search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செவ்வாய் கிரகத்தில் பரந்து விரிந்த ஏரி - அதிகரிக்கும் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள்
    X

    செவ்வாய் கிரகத்தில் பரந்து விரிந்த ஏரி - அதிகரிக்கும் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள்

    செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கலாம் என்பது முன்னரே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு பரந்து விரிந்த ஏரி இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். #Mars
    நியூயார்க்:

    சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிட்டி என்ற விண்கலம், அங்கு ஏரிப்படுகை போன்ற அமைப்பு இருந்ததாக முன்னர் கண்டறிந்தது. 

    இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் அனுப்பிய ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட மார்சிஸ் என்ற ராடார் கருவியின் மூலம் அங்கு ஏரி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

    செவ்வாயின் துருவ பனி முகடுகளுள்ள கிழக்குப்பகுதியில், 20 கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.



    இதற்கு முந்தைய ஆராய்ச்சிகள் செவ்வாயின் மேற்பரப்பில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தண்ணீர் பாய்வதற்கான சாத்தியமான ஆதாரங்களை கண்டறிந்திருந்தது. இந்நிலையில், முதல் முறையாக தொடர்ந்து தண்ணீர் பாய்வதற்கான ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது.

    இருப்பினும், கிரகத்தில் நிலவும் காலநிலையில் மெல்லிய வளிமண்டலத்தின் காரணமாக குளிர்ந்து விட்டதால், நீரின் பெரும்பகுதி பனிக்கட்டியாக மாறிவிட்டது.

    தண்ணீரின் அடுக்கு எவ்வளவு ஆழமாக இருக்கும் என்பதை ஆராய்ந்தறிய முடியவில்லை. ஆனால், ஆராய்ச்சிக் குழுவினர் அது குறைந்தது ஒரு மீட்டர் ஆழம் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்கள் ஆராய்ச்சியாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

    மனிதர்கள் அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×