search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MG Motors"

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முற்றிலும் புதிய முகப்பு தோற்றம் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    எம்ஜி ஹெக்டார் மாடல் இந்திய சந்தையில் பிரபலமான மிட்-சைஸ் எஸ்யுவி மாடலாக விளங்குகிறது. டாடா ஹேரியர், ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா XUV700, கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு எம்ஜி ஹெக்டார் போட்டியாக அமைகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டை சமீபத்தில் தான் எம்ஜி மோட்டார்ஸ் உறுதிப்படுத்தியது. மேலும் இந்த கார் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகும் என தெரிகிறது.

    இந்த நிலையில், புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த முறை ஹெக்டார் மாடல் எவ்வித மறைப்பும் இன்றி தெளிவாக காட்சியளிக்கிறது. அதன்படி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் அதிக மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அளவில் பெரிய டைமண்ட் மெஷ் கிரில், க்ரோம் சரவுண்ட்கள் உள்ளது.

    இத்துடன் அதிரடியாக காட்சியளிக்கும் பம்ப்பர்கள், புதிய முக்கோன வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் ஹவுசிங் உள்ளது. இதே போன்ற செட்டப் ஹெக்டார் பிளஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் தற்போதைய மாடலில் இருப்பதை போன்ற டேடைம் ரன்னிங் லேம்ப்கள் உள்ளன. இவை புதிய முன்புற கிரிலின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் புதிய எல்இடி டெயில்லைட்கள், மேம்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    உள்புறம் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 14 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, எம்ஜி நிறுவனத்தின் நெக்ஸ்ட்-ஜென் ஐ ஸ்மார்ட் டெக் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ரிவைஸ்டு டேஷ்போர்டு லே-அவுட், D-வடிவ ஏசி வெண்ட்கள் வழங்கப்படுகிறது.

    இந்த காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஏராளமான ஏர்பேக், ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    Photo Courtesy: MotorBeam

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் எம்ஜி காம்பேக்ட் EV அறிமுகம் செய்யப்படலாம்.

    எம்ஜி நிறுவனம் ஏர் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக சமீபத்தில் தான் அறிவித்தது. இந்த நிலையில், புதிய எம்ஜி ஏர் EV மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களை மோட்டார்பீம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    புதிய ஏர் EV மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். இது இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் வாகனமாக இருக்கும் என தெரிகிறது. தற்போது இதே மாடல் வுலிங் ஏர் EV பெயரில் இந்தோனேசிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாடலின் தோற்றம் அதன் இந்தோனேசிய வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த சிறிய EV மாடலின் வீல்பேஸ் 2010mm ஆகும். இந்த காரின் நீளம் 2.9 மீட்டர்கள் ஆகும். இதில் 20 கிலோவாட் ஹவர் முதல் 25 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படலாம்.

    எம்ஜி ஏர் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 150 முதல் 200 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் முன்புற வீல் டிரைவ் கொண்ட மாடல் 40 ஹெச்பி எலெக்ட்ரிக் பவர்டிரெயின் மற்றும் ஒற்றை மோட்டார் வழங்கப்படுகிறது. இதன் பேட்டரி பேக் டாடா ஆட்டோகாம்ப் வழங்கும் என கூறப்படுகிறது.

    இரண்டு கதவுகள் கொண்ட எம்ஜி ஏர் EV மாடலில் நான்கு பேர் அமரும் இருக்கை அமைப்பு வழங்கப்படுகிறது. இதன் டேஷ்போர்டில் டூயல் 10.25 இன்ச் ஸ்கிரீன்கள் உள்ளன. இவற்றில் ஒன்று இன்போடெயின்மெண்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போன்றும் செயல்படுகின்றன.

    இந்திய சந்தையில் புதிய எம்ஜி ஏர் EV மாடலின் விலை ரூ. 10 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. நகர பயன்பாட்டுக்காக புது கார் வாங்குவோரை குறிவைத்து இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் வர்த்தக பிரிவிலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Photo Courtesy: MotorBeam

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் 2023 ஹெக்டார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஹெக்டார் மாடல் அதிகளவு மாற்றங்கள், மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2023 ஹெக்டார் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் 2023 எம்ஜி ஹெக்டார் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது வெளியீடு தேதி உறுதியாகி இருக்கிறது.

