search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mithali Raj"

    20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலியை விட அதிக ரன்கள் சேர்த்து மிதாலிராஜ் ஆச்சரியப்படுத்தியுள்ளார். #RohitSharma #ViratKohli #MithaliRaj
    இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை மிதாலிராஜ், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான், அயர்லாந்துக்கு எதிராக அரைசதம் விளாசி அசத்தினார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் அவர் இதுவரை 80 இன்னிங்சில் பேட்டிங் செய்து 17 அரைசதங்களுடன் 2,283 ரன்கள் குவித்து இருக்கிறார். ஆண்களை விட அவர் அதிக ரன்கள் சேர்த்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.



    20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களில் அதிகபட்சமாக நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 2,271 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 2,207 ரன்களும், விராட் கோலி 2,102 ரன்களும் எடுத்துள்ளனர். இவர்களை மிதாலிராஜ் தற்போது மிஞ்சினாலும், வீராங்கனைகளின் பட்டியலில் அவர் 4-வது இடம் வகிக்கிறார். நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் 2,996 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.



    35 வயதான மிதாலிராஜ் கூறுகையில், ‘கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அணி நிறைய முன்னேற்றம் கண்டு இருக்கிறது. அணிக்கு வருகை தந்துள்ள இளம் வீராங்கனைகள் 20 ஓவர் போட்டிக்கான அணுகுமுறையை மாற்ற விரும்புகிறார்கள். அவர்களுக்காக இந்த உலக கோப்பையை நிச்சயம் வெல்ல விரும்புகிறேன். பீல்டிங் கட்டுப்பாடு உள்ள ‘பவர்-பிளே’க்குள் அதிகமான பவுண்டரிகள் அடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்திய அணிக்காக தொடர்ந்து ரன்கள் குவிப்பேன் என்று நம்புகிறேன்’ என்றார். #RohitSharma #ViratKohli #MithaliRaj
    ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக 105 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் மிதலி ராஜ். #MithaliRaj
    இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது போட்டி நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய இந்தியா ‘ஏ’ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீராங்கனையும், இந்திய பெண்கள் அணியின் அனுபவம் வாயந்தவரும் ஆன மிதலி ராஜ் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்தில் அரைசதம் அடித்த, மிதலி ராஜ், 59 பந்தில் சதம் அடித்தார். அவர் 61 பந்தில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் டி20 போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஸ்மிரிதி 102 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது. அதை தற்போது மிதலி ராஜ் முறியடித்துள்ளார்.
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அதிக சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடி சாதனைப் படைத்துள்ளார். #MithaliRaj
    ஐசிசி பெண்கள் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - இலங்கை இடையிலான ஒருநாள் போட்டி காலே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணியில் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த வீராங்கனையும் ஆன மிதாலி ராஜ் இடம்பிடித்திருந்தார்.



    இது அவருக்கு 118-வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். இதன்மூலம் அதிக சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து வீராங்கனை சார்லோட் எட்வர்ட்ஸ் 117 போட்டியில் விளையாடி சாதனைப் படைத்திருந்தார்.
    பிரபலங்களின் வாழ்க்கை படமாக உருவாகி வரும் நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் முன்னணி வீராங்கணையாக விளங்கும் மிதாலி ராஜின் வாழ்க்கை படத்தில் டாப்சி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #MithaliRajBiopic
    மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து சாதனை நிகழ்த்திய இந்திய வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

    மிதாலி ராஜ் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். தனது வாழ்க்கையை படமாக எடுக்க மிதாலி ராஜ் அனுமதி அளித்துள்ளார். சிறு வயது முதல், புகழ் பெற்ற கிரிக்கெட் வீராங்கனையாக உயர்ந்தது வரை உள்ள அவரது வாழ்க்கை சம்பவங்களை படத்தில் காட்சிப்படுத்துகின்றனர். 

    இந்த படத்தில் தனது வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும், தனது குணமும் பிரியங்கா சோப்ரா குணமும் ஒத்துப்போகின்றன என்றும் முன்னதாக மிதாலி ராஜ் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், மிதாலி ராஜ் வாழ்க்கை கதையில் நடிக்க டாப்சி தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 



    இந்த படத்தில் நடிப்பது குறித்து டாப்சி கூறும்போது, ‘‘விளையாட்டு வீராங்கனை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. மிதாலி ராஜ் வாழ்க்கை கதையை திரைக்கதையாக்கும் முயற்சி நடக்கிறது. எனவே இந்த படம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது’’ என்றார். 

    ஏற்கனவே சச்சின், கேப்டன் டோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை படமாக வெளிவந்தது. கபில்தேவ் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியும் நடக்கிறது. #MithaliRajBiopic #Taapsee

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். #MithaliRaj #FirstIndianWomanCricketer #2KT20IRuns #BCCI

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான மிதாலி ராஜ், இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர், அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மகளிர் பேட்ஸ்மேன்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். 

    ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த முதல் பெண் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் ஒருநாள் போட்டிகளில் 6,000 ஓட்டங்கள் எடுத்த முதல் வீராங்கனை ஆவார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஏழு முறை அரைசதம் அடித்த முதல் வீராங்கனை ஆவார். மேலும் அதிகமுறை 50 ஓட்டங்கள் எடுத்த வீராங்கனை எனும் சாதனைகளைப் படைத்துள்ளார்.

    இந்நிலையில், மிதாலி ராஜ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மகளிர் ஆகிய கோப்பை லீக் போட்டியில் மிதாலி ராஜ் 23 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார். இதுவரை 73 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 ஆயிரம் ரன்கள் எடுத்துள்ளார்.



    இந்த பட்டியலில், சார்லட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து) 2,605 ரன்கள், ஸ்டெபானி டெய்லர் (வெஸ்ட்இண்டீஸ்) 2,582 ரன்கள் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இதுதவிர இன்னும் 5 வீராங்கனைகள் 2000 ரன்களை கடந்துள்ளனர். சர்வதேச அளவில் 2 ஆயிரம் ரன்களை கடந்த 7வது வீராங்கனை மிதாலி ராஜ் ஆவார். #MithaliRaj #FirstIndianWomanCricketer #2KT20IRuns #BCCI
    ×