search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LKG"

    பெரிய படத்துக்கு மட்டும்தானா, எங்களுக்கு இல்லையா என்று ஆர்ஜே பாலாஜி, அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். #LKG #RJBalaji
    ஆர்ஜே பாலாஜி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எல்.கே.ஜி’. இயக்குனர் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ளார். சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார்கள். 

    இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட இருப்பதாக அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி. அந்த போஸ்டரில் அவரைச் சுற்றி இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி மற்றும் இலவச அரிசி ஆகியவை இருக்கிறது. அவை அனைத்திலுமே ஆர்.ஜே.பாலாஜியின் ஸ்டிக்கர் இடம்பெற்றிருக்கிறது. மேலும் அந்த போஸ்டரில் இலவச வேட்டி சேலையுடன் பொங்கலுக்கு வர்றோம் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.



    சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில் அரசு கொடுத்த இலவசங்களை விமர்சித்திருப்பதாக கூறி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், படத்தின் போஸ்டரிலேயே இலவசங்களை விமர்சித்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. மேலும், மதிப்பிற்குரிய அரசியல்வாதிகளே, பெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ் என்றும் கூறியிருக்கிறார்.
    அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் நடந்த ஒரு விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து பாலித்தீன் பயன்பாடு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். இதற்கான நடவடிக்கையை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எடுத்து வருகிறார். விஜயதசமியை முன்னிட்டு எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. சேர்க்கை எண்ணிக்கை பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.



    கிராமப்புறங்களில் உள்ள மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஏழை-எளிய மக்களுக்காகத்தான் பள்ளிக்கல்வித்துறை இயங்கிக்கொண்டு இருக்கிறது. வசதி படைத்தவர்கள் தனியார் பள்ளிகளுக்குத்தான் செல்கிறார்கள். பொதுமக்களை பொறுத்தவரையில் தங்கள் குழந்தைகள் அனைவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற மோகம் இருக்கிறது.

    இதுதொடர்பாக சமூகநலத்துறை அமைச்சருடன் நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து தமிழக அங்கன்வாடிகளில் படிக்கும் 1 லட்சம் மாணவ-மாணவிகள் அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்ப்பதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.  #MinisterSengottaiyan
    பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வழிகாட்டுதலின்படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழ்நாட்டில் பள்ளி முன் பருவ கல்விக்கான பாடத் திட்டத்தை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரித்துள்ளது. #MinisterSengottaiyan
    சென்னை:

    மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி முன் பருவ கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் பள்ளி முன் பருவ கல்விக்கான திட்டத்தினை வடிவமைத்தது.



    பிரிகேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி.க்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வழிகாட்டுதலின் படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழ்நாட்டில் பள்ளி முன் பருவ கல்விக்கான பாடத் திட்டத்தை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரித்துள்ளது. இப்பாடத் திட்டம் www.tnscert.org என இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    வல்லுனர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இப்பாடத் திட்டத்தினை பார்வையிட்டு தங்களது கருத்துக்களை வருகின்ற 30-ந்தேதிக்குள் கடிதம் வழியாகவோ அல்லது awpb2018@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ தெரிவிக்கும்படி இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார். #MinisterSengottaiyan

    விஜய், அஜித் என்று பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர முடியவில்லையே என்ற வருத்தம் தனக்கு இல்லை என்றும், என்னோட பாதை வேறு, ஆர்வம் வேறு என்றும் பிரியா ஆனந்த் கூறியிருக்கிறார். #PriyaAnand
    ‘எதிர் நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ என்று வேகமாக வளர்ந்து வந்த பிரியா ஆனந்தை சில காலமாக தமிழில் பார்க்க முடியவில்லை. தற்போது ஆர்.ஜே. பாலாஜிக்கு ஜோடியாக எல்.கே.ஜி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    விஜய், அஜித் என்று பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர முடியவில்லையே என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா? என்று கேட்கப்பட்டதற்கு ‘ஒரு வி‌ஷயத்தை எதிர்பார்த்து அது நடக்காதபோதுதானே வருத்தம் வரும். நான் அப்படி நினைத்ததும் இல்லை, வருத்தப்பட்டதும் இல்லை. என்னோட பாதை வேறு, ஆர்வம் வேறு. நான் எப்போதுமே படங்களின் எண்ணிக்கை சம்பளத்துக்காக மட்டும் நடித்ததில்லை. சினிமாவை நேசித்துதான் சினிமாவுக்குள் வந்தேன்.



    எனக்குப் பல மொழிகள் தெரியும்; மொழி எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. எந்த மொழிப் படமா இருந்தாலும் அது என் மனதுக்குப் பிடிக்கவேண்டும். எனக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டும்.

