search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    2023 எம்ஜி ஹெக்டார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு
    X

    2023 எம்ஜி ஹெக்டார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் 2023 ஹெக்டார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஹெக்டார் மாடல் அதிகளவு மாற்றங்கள், மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2023 ஹெக்டார் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் 2023 எம்ஜி ஹெக்டார் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது வெளியீடு தேதி உறுதியாகி இருக்கிறது.

    புதிய எம்ஜி ஹெக்டார் மாடல் அளவில் பெரியதாகவும், பிரம்மாண்ட தோற்றம் கொண்டிருக்கும். இதன் முன்புறம் டைமண்ட் மெஷ் ரேடியேட்டர் கிரில், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படுகிறது. இந்த மாடலிலும் ஸ்ப்லிட் ஹெட்லைட், டிஆர்எல் செட்டப் வழங்கப்படுகிறது. எனினும், இதன் டிசைன் சிறிதளவு மாற்றப்படும் என தெரிகிறது.

    காரின் உள்புறம் புதிய டேஷ்போர்டு, ரிடிசைன் செய்யப்பட்ட ஏர்கான் வெண்ட்கள் உள்ளன. அப்பர் மற்றும் லோயர் டேஷ்போர்டுகள் இன்செட் செக்‌ஷன் மூலம் பிரிக்கப்பட்டுள்ளன. இருபுறங்களிலும் மென்மையான மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டு, டபுள் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. 2019 வாக்கில் அறிமுகமாகும் போது ஹெக்டார் மாடல் ஏராளமான அம்சங்களுடன் புது அத்தியாயத்தை கட்டமைத்தது.

    தற்போது புதிய மாடலில் மேலும் பெரிய 14 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. முந்தைய மாடலில் 10.4 இன்ச் சிஸ்டம் வழங்கப்பட்டு இருந்தது. இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தில் ஏராளமான அம்சங்கள், புதிய செயலிகள், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் புதிய ஹெக்டார் மாடலில் மேம்பட்ட ADAS சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது.

    Next Story
    ×