search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக இதய நாள் விழிப்புணர்வு மினி மாரத்தான்"

    • திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் மற்றும் இந்திய மருத்துவர் சங்கம் திண்டுக்கல் கிளை சார்பாக உலக இதய நாள் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.
    • உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வதால் இதயத்தை பாதுகாக்கலாம் என்பதை வலியுறுத்தும் வண்ணம் பேரணி நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் மற்றும் இந்திய மருத்துவர் சங்கம் திண்டுக்கல் கிளை சார்பாக உலக இதய நாள் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    எம்.எஸ்.பி பள்ளி வளாகத்தில் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் எம்.எஸ்.பி பள்ளி தாளாளர் முருகேசன், திண்டுக்கல் மருத்துவகல்லூரி டீன் வீரமணி, இந்திய மருத்துவசங்க தலைவர் மகாலட்சுமி, செயலாளர் ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, தடகளசங்க தலைவர் துரை, செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மினிமாரத்தான் மாநில அளவில் நடைபெற்றதால் ஊட்டி, ராஜபாளையம், சேலம், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து போட்டியாளர்கள் வந்திருந்தனர். சிறுவயது முதல் 90 வயது வரையான முதியவர்களும் இதில் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் ஜி.டி.என் சாலை, ரவுண்டுரோடு, பஸ்நிலையம், பெரியகடைவீதி, வாணிவிலாஸ், வடக்குரதவீதி, தாடிக்கொம்பு சாலை வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 12 கி.மீ தூரம் நடைபெற்றது.

    பெண்கள் பிரிவில் சுமார் 7 கி.மீ கடந்து மாரத்தான் போட்டி திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவுபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட வனஅலுவலர் பிரபு பரிசுகளை வழங்கினார். ஆண்களுக்கு ரூ.15ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம் எனவும், பெண்களுக்கு ரூ.10ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5ஆயிரம் மற்றும் இருபிரிவில் 4 முதல் 10 இடம் பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.1000 ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வதால் இதயத்தை பாதுகாக்கலாம் என்பதை வலியுறுத்தும் வண்ணம் பேரணி நடைபெற்றது.

    ×