    புதிய எம்ஜி ஹெக்டார் மாடல் அளவில் பெரியதாகவும், பிரம்மாண்ட தோற்றம் கொண்டிருக்கும். இதன் முன்புறம் டைமண்ட் மெஷ் ரேடியேட்டர் கிரில், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படுகிறது. இந்த மாடலிலும் ஸ்ப்லிட் ஹெட்லைட், டிஆர்எல் செட்டப் வழங்கப்படுகிறது. எனினும், இதன் டிசைன் சிறிதளவு மாற்றப்படும் என தெரிகிறது.

    காரின் உள்புறம் புதிய டேஷ்போர்டு, ரிடிசைன் செய்யப்பட்ட ஏர்கான் வெண்ட்கள் உள்ளன. அப்பர் மற்றும் லோயர் டேஷ்போர்டுகள் இன்செட் செக்‌ஷன் மூலம் பிரிக்கப்பட்டுள்ளன. இருபுறங்களிலும் மென்மையான மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டு, டபுள் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. 2019 வாக்கில் அறிமுகமாகும் போது ஹெக்டார் மாடல் ஏராளமான அம்சங்களுடன் புது அத்தியாயத்தை கட்டமைத்தது.

    தற்போது புதிய மாடலில் மேலும் பெரிய 14 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. முந்தைய மாடலில் 10.4 இன்ச் சிஸ்டம் வழங்கப்பட்டு இருந்தது. இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தில் ஏராளமான அம்சங்கள், புதிய செயலிகள், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் புதிய ஹெக்டார் மாடலில் மேம்பட்ட ADAS சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது.

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் புது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார் மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    டாடா டியாகோ EV மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், எம்ஜி நிறுவனம் காம்பேக்ட் எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    புதிய எலெக்ட்ரிக் கார் கொண்டு விலை அடிப்படையில் போட்டியை ஏற்படுத்தும் திட்டம் இல்லை என எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் எம்ஜி சிட்டி EV என அழைக்கப்படலாம். 2023 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இதைத் தொடர்ந்து எம்ஜி சிட்டி EV மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ஏற்கனவே ஆசிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் வுலிங் ஏர் EV மாடலை அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்ட காராக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சாலைகளில் எம்ஜி சிட்டி EV சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் புதிய சிட்டி EV மாடல் ஏராளமான மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடலை போன்றே எம்ஜி சிட்டி EV நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. எனினும், விலையை பொருத்தவரை எம்ஜி சிட்டி EV டாடா காருக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படாது. எம்ஜி மோட்டார் இந்திய தலைவர மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா பயணிகள் வாகன பிரிவில் குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • விரைவில் வெளியிட இருக்கும் மைக்ரோ எலெக்ட்ரிக் எஸ்யுவி காரின் கான்செப்ட்-ஐ எம்ஜி மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

    ப்ரிட்டனை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தியாளர் எம்ஜி மோட்டார்ஸ்-இன் கிளை நிறுவனமான பௌஜூன் புதிதாக மைக்ரோ எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. தற்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதே மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இந்த கார் எம்ஜி பிராண்டிங்கில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    சீனாவில் அறிமுகமாகி இருக்கும் ஆல்-எலெக்ட்ரிக் மைக்ரோ எஸ்யுவி கான்செப்ட் பிரபல எஸ்யுவி மாடல்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த கான்செப்ட் ஒட்டுமொத்த தோற்றம் சுசுகி ஜிம்னி, போர்டு பிரான்கோ மற்றும் டொயோட்டாவின் எப்ஜெ குரூயிசர் மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் வெளிப்புறம் எதிர்கால டிசைன் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    காரின் வெளிப்புறம் டூயல் டோன் நிறங்கள், நான்கு ஸ்ட்ரிப்கள் அடங்கிய எல்இடி டே-டைம் ரன்னிங் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ரக்கட் பாடிவொர்க், முன்புறம் இரண்டு டோயிங் ஹூக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் மொத்தத்தில் இரண்டு கதவுகளே வழங்கப்படுகின்றன. இதன் மூலம் காரின் விலையை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகன சோதனை இந்திய சாலைகளில் நடைபெற்றது. இந்த கார் E230 எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது வுலிங் ஏர் எலெக்ட்ரிக் வாகனத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. வுலிங் என்பதும் எம்ஜி நிறுவனத்தின் துணை பிராண்டு ஆகும். வுலிங் பிராண்டின் ஏர் மாடல் சமீபத்தில் தான் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    • எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • இரு கார் மாடல்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் சில தினங்களுக்கு முன் எம்ஜி ஆஸ்டர் மாடல் விலையை உயர்த்தியது. தற்போது ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்கள் விலை உயர்த்தப்படுவதாக எம்ஜி மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது. இம்முறை இரு கார்களின் விலை ரூ. 28 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

