search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mini Marathon"

    • நெல்லை சுகாதார மாவட்டம் சார்பில் மக்கள் சேவையில் 100 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது
    • இந்த ஓட்டமானது அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி சீனிவாசன் நகர் வரை சென்று மீண்டும் அதே வழித்தடத்தில் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு வந்து முடிவடைந்தது

    நெல்லை:

    நெல்லை சுகாதார மாவட்டம் சார்பில் மக்கள் சேவையில் 100 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நெல்லையில் இன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. பாளை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே தொடங்கிய இந்த மினி மாரத்தான் போட்டியை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். குறிப்பாக சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்று ஓடினர்.

    இந்த ஓட்டமானது அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி சீனிவாசன் நகர் வரை சென்று மீண்டும் அதே வழித்தடத்தில் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு வந்து முடிவடைந்தது

    • தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டி அம்பை பூக்கடை பஜாரில் தொடங்கியது.
    • இதில் ஆண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும், பெண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    சிங்கை:

    தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டி அம்பை பூக்கடை பஜாரில் தொடங்கியது. ஏ.எஸ்.பி. பல்பீர்சிங் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். பெண்கள் பிரிவு போட்டி அகஸ்தியர் பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளியில் இருந்து தொடங்கியது. இதை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை 12-ம் அணி தலைவர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    மினி மாரத்தான் போட்டி யில் 3000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டார்கள். இதில் ஆண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும் பெண் கள் பிரிவில் 20 பேர்க ளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மினி மாரத்தான் போட்டியில் மாணவ- மாணவிகள், விளையாட்டுத் துறையினர், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே மாரத்தான் போட்டியின் நோக்கம் என்றார்
    • மாரத்தான் போட்டி அம்பிளிக்கை கல்லூரியில் இருந்து தொடங்கி தங்கச்சியம்மாபட்டி வரை நடைபெற்றது.

    ஒட்டன்சத்திரம்:

    குளோபல் கேன்சர் டிரஸ்ட் சார்பில் சர்வதேச அளவில் 74 இடங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு சம்பந்தமாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாரத்தான் போட்டி நடை பெற்றது. ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர். பிரதீப் டாம் செரி யன் முன்னிலை வகித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், புகையிலை மற்றும் கஞ்சா ஆகியவற்றின் மூலம் புற்றுநோய் ஏற்படுகிறது.

    எனவே புகையிலை பொருட்களை பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே மாரத்தான் போட்டியின் நோக்கமாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் நிர்மலா ஜெயராஜ், முதல்வர் ஜெசன் ஜார்ஜ், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அய்யம்மாள், தங்கச்சி யம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மாரத்தான் போட்டி அம்பிளிக்கை கல்லூரியில் இருந்து தொடங்கி தங்கச்சியம்மாபட்டி வரை நடைபெற்றது. அதன்பின்பு ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தலைவர் பிரதீப் டாம் செரியன் முன்னிலை வகித்து பேசினார்.

    • திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் மற்றும் இந்திய மருத்துவர் சங்கம் திண்டுக்கல் கிளை சார்பாக உலக இதய நாள் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.
    • உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வதால் இதயத்தை பாதுகாக்கலாம் என்பதை வலியுறுத்தும் வண்ணம் பேரணி நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் மற்றும் இந்திய மருத்துவர் சங்கம் திண்டுக்கல் கிளை சார்பாக உலக இதய நாள் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    எம்.எஸ்.பி பள்ளி வளாகத்தில் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் எம்.எஸ்.பி பள்ளி தாளாளர் முருகேசன், திண்டுக்கல் மருத்துவகல்லூரி டீன் வீரமணி, இந்திய மருத்துவசங்க தலைவர் மகாலட்சுமி, செயலாளர் ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, தடகளசங்க தலைவர் துரை, செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மினிமாரத்தான் மாநில அளவில் நடைபெற்றதால் ஊட்டி, ராஜபாளையம், சேலம், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து போட்டியாளர்கள் வந்திருந்தனர். சிறுவயது முதல் 90 வயது வரையான முதியவர்களும் இதில் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் ஜி.டி.என் சாலை, ரவுண்டுரோடு, பஸ்நிலையம், பெரியகடைவீதி, வாணிவிலாஸ், வடக்குரதவீதி, தாடிக்கொம்பு சாலை வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 12 கி.மீ தூரம் நடைபெற்றது.

    பெண்கள் பிரிவில் சுமார் 7 கி.மீ கடந்து மாரத்தான் போட்டி திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவுபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட வனஅலுவலர் பிரபு பரிசுகளை வழங்கினார். ஆண்களுக்கு ரூ.15ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம் எனவும், பெண்களுக்கு ரூ.10ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5ஆயிரம் மற்றும் இருபிரிவில் 4 முதல் 10 இடம் பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.1000 ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வதால் இதயத்தை பாதுகாக்கலாம் என்பதை வலியுறுத்தும் வண்ணம் பேரணி நடைபெற்றது.

    தூத்துக்குடியில் ஆண், பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று ஓடினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஆண், பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை உதவி கலெக்டர் (பயிற்சி) அனு தொடங்கி வைத்தார்.

    ஆண்களுக்கான போட்டி பீச்ரோடு ரெயில்வே கேட் அருகில் இருந்தும், பெண்களுக்கான போட்டி ரோச் பூங்காவில் இருந்தும் தொடங்கி, காமராஜ் கல்லூரியில் முடிவடைந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆண்கள், பெண்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ஆண்களுக்கான மினிமாரத்தான் போட்டியில் ஊட்டியை சேர்ந்த நிகில்குமார் முதல் இடத்தையும், திண்டுக்கல்லை சேர்ந்த கற்குவேல் என்ற பிரதீப் 2-வது இடத்தையும், பிரசாத் 3-வது இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன் பட்டியை சேர்ந்த மாரிசெல்வி முதல் இடத்தையும், முத்துசெல்வி 2-வது இடத்தையும், ராதிகா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 2 கிராம் தங்க நாணயமும், 2-வது பரிசாக 1 கிராம் தங்க நாணயமும், 3-வது பரிசாக ½ கிராம் தங்க நாணயமும் மற்றும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை உதவி கலெக்டர் (பயிற்சி) அனு வழங்கினார்.

    இந்த போட்டியில் கலந்து கொண்ட 300 ஆண்கள் மற்றும் 110 பெண்கள் அனைவருக்கும் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த பரிசளிப்பு விழாவில் காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், பழைய மாணவர்கள் சங்க பொறுப்பாளர்கள் ரமேஷ்குமார், செந்தில்நடராஜன், குருசாமி, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    ×