search icon
என் மலர்tooltip icon

    கார்

    ஹெக்டார் விலையை திடீரென உயர்த்திய எம்ஜி மோட்டார்ஸ்
    X

    ஹெக்டார் விலையை திடீரென உயர்த்திய எம்ஜி மோட்டார்ஸ்

    • எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • இரு கார் மாடல்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் சில தினங்களுக்கு முன் எம்ஜி ஆஸ்டர் மாடல் விலையை உயர்த்தியது. தற்போது ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்கள் விலை உயர்த்தப்படுவதாக எம்ஜி மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது. இம்முறை இரு கார்களின் விலை ரூ. 28 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

    விலை உயர்வின் படி எம்ஜி ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் டூயல் டோன் வேரியண்ட்கள் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இது தவிர காரின் மற்ற வேரியண்ட்கள் விலை ரூ. 25 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 28 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    எம்ஜி ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் பெட்ரோல் என்ஜின் 141 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியுன் செய்யப்பட்டு உள்ளது. டீசல் என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல், CVT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசரையும் எம்ஜி மோட்டார் வெளியிட்டு உள்ளது.

    Next Story
    ×