search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mars"

    செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஆக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது. #Mars #Oxygen #NASA
    வாஷிங்டன்:

    நாசா கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

    செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் பயணிக்கக் கூடிய கியூரியாசிட்டி ரோவரின் இலக்கு செவ்வாய் கிரகத்திலுள்ள மண் மற்றும் பாறைகளைக் குடைந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், அவற்றின் தோற்றம், அமைப்பு மற்றும் ரசாயன மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது.

    இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய மற்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுற்றுச்சூழல் எப்படி இருந்தது என்பதையும், அங்கு உயிர்களின் அடிப்படை மூலக்கூறுகளில் ஒன்றான கரி மற்றும் அதன் இதர வகைகள் இருக்கின்றனவா என்பதையும் பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிவதே கியூரியாசிட்டி ரோவரின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மிகவும் முக்கியமாக கடந்த 5 வருடங்களாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது செவ்வாய் கிரகம் குறித்த முக்கியமான உண்மையை கண்டறிந்து உள்ளது.



    கியூரியாசிட்டி மாங்கனீசு ஆக்ஸைடு கண்டுபிடிப்புடன் தொடங்கியது. இது அதிகமான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய இரசாயன கலவைகள் ஆகும்.

    செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழே உள்ள உப்பு நீர், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உருவான நுண்ணுயிரியல் வாழ்க்கைக்கு உதவுவதற்கு போதுமான ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் இருப்பதாக என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    இன்றும் கடந்த காலத்திலும் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழக்கூடிய சாத்தியக்கூறுகளை பற்றிய நமது புரிதலை இந்த கண்டுபிடிப்பு முழுமையாகப் புரட்டி போட்டு உள்ளது. இப்போது வரை நுண்ணுயிரி உயிரை காப்பாற்றுவதற்கு செவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதாக கருதப்பட்ட நிலையில், இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியின் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. #Mars #Oxygen #NASA
    செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேமித்த தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். #Curiosity #NASA
    நியூயார்க்:

    பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. 

    அமெரிக்கா கடந்த 2011-ம் ஆண்டு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம், 5 வருடங்களாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பூமிக்கு அனுப்பி உள்ளது. 

    350 மில்லியன் மைல் (560 மில்லியன் கி.மீ) பயணம் மேற்கொண்டு செவ்வாயில் ஆகஸ்ட் 6, 2012 அன்று வெற்றிகரமாக செவ்வாயில்  தரையிறங்கிய கியூரியாசிட்டி, மொத்த பணியில் 23 சதவிகிதத்தை முடித்துள்ளது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், சேமித்த தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாமல் கியூரியாசிட்டி இயக்கத்தை நிறுத்தியுள்ளது. 

    இதனை, சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளதாகவும், விண்கலத்தின் சூரிய சக்தியை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. 
    செவ்வாய் கிரகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமியை நெருங்குவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. #NASA
    லாஸ்ஏஞ்சல்ஸ்:

    பூமியின் நீள் வட்ட பாதைக்கு வெளிப்புறமாக 6 கோள்கள் உள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகம் முதலில் இருக்கிறது. 26 மாதங்களுக்கு ஒருமுறை பூமி நீள்வட்ட பாதையில் செவ்வாயை கடந்து செல்லும்.

    அதன்படி இந்த மாதம் 27-ந்தேதி முதல் செவ்வாய் கிரகத்துக்கு நேராக பூமி வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று பூமிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான தூரம் குறைகிறது. இந்த 2 கிரகங்களும் 5 கோடியே 76 லட்சம் கி.மீ. தொலைவில் வருகின்றன. இத்தகவலை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அறிவித்துள்ளது.

    பொதுவாக செவ்வாய் கிரகம் 38 கோடி கி.மீ. தூரத்தில் சுழலும் இன்று பூமிக்கு 5 கோடியே 76 லட்சம் கி.மீட்டர் நெருக்கத்தில் வருகிறது. எனவே, செவ்வாய் கிரகத்தை டெலஸ்கோப் மூலம் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



    செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் புழுதி புயல் தாக்கியது. இருந்தாலும் டெலஸ்கோப்பில் செவ்வாய் கிரகம் மிக பிரகாசமாக தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகம் இன்று பூமியை நெருங்கும் காட்சியை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் கிரிப்த் வானிலை ஆய்வு மையம் ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்புகிறது. இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு 5 கோடியே 57 லட்சம் கி.மீ. தூரத்தில் பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வந்தது. #NASA
    பல ஆண்டுகளுக்கு பின்னர் பூமியை செவ்வாய் கிரகம் மிக அருகாமையில் நெருங்கி வருவதால் இம்மாதம் 30,31 தேதிகளில் நீலவானம் செந்நிறமாக மாறப்போகும் எழில் கோலத்தை கண்டு ரசிக்கலாம்.
    ஐதராபாத்:

    சந்திரனுக்கு அடுத்தபடியாக விண்வெளித்துறை ஆய்வில் உலக நாடுகளின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ள கிரகமாக செவ்வாய் விளங்குகிறது. இந்தியாவும் தனது பங்குக்கு ‘மங்கல்யான்’ செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர் வரும் 30,31 தேதிகளில் பூமியை செவ்வாய் கிரகம் மிக அருகாமையில் நெருங்கி வருவதால் அப்போது நீலவானம் செந்நிறமாக மாறப்போகும் எழில் கோலத்தை கண்டு ரசிக்கலாம் என ஐதராபாத்தில் உள்ள பிர்லா அறிவியல் மைய இயக்குனர் டாக்டர் பி.ஜி. சித்தார்த் தெரிவித்துள்ளார்.


    செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகள் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில் சுமார் 20 கிலோ அகலம் கொண்ட குளிர் ஏரியை கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    பலகோடி ஆண்டுகளாக உறைநிலை படலமாக இருந்த செவ்வாயில் இந்த ஆய்வின் மூலம் உயிரினங்கள் உருவாகும் சாத்தியக்கூறுகள் உண்டா? என்பது சந்தேகம்தான். எனினும், செவ்வாயின் சுற்றுப்பகுதியில் நடத்திய நுண்ணுயிரியல் ஆய்வுகள் அதை உறுதிப்படுத்தவில்லை.

    ஆனால், அறிவியல்சார்ந்த நம்பிக்கைகளுக்கு மாறாக இந்த பிரபஞ்சத்தின் முதல் வாழ்க்கைகான அஸ்திவாரம் செவ்வாய் கிரகத்தில்தான் தோன்றி இருக்க வேண்டும். எனவே, நமது அடுத்தகட்ட விண்வெளி முகாம்களுக்கும், குடியிருப்புகளுக்கும் செவ்வாய்தான் சிறந்த இடமாக இருக்க முடியும். இதற்கு அங்கு காணப்படும் திரவ நீரும் நமக்கு மிக சிறந்த சாதகமான அம்சமாக அமைந்துள்ளது எனவும் டாக்டர் சித்தார்த் சுட்டிக்காட்டியுள்ளார். #Marscomes #closesttotheearth
    செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கலாம் என்பது முன்னரே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு பரந்து விரிந்த ஏரி இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். #Mars
    நியூயார்க்:

    சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிட்டி என்ற விண்கலம், அங்கு ஏரிப்படுகை போன்ற அமைப்பு இருந்ததாக முன்னர் கண்டறிந்தது. 

    இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் அனுப்பிய ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட மார்சிஸ் என்ற ராடார் கருவியின் மூலம் அங்கு ஏரி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

    செவ்வாயின் துருவ பனி முகடுகளுள்ள கிழக்குப்பகுதியில், 20 கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.



    இதற்கு முந்தைய ஆராய்ச்சிகள் செவ்வாயின் மேற்பரப்பில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தண்ணீர் பாய்வதற்கான சாத்தியமான ஆதாரங்களை கண்டறிந்திருந்தது. இந்நிலையில், முதல் முறையாக தொடர்ந்து தண்ணீர் பாய்வதற்கான ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது.

    இருப்பினும், கிரகத்தில் நிலவும் காலநிலையில் மெல்லிய வளிமண்டலத்தின் காரணமாக குளிர்ந்து விட்டதால், நீரின் பெரும்பகுதி பனிக்கட்டியாக மாறிவிட்டது.

    தண்ணீரின் அடுக்கு எவ்வளவு ஆழமாக இருக்கும் என்பதை ஆராய்ந்தறிய முடியவில்லை. ஆனால், ஆராய்ச்சிக் குழுவினர் அது குறைந்தது ஒரு மீட்டர் ஆழம் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்கள் ஆராய்ச்சியாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

    மனிதர்கள் அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 
    செவ்வாய் கிரகத்தில் கடந்த ஒரு வாரமாக வீசி வரும் மாசு கலந்து புழுதி புயலினால் ஏற்பட்ட மாற்றங்களை கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது. #NASA #MarsDustStorm #CuriosityRover

    வாஷிங்டன்:

    செவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக சமீபத்தில் நாசா தகவல் அறிவித்தது. இந்த புயலை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடிக்கும் எனவும், அந்த புயலினால் அதன் செயற்பாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்திருந்தது.

