search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister cv shanmugam"

    ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம் என்று உளுந்தூர்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். #ministercvshanmugam #mkstalin
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி 2 ஆண்டு காலத்தை நிறைவு செய்ய போகிறது. ஜெயலலிதா 100 ஆண்டுகாலம் இந்த ஆட்சி இருக்கும் என்றார், அதை நனவாக்கி வருகிறோம். இன்று அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் கலகத்தை உருவாக்கி ஆட்சியை கலைக்க முயன்றனர் அது நடக்கவில்லை. நீதிமன்றம் மூலம் முயன்றனர் அதுவும் முடியவில்லை. தற்போது முறைகேடு நடக்கிறது என்று சொல்கிறார்கள். அதை சொல்வது யார் தி.மு.க., அதன் புதிய தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின்.

    புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டிய விவகாரத்தில் விசாரணை கமிஷனை சந்திக்க ஏன் அச்சப்படுகிறீர்கள். சந்திக்க வேண்டியது தானே. ஏன் தடை வாங்குகிறீர்கள். நாங்கள் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஊழல் பற்றி பேச பா.ம.க.வினருக்கும் தகுதி இல்லை. அவர்கள் மீதும் குற்றச்சாட்டு உள்ளது.

    ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி கொண்டு இருக்கிற அரசு இது. இந்த ஆட்சி 100 ஆண்டு காலம் இருக்கும். தொண்டர்களின் ரத்தத்தை நம்பி இந்த இயக்கம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்று அவர் பேசினார்.

    முன்னதாக மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    ஜெயலிலதா விட்டு சென்ற ஆட்சியை சிறந்த முறையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். இந்த இயக்கம், ஆட்சியை பற்றி பலர் பேசி வருகிறார்கள். நாம் தான் தமிழகத்தை ஆள போகிறோம் என்று உள்ளார் ஒரு கட்சியின் தலைவர். அவரது எண்ணம் பலிக்காது. எம்ஜி.ஆர். எந்த எண்ணத்தில் இந்த இயக்கத்தை தொடங்கினாரோ, அந்த வழியில் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தாரோ, அதே போன்று எடப்பாடி பழனிசாமி உள்ளார். விழுப்புரம் தெற்குமாவட்டம் எங்களது கோட்டை என்பதை நிரூபித்து உள்ளோம். எப்போதும் முதல்-அமைச்சரின் தலைமையின் கீழ் சிறப்பாக பணிசெய்வோம் என்று அவர் பேசினார். #ministercvshanmugam #mkstalin
    எம்.எல்.ஏ. கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சபாநாயகர் தனபாலுடன், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். #Karunas
    சென்னை:

    சமீபத்தில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக எம்.எல்.ஏ. கருணாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

    கருணாசின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், அவர் எம்.எல்.ஏ.வாக நீடிக்க வேண்டுமா? என பலரும் கேள்வி எழுப்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. பதவியில் உள்ள கருணாஸ் முதல்வரை அவதூறாக பேசியது குறித்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    சபாநாயகர் தனபாலுடன் தற்போது சட்டத்துறை மந்திரி சி.வி.சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஆலோசனை செய்துள்ளனர்.

    இதுகுறித்து கருணாசுக்கு விரைவில் பதிலளிக்கப்படும் எனவும், அதன் பிறகு அவர் மீதான நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்.எல்.ஏ. கருணாசின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அதே சமயம், கூவத்தூர் ரகசியங்களை தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க தயார் என கருணாஸ் கூறிவரும் நிலையில், ஒருவேளை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் விரைவில் கூவத்தூர் ரகசியம் குறித்து அவர் வெளியிடும் சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. #Karunas
    குட்கா ஊழல் புகார் குறித்து பேசிய போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீதான புகார் ஆதாரமற்றது என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். #expolicecommissionergeorge #ministercvshanmugam

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன்பு சென்னையில் துணை கமி‌ஷனராக பணியாற்றினார்.

    அப்போது குட்கா ஊழல் பிரச்சினையில் சரியாக விசாரணை நடத்தவில்லை. அவர் பணியில் திறமையில்லாதவராக இருந்தார் என்று முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் குற்றம் சாட்டியிருந்தார்.

    இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் நான் நேர்மையானவன். என்மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜார்ஜ் குற்றம் சாட்டுகிறார். நான் நேர்மையானவன் என்பதை எங்கே நிரூபிக்க வேண்டுமோ அங்கு நிரூபிப்பேன் என்று அறிவித்திருந்தார்.


    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகாவில் உள்ள பனையபுரத்தில் இன்று அரசு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: குட்கா ஊழல் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீது முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் குற்றம் சாட்டி உள்ளாரே?

    பதில்: போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீது கூறப்படும் குற்றச்சாட்டு ஆதராமற்றது.

    கேள்வி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யப்படுவார்களா?

    பதில்: இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #expolicecommissionergeorge #ministercvshanmugam

    உளுந்தூர்பேட்டை அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கிராம சேவை மைய கட்டிடத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். #CVShanmugam #Inaugurated
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நொனையவாடி கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கிராம சேவை மைய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான குமரகுரு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு கிராம சேவை மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அப்போது மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் வக்கீல் மணிராஜ், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சாய்ராம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகோபாலகிருஷ்ணன், திருமால், முன்னாள் கவுன்சிலர் ராமலிங்கம், நகர துணை செயலாளர் கஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிவேல், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆறுமுகம், பாண்டியன், ராமசாமி, பாபு, அதையூர் சுப்புராயன், செல்வராஜ், ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.  #CVShanmugam #Inaugurated
    ×