழனிசாமியை காரில் தூக்கிபோட்டு கடத்தி சென்று விட்டனர்.

    தனது கண் எதிரேயே கணவர் கடத்தப்பட்டதை கண்டு திடுக்கிட்ட அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி பழனிசாமியை காரில் கடத்தி சென்ற கும்பலை தேடி வருகிறார்கள். 

    பணத் தகராறில் கட்டிட தொழிலாளர்கள் மோதிக் கொண்டதில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள மணிநகர் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 49) கட்டிட தொழிலாளி. இவருடன் மேல வெள்ளமடத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் வேலை பார்த்தார். இந்த நிலையில் ஜெயராஜ், நடராஜனுக்கு ரூ.4 ஆயிரம் கடன் கொடுத்தாராம். அதனை திருப்பி கொடுக்காததால் ஜெயராஜ் தனது மருமகன் இசக்கி முத்து என்பவருடன் சென்று பணத்தை கேட்டுள்ளார். 

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயராஜ், இசக்கிமுத்து இருவரும் கம்பியால் தாக்கப்பட்டனர். இதுகுறித்து நாசரேத் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் நடராஜன் மீது வழக்குபதிவு செய்தார். 

    இதேபோல் நடராஜன் கொடுத்த புகாரில் ஜெயராஜிடம் வாங்கிய பணத்தை 2 மாதத்தில் தருவதாக கூறியிருந்தேன் அதனை அவர் கேட்காமல் என்னை தாக்கியுள்ளார். இதுதொடர்பாக ஜெயராஜ், இசக்கிமுத்து ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    பணத்தகராறில் மிரட்டல் விடுத்ததால் லாரி டிரைவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மேல்நிம்மியம்பட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 52). லாரி டிரைவர். இவருக்கு தாமரை என்ற மனைவி, ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கோவிந்தசாமிக்கு செக்குமேட்டில் 75 சென்ட் நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை விற்க கோவிந்தசாமி முடிவு செய்தார். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான எம்.ஜி. என்ற ஜெய்சங்கரிடம் ரூ.7 லட்சம் விலை பேசினார்.

    முன் பணம் ரூ.2½ லட்சம் பெற்று கொண்டார். மீதித் தொகையை 3 மாதத்திற்குள் கொடுத்து நிலத்தை கிரயம் செய்வதாக அ.தி.மு.க. பிரமுகர் கூறினார். கடைசி வரை மீதி பணத்தை தந்து அவர் நிலத்தை கிரயம் செய்யவில்லை.

    இதனால், காலக்கெடு முடிந்ததையடுத்து வேறு நபருக்கு கோவிந்தசாமி தனது நிலத்தை விற்றுவிட்டார். இதனால் அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கர் ஆத்திரமடைந்தார். முன் பணமாக கொடுத்த ரூ.2½ லட்சத்தை திருப்பி கேட்டு நச்சரித்தார். பணத்தை கோவிந்தசாமி தராததால் அ.தி.மு.க. பிரமுகர் மிரட்டல் விடுத்தார். மேலும், தனது ஆதரவாளர்களுடன் சென்று தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும், வாணியம்பாடி தாலுகா போலீசிலும் கோவிந்தசாமி மீது அ.தி.மு.க. பிரமுகர் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்தனர். கோவிந்தசாமி வரும் 20-ந் தேதிக்குள் 2½ லட்சம் ரூபாயையும் கொடுப்பதாக எழுதி கொடுத்தார்.

    இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கர் ஆதரவாளர்களுடன் மீண்டும் கோவிந்தசாமியை அழைத்து மிரட்டினார். இதனால் மனமுடைந்த கோவிந்தசாமி தனது பைக்கில் பெட்ரோலை பிடித்து, உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கட்டப்பஞ்சாயத்து பேசி மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓடி விட்டனர். அப்பகுதி மக்கள், கோவிந்தசாமி உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவிந்தசாமி மாற்றப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, ஆலங்காயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடசேரியில் பணத் தகராறில் நண்பரை வெட்டி கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    நாகர்கோவில்:

    வடசேரி கருத்த விநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). அவரது நண்பர் மணிகண்டன் (36). இவர் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர்.

    இரண்டுபேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துவந்தது. இந்த நிலையில் மணிகண்டன் தனது நண்பர் சுரேசிடம் பணம் கொடுத்திருந்தார். அவற்றை திருப்பி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலையில் சுரேஷ் குளிப்பதற்காக வீட்டில் இருந்து ஒழுகினசேரி சுடுகாடு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் தனது நண்பர் சுரேசை வழிமறித்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேசை வெட்ட முயன்றர். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் விலகினார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து வடசேரி போலீசில் சுரேஷ் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் சாம்ஜி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நண்பனை வெட்டி கொல்ல முயன்ற மணிகண்டனை கைது செய்தனர்.

    மேலும் கைது செய்து செய்யப்பட்ட மணிகண்டன் 2009-ம் ஆண்டு வடசேரி பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டவர் என்பது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

    ×