search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kawasaki"

    • கவாசகி நிறுவனம் விரைவில் புதிய வெர்சிஸ் 650 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடல் ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வந்தது.

    கவாசகி நிறுவனம் சில தினங்களுக்கு முன் தான் கவாசகி நின்ஜா 400 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நிலையில், மற்றொரு புது மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் கவாசகி நிறுவனம் துவங்கி விட்டது. இம்முறை கவாசகி நிறுவனம் சற்றே பெரிய வெர்சிஸ் 650 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    புதிய கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் ஸ்பை படங்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், புதிய கவாசகி வெர்சிஸ் 650 மாடல் ஜூலை மாத வாக்கில் விற்பனையகங்களை வந்தடையும் என கூறப்படுகிறது. மேம்பட்ட கவாசகி வெர்சிஸ் 650 மாடலில் புதிய ஃபேரிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தோற்றத்தில் கவாசகி வெர்சிஸ் 1000 போன்றே காட்சியளிக்கிறது.


    இத்துடன் ரிவைஸ்டு ஹெட்லைட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிளை-ஸ்கிரீன், கூர்மையாக காட்சியளிக்கும் என்ஜின் கவர் உள்ளது. இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் 649சிசி, லிக்விட் கூல்டு, ட்வின் சிலிடண்ர் என்ஜின் வழஙகப்படும் என தெரிகிறது.

    இந்த என்ஜின் 66 பி.எஸ். பவர், 61 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் கவாசகி டிராக்‌ஷன் கண்ட்ரோல், டூ-லெவல் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதனை முழுமையாக ஸ்விட்ச் ஆப் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    புதிய வெர்சிஸ் 650 மாடலில் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடல் தொடர்ந்து CKD முறையிலேயே இந்தியா கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. புதிய கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் விலை முந்தைய மாடலை விட ரூ. 50 ஆயிரத்தில் துவங்கி ரூ. 70 ஆயிரம் வரை அதிகரிக்கப்படலாம். தற்போதைய கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 15 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    கவாசகி நிறுவனம் நின்ஜா 300 மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



    கவாசகி நிறுவனம் தனது நின்ஜா 300 மோட்டார்சைக்கிளை மெட்டாலிக் மூன் டஸ்ட் கிரே மற்றும் லைம் கிரீன் என இருவித நிறங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இரண்டு புதிய நிறங்கள் தவிர புளு மற்றும் கிரீன் என இருவித நிறங்களில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் கவாசகி நின்ஜா 300 மாடல் தற்சமயம் நான்கு நிறங்களில் கிடைக்கிறது. எனினும், இதன் விலை 2.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    2019 கவாசகி நின்ஜா மாடலில் 296 சிசி, 4-ஸ்டிரோக், 8-வால்வ், DOHC, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 38 பி.ஹெச்.பி. @11,000 ஆர்.பி.எம். பவர் மற்றும் 27 என்.எம். டார்க் @ 10,000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வழங்கப்படுகிறது.



    நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் முன்புறம் 37 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க்களும், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்படுகிறது. இவற்றுடன் முன்புறம் 290 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 220 எம்.எம். டிஸ்க் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் ரூ.3 லட்சம் விலை பிரிவில் கவாசகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் கே.டி.எம். ஆர்.சி. 390, டி.வி.எஸ். ஆர்.ஆர். 310, பெனலி 302 ஆர், யமஹா YZF-R3, பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஜப்பானின் கவாசாகி பகுதியில் உள்ள பூங்காவில் மர்ம நபர் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர்.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அந்த பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் கூடியிருந்தனர். 

    இந்நிலையில், அந்த பூங்காவுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியானதாகவும், மேலும் 17 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கத்திக்குத்து தாக்குத்ல் நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    பூங்காவில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கவாசகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் காப்புரிமை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. #Kawasaki #ElectricBike
     


    கவாசகி நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிறுவனம் 2012 ஆம் ஆண்டு இ-மோட்டார்சைக்கிளை உருவாக்க காப்புரிமைக்கு பதிவு செய்திருக்கிறது. தற்சமயம் ஏழு ஆண்டுகளுக்கு பின் கவாசகி நிறுவனம் மற்றொரு எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்க காப்புரிமை பெற்றிருக்கிறது.

    இணையத்தில் லீக் ஆகியிருