search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    விரைவில் இந்தியா வரும் எம்ஜி சிட்டி EV
    X

    விரைவில் இந்தியா வரும் எம்ஜி சிட்டி EV

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் புது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார் மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    டாடா டியாகோ EV மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், எம்ஜி நிறுவனம் காம்பேக்ட் எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    புதிய எலெக்ட்ரிக் கார் கொண்டு விலை அடிப்படையில் போட்டியை ஏற்படுத்தும் திட்டம் இல்லை என எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் எம்ஜி சிட்டி EV என அழைக்கப்படலாம். 2023 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இதைத் தொடர்ந்து எம்ஜி சிட்டி EV மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ஏற்கனவே ஆசிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் வுலிங் ஏர் EV மாடலை அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்ட காராக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சாலைகளில் எம்ஜி சிட்டி EV சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் புதிய சிட்டி EV மாடல் ஏராளமான மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடலை போன்றே எம்ஜி சிட்டி EV நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. எனினும், விலையை பொருத்தவரை எம்ஜி சிட்டி EV டாடா காருக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படாது. எம்ஜி மோட்டார் இந்திய தலைவர மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா பயணிகள் வாகன பிரிவில் குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×