என் மலர்
சினிமா

அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களுள் ஒருவரான ஆர்.ஜே.பாலாஜி, அரசியலில் நுழையப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #RJBalaji #LKG
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்போவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆர்.ஜே.பாலாஜியும் சமீபத்தில் அவரது டுவிட்டர் படத்தை, கட்சிக் கொடி போல் மாற்றினார்.
ஆர்.ஜே.பாலாஜி ஏன் இப்படி செய்கிறார்? உண்மையிலேயே அரசியலில் நுழையவிருக்கிறாரா, அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தனது அடுத்த பயணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஆர்.ஜே.பாலாஜி நேற்று அறிவித்திருந்தார்.
அதன்படி, ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக `எல்கேஜி' என்றபடத்தில் நடிக்கிறார். பிரபு இயக்கும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியா ஆனந்தும் நடிக்கிறார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உரிமையாளர் டாக்டர்.ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். விது அய்யன்னா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். அரசியலை மையப்படுத்தி காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது.
இதுகுறித்து ஆர்.ஜே.பாலாஜி அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
`நான் அரசியலுக்கு வருகிறேன் திரைப்படத்தின் வாயிலாக. LKG' என்று குறிப்பிட்டிருக்கிறார். #RJBalaji #LKG
Next Story