search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Durai Murugan"

    • ஆந்திர அரசு அணை கட்டக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தகவல்
    • நாங்கள் எந்த காலத்திலும் பயங்கரவாதத்துக்கு துணைபோவதில்லை என மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதில்

    காட்பாடி:

    ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரட்டை வேடம் போடுவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். இதற்கு, பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், 'பாவம்... அவர் கலங்கிப் போய் எதையெதையோ பேசிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றியெல்லாம் பேசவேண்டாம். வேறு யாராவது சொன்னால் சொல்லுங்கள்' என்றார். காட்பாடியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

    மேலும், ஆந்திர அரசு அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டிருப்பதாகவும், அணை கட்டுவதற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தால் அந்த வழக்கை விரைவுபடுத்துவோம் என்றும் அமைச்சர் கூறினார்.

    மேலும், திமுக அரசு பயங்கரவாதத்துக்கு துணைபோவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் செளபே கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "யாரோ விவரம் தெரியாத மந்திரி அவர். நாங்கள் எந்த காலத்திலும் பயங்கரவாதத்துக்கு துணைபோவதில்லை, எங்கள் கொள்கையும் அதுவல்ல' என்றார்.

    • அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்?
    • வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதைத்திரும்ப அள்ளுவது கஷ்டம்.

    சென்னை:

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடுதான் நடந்து கொண்டிருந்தார்.

    அவருடைய கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மெத்தவும் தடுமாறி போயிருக்கிறார், நிதானம் தவறியிருக்கிறார் என்பது அவர் வெளியிட்ட 25.9.2022 நாளிட்ட அறிக்கையின் மூலம் தெரிகிறது.

    தளபதியின் அரசு "கையாலாத அரசு", "விடியா அரசு", "கும்பகர்ணன் தூக்கம் கொண்ட அரசு" என்று வார்த்தைகளை அறிக்கையில் கொட்டி இருக்கிறார்.

    ஆந்திர அரசு ஆந்திர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் கட்டப்போவதாக அம்மாநில முதல்-அமைச்சர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

    அது ஒரு பொதுக்கூட்ட செய்திதான். அந்த செய்தியை வைத்துக் கொண்டு தளபதி அரசு என்ன சாதித்துவிட்டது என்று அவசர குடுக்கையாக எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

    இப்படித்தான் முன்னர் ஒரு முறை இதே கணேசபுரத்தில் அணை கட்டப்போவதாக வந்த செய்தியைப் பார்த்து சில அறிக்கை தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டார்கள்.

    அதைத் தொடர்ந்து தளபதியும் நானும் கணேசபுரம் போய் பார்த்தபோது அப்படி ஒரு அணை கட்டுவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை.

    இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை இவ்வரசு தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் எடுக்கும்.

    இந்த நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எல்லாம் எடப்பாடியாருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் எந்த அணையையும் கட்டவில்லை.

    அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதைத்திரும்ப அள்ளுவது கஷ்டம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காவிரி நதிநீர் கமிஷனில் மத்திய அரசு முன்னணியில் இருப்பது மாதிரியும், பின்னணியில் உள்ளது போலும் உள்ளது.
    • ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு முடிவு செய்து யஷ்வந்த் சின்காவை ஆதரிக்கிறோம்.

    வேலூர்:

    காட்பாடி மெட்டுகுளம் கிராமத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தால் தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இருந்தாலும் தமிழக அரசு தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    நான் எம்.எல்.ஏ.வாக இத்தனை ஆண்டு காலம் இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் என்னிடமில்லை. அப்படிதான் எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

    இதை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில்:-

    காவிரி நதிநீர் கமிஷனில் மத்திய அரசு முன்னணியில் இருப்பது மாதிரியும், பின்னணியில் உள்ளது போலும் உள்ளது.

    கர்நாடகா அரசு சொல்வதும் தவறு, காவிரி மேலாண்மை கமிஷன் சொல்வதும் தவறு. சுற்றுச்சூழல் துறை மேகதாது அணை விவகாரத்தை நீக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 28-ந் தேதி ஆம்பூர் வந்து தங்குகிறார். 29-ந் தேதி திருப்பத்தூர் விழாக்களில் பங்கேற்கிறார்.

    பின்னர் வேலூர் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். நலத்திட்டங்களை வழங்குகிறார்.

    மறுநாள் ராணிப்பேட்டையில் விழாவை முடித்துவிட்டு சென்னை செல்கிறார்.

    ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு முடிவு செய்து யஷ்வந்த் சின்காவை ஆதரிக்கிறோம்.

    சமூக நீதியில் திமுக ஈடுபாடு உள்ள கட்சி. ஆனால் பழங்குடியின வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்று கூறுகிறார்கள். பாராளுமன்றத்தில் நாங்கள்தான் 2-வது பெரிய கட்சி. எங்களிடம் அவர்கள் ஆதரவு கேட்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காட்பாடியில் எம்.ஜி.ஆருக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார்.
    • குஷ்புவுக்கு கோவில் கட்டும்போது எம்ஜிஆருக்கு கோவில் கட்டுவது தவறு இல்லை.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கேமரா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஹெல்மெட் அணிவது மிகவும் அவசியமானது. 100ல் 80 பேர் ஹெல்மெட் அணிவது இல்லை. பெரும்பாலானோர் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுகின்றனர். சென்னையில் வாகன ஓட்டிகள் அதிகளவில் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்மெட் அணியவேண்டும்.

    ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும். பட்டியலின பெண்ணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் தனிப்பட்ட முறையில் நான் அதை வரவேற்கிறேன்.

    காட்பாடியில் எம்.ஜி.ஆருக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார். குஷ்புவுக்கு கோவில் கட்டும்போது எம்ஜிஆருக்கு கோவில் கட்டுவது தவறு இல்லை.

    திராவிட கொள்கைகளை உண்மையிலே கடைபிடிக்கும் கட்சியாக தி.மு.க மட்டுமே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி. கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மேயர் சுஜாதா ஆனந்தகுமார் துணை மேயர் சுனில்குமார் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    ×