    அதனால் ஒரு வருடத்துக்கு ஒரு மொழியில் என் ஒருசில படங்கள்தான் வெளியாகிறதே என்று நான் ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை. நடிப்பைத் தாண்டி எதையும் தலையில ஏத்திக்க மாட்டேன்’ என்று கூறி இருக்கிறார். #PriyaAnand

    அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. தொடங் கும் முடிவு சட்டசபையில் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #minister #sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.40 லட்சம் செலவில் அவசர சிகிச்சை பிரிவு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குடிமராமத்து என்ற பெயரில் இதுவரை கண்டிராத வகையில் தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. மழைநீர் சேமிப்பு முறையில் புதிய புரட்சியை தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் 5 வயது நிரம்பிய மாணவர் களை மட்டுமே பள்ளிக்கூடங்களில் சேர்க்க முடியும் என்று இந்திய அரசியலைப்பு சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் தனியார் பள்ளிக்கூடங்களில் 3 வயதில் இருந்து பயிற்சி அளிக்கிறார் கள். இதுபற்றி அரசு ஆய்வு செய்துகொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக என்ன முடிவு எடுக்கப்படும் என்பது சட்டசபையில் தெரிவிக்கப்படும். வெளியில் கருத்து கூற இயலாது.



    தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டண விவரங்களை பள்ளிக்கூடங்களின் முன்பு வைக்க வேண்டும் என்ற அறிவிப்பு அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.  #minister #sengottaiyan
    பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி - ப்ரியா ஆனந்த் நடிக்கவிருக்கும் அரசியல் படத்தில், நாஞ்சில் சம்பத்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #LKG #RJBalaji #NanjilSampath
    ம.தி.மு.க.வில் பேச்சாளராகவும் வைகோவுக்கு நெருக்கமாகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத்.

    பின்னர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். பேச்சாளராகவும் துணை கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்து வந்தார்.

    ஜெயலலிதா இவருக்கு இன்னோவா கார் பரிசளித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை கடுமையாக விமர்சித்தவர் பின்னர் அவரிடமே தஞ்சம் ஆனார்.

    தினகரனின் ஆதரவாளராக தொடர்ந்து பயணித்த நாஞ்சில் சம்பத் தினகரன் கட்சி தொடங்கும்போது கட்சி பெயரில் திராவிடம் இல்லை என்று அவரை விட்டு வெளியேறினார்.



    அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நாஞ்சில் சம்பத் சினிமாவில் நடிக்கிறார். காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அரசியலை கிண்டல் செய்யும் படம் ஒன்றில் நடிக்கிறார்.

    எல்.கே.ஜி. என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க பிரபு என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். பிரியா ஆனந்த் கதாநாயகி. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு தந்தையாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.

    நிஜ வாழ்க்கையில் அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் படத்திலும் அரசியல்வாதியாகவே வருகிறார். நடப்பு அரசியலை முழுக்க முழுக்க கிண்டல் செய்யும் படமாக தயாராகிறது எல்.கே.ஜி.



    நாஞ்சில் சம்பத்துக்கு இதற்கு முன்பே சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. பெரிய இயக்குனர்கள் அழைத்த போதே அரிதாரம் பூச மாட்டேன் என்று சொல்லி மறுத்தவர் அரசியலை விட்டு விலகிய பின் சினிமாவில் நடிக்க சம்மதித்துள்ளார். #LKG #RJBalaji #NanjilSampath

    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களுள் ஒருவரான ஆர்.ஜே.பாலாஜி, அரசியலில் நுழையப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #RJBalaji #LKG
    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்போவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆர்.ஜே.பாலாஜியும் சமீபத்தில் அவரது டுவிட்டர் படத்தை, கட்சிக் கொடி போல் மாற்றினார்.

    ஆர்.ஜே.பாலாஜி ஏன் இப்படி செய்கிறார்? உண்மையிலேயே அரசியலில் நுழையவிருக்கிறாரா, அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தனது அடுத்த பயணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஆர்.ஜே.பாலாஜி நேற்று அறிவித்திருந்தார். 

    அதன்படி, ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக `எல்கேஜி' என்றபடத்தில் நடிக்கிறார். பிரபு இயக்கும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.  இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியா ஆனந்தும் நடிக்கிறார். 



    வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உரிமையாளர் டாக்டர்.ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். விது அய்யன்னா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். அரசியலை மையப்படுத்தி காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது.

    இதுகுறித்து ஆர்.ஜே.பாலாஜி அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

    `நான் அரசியலுக்கு வருகிறேன் திரைப்படத்தின் வாயிலாக. LKG' என்று குறிப்பிட்டிருக்கிறார். #RJBalaji #LKG

    ×