    விலை உயர்வின் படி எம்ஜி ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் டூயல் டோன் வேரியண்ட்கள் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இது தவிர காரின் மற்ற வேரியண்ட்கள் விலை ரூ. 25 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 28 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     எம்ஜி ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் பெட்ரோல் என்ஜின் 141 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியுன் செய்யப்பட்டு உள்ளது. டீசல் என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல், CVT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசரையும் எம்ஜி மோட்டார் வெளியிட்டு உள்ளது.

    • எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆஸ்டர் மாடல் விலையை திடீரென மாற்றி இருக்கிறது.
    • ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக எம்ஜி ஆஸ்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆஸ்டர் மிட்-சைஸ் எஸ்யுவி விலையை உயர்த்தி இருக்கிறது. புது மாற்றத்தின் படி எம்ஜி ஆஸ்டர் மாடல் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. விலை உயர்வு எம்ஜி ஆஸ்டர் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

    விலை உயர்வின் படி எம்ஜி ஆஸ்டர் தற்போது ரூ. 10 லட்சத்து 32 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 23 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் எம்ஜி ஆஸ்டர் மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.


    எம்ஜி ஆஸ்டர் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் 138 ஹெச்பி பவர், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் 108 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பரீடு மேனுவல் மற்றும் CVT யூனிட்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக எம்ஜி ஆஸ்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் புது குளோஸ்டர் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்தியாவில் லெவல் 1 ADAS வசதியுடன் அறிமுகமான முதல் எஸ்யுவி என்ற பெருமையை எம்ஜி குளோஸ்டர் பெற்று இருக்கிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் மேம்பட்ட குளோஸ்டர் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய பிளாக்‌ஷிப் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் டொயோட்டா பார்ச்சூனர், இசுசு MU-X, ஸ்கோடா கோடியக் மற்றும் ஜீப் மெரிடியன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்திய சந்தையில் 2020 அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமான நிலையில், லெவல் 1 ADAS வசதியுடன் அறிமுகமான முதல் எஸ்யுவி என்ற பெருமையை எம்ஜி குளோஸ்டர் பெற்று இருக்கிறது.

    தற்போதைய டீசரில் மேம்பட்ட குளோஸ்டர் மாடலுக்கான விளம்பர வாக்கியங்கள் தவிர வேறு எந்த விவரமும் தெளிவாக தெரியவில்லை. மேலும் டீசருக்கான தலைப்பில் இந்த கார் 4x4 வசதி, ADAS பாதுகாப்பு கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் சிறிதளவு காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேக்சஸ் D90 மாடலை தழுவி உருவாக்கப்பட்ட ஃபுல் சைஸ் எஸ்யுவி மாடல் ஆகும்.


    புதிய குளோஸ்டர் மாடலில் லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆஸ்டர் மிட் சைஸ் எஸ்யுவி மாடலிலும் இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 12.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டெட் தொழில்நுட்பம், ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, பானரோமிக் சன்ரூப், ஆறு ஏர்பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் தற்போதைய எம்ஜி குளோஸ்டர் மாடலின் விலை ரூ. 31 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் இருவித டியூனிங்கில் கிடைக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் AT மற்றும் ஆல் வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    • 2022 எம்ஜி ஹெக்டார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய எம்ஜி ஹெக்டார் மாடல் 14 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய ஹெக்டார் மாடலுக்கான டீசர் வீடியோவை வெளியிட்டு உள்ளது. இதில் புதிய காரின் வெளிப்புற டிசைன் எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் புதிய எம்ஜி ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.

    2022 எம்ஜி ஹெக்டார் மாசலில் குரோம்-ஸ்டட் செய்யப்பட்ட கிரில் வழங்கப்பட இருக்கிறது. இது அர்கைல் சார்ந்த டைமண்ட் மெஷ் கிரில் போன்ற வடிவமைப்பு ஆகும். இத்துன் ரி-வொர்க் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், புதிய ஏர் டேம் மற்றும் ஸ்கிட் பிளேட் உள்ளது. காரின் உள்புறம் 14 இன்ச் அளவில் செங்குத்தாக பொருத்தப்பட்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு உள்ளது.