    இதனிடையே கடந்த ஒரு வாரமாக செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் வீசி வருகிறது. இந்த புழுதி புயலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதனால் கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தின் செயல்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.



    இந்நிலையில், புழுதி புயலின் காரணமாக செவ்வாய் கிரகத்தின் சில பகுதிகளில் நிறம் மாறியுள்ளது. மஞ்சள் நிறமாக இருந்து பகுதிகள் சிவப்பு நிறமாக மாறியுள்ளன. இந்த புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. #NASA #MarsDustStorm #CuriosityRover
    செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும். இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். #Mars #Earth
    சான்பிரான்சிஸ்கோ:

    சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன.

    அவ்வாறு சுற்றி வரும் செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும்.

    ஏனெனில் சூரிய கதிர்களால் பிரதிபலிக்கப்பட்டு அது பிரகாசிக்கும். இந்த தகவலை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது.

    இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக கடந்த 2003-ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வந்தது.

    தற்போது நிகழும் இந்த சம்பவம் சுமார் ஒரு வாரம் வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். #Mars #Earth
    செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த தடயங்கள் இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. #NASA #Mars
    நியூயார்க்:

    அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தில் நகர்ந்து சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் பூமியில் இருப்பது போன்று 3 பொருட்களை செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது. அவற்றில் அதிக அளவில் மீத்தேன் உள்ளது.

    பெரும்பாலும் ஒரு காலத்தில் உயிர் இருந்த பொருட்களின் மீதிகளில் தான் மீத்தேன் வாயு இருக்கும். எனவே இந்த பொருட்களுக்கு உயிர் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.



    செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியை கியூரியாசிட்டி தோண்டியிருக்கிறது. பெரிய அளவில் தோண்டாமல் வெறும் 5 செ.மீட்டர் மட்டுமே தோண்டியுள்ளது. இதை வைத்து இன்னும் பல மாதங்களுக்கு ஆய்வு செய்ய நாசா முடிவெத்துள்ளது. #NASA #Mars
    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’, முதல்முறையாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க முடிவு செய்து உள்ளது. #NASA #Helicopter #Mars
    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’, முதல்முறையாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க முடிவு செய்து உள்ளது.

    இதற்காக ஒரு குழுவினர், 4 ஆண்டு காலம் உழைத்து, சிறிய அளவிலான ஹெலிகாப்டரை வடிவமைத்து அதன் எடையை 1.8 கிலோ அளவுக்கு குறைத்து உள்ளனர்.

    இந்த ஹெலிகாப்டர் பூமியை விட 100 மடங்கு மெல்லிய செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் பறப்பதற்கு உகந்ததாக உருவாக்கப்பட்டு உள்ளது.

    இது பற்றி ‘நாசா’ நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டைன் கூறும்போது, “மற்றொரு கிரகத்தின் வான்வெளியில் ஹெலிகாப்டரை பறக்க விடுவது என்பது மெய் சிலிர்க்க வைக்கக்கூடியதாக அமைந்து உள்ளது” என்று குறிப்பிட்டார்.

    மேலும் அவர் கூறும்போது, “நமது வருங்கால அறிவியல், கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டங்களை உறுதி செய்ய இந்த ஹெலிகாப்டர் உதவும்” என்றார்.

    ‘ட்ரோன்’ என்று அழைக்கப்படக்கூடிய ஆளில்லாத விமானத்துக்கு பதிலாக பறக்க உள்ள இந்த ஹெலிகாப்டருக்கு விமானி கிடையாது.

    பூமியில் இருந்து இந்த ஹெலிகாப்டர் 5½ கோடி கி.மீ. தொலைவுக்கு பறக்கும். எனவே ‘ரிமோட் கண்ட்ரோல்’ சமிக்ஞை எதையும் அனுப்புவதற்கு முடியாது.

    2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ரோவருடன் இணைத்து அனுப்பப்படுகிற இந்த ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தை 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்று அடையும் என்று ‘நாசா’ விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.  #NASA #Helicopter #Mars
    ×