    புதிய எம்ஜி ஹெக்டார் மாடல், தற்போதைய வெர்ஷனுடன் சேர்த்தே விற்பனை செய்யப்பட இருக்கிறது. எம்ஜி ஹெக்டார் புது வெர்ஷனிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் மோட்டார் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது.

    அறிமுகமானதும் புதிய 2022 எம்ஜி ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் டாடா ஹேரியர் மற்றும் மஹிந்திரா XUV700 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் சிறிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த காரில் டாடா ஆட்டோகாம்ப் நிறுவன பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார் மாடலின் சோதனையை இந்திய சந்தையில் துவங்கி இருக்கிறது. புதிய எம்ஜி காம்பேக்ட் எலெக்ட்ரிக் வாகனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் உலிங் ஏர் EV மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த மாடல் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

    தற்போதைய ஸ்பை படங்களின் படி புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார் இரண்டு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என உறுதியாகி இருக்கிறது. எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. இதன் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.


    Photo Courtesy: Autocarindia

    அளவீடுகளின் படி புதிய எம்ஜி காம்பேக்ட் கார் மாருதி ஆல்டோவை விட அளவில் சிறியது ஆகும். இந்தோனேசிய சந்தையில் விற்பனை செய்யப்படும் மாடலில் 12 இன்ச் ஸ்டீல் வீல் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் மாடலில் அலாய் வீல்கள் வழங்கப்படலாம்.

    எம்ஜி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் டாடா ஆட்டோகாம்ப் நிறுவனத்தின் பேட்டரியில் இயங்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்திய சந்தையில் பிரபல எலெக்ட்ரிக் கார் மாடலாக விளங்கும் நெக்சான் EV கொண்டிருந்ததை போன்ற பேட்டரி தான் எம்ஜி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆஸ்டர் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் வினியோக திட்டத்தில் மாற்றம் செய்து இருக்கிறது.


    எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஆஸ்டர் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் விலையை அக்டோபர் 11 ஆம் தேதி அறிவித்தது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் அக்டோபர் 21 ஆம் தேதி துவங்கியது. இந்த காரில் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் பல்வேறு முதல் முறை அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    சர்வதேச சந்தையில் நிலவும் சிப் மற்றும் செமிகண்டக்டர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக எம்ஜி ஆஸ்டர் வினியோகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட தாமதம் ஆகும் என எம்ஜி மோட்டார் இந்தியா மூத்த அதிகாரி கவுரவ் குப்தா தெரிவித்தார். 

     எம்ஜி ஆஸ்டர்

    இந்தியாவில் எம்ஜி ஆஸ்டர் ஸ்டைல் மற்றும் சூப்பர் வேரியண்ட்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. புதிய ஆஸ்டர் மாடல் வினியோகம் பற்றிய அப்டேட்களை மை எம்ஜி ஆப் அல்லது அருகாமையில் உள்ள விற்பனை மையங்களில் அறிந்து கொள்ளலாம். 

    எம்ஜி மோட்டார் நிறுவனம் முதற்கட்டமாக 5 ஆயிரம் ஆஸ்டர் யூனிட்களை இந்த ஆண்டு இறுதிக்குள் வினியோகம் செய்ய திட்டமிட்டு இருந்தது. எனினும், இவை அடுத்த ஆண்டு தான் வினியோகம் செய்யப்படும் என தெரிகிறது.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் வினியோகத்தை துவங்கியது. முன்னதாக இந்த மாடல் ரூ. 9.78 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த வாரம் இந்த காருக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவு துவங்கிய முதல் நாளிலேயே 5 ஆயிரம் யூனிட்கள் விற்றுத்தீர்ந்தன.

    இந்த நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் யூனிட்களில் முதல் 500 யூனிட்கள் ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது.

     எம்ஜி ஆஸ்டர்

    புதிய ஆஸ்டர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை முறையே 110 பி.எஸ். திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை மற்றும் 140 பி.எஸ். திறன், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன.

    எம்ஜி ஆஸ்டர் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் 27 பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் டாப் எண்ட் மாடல்களில் 49 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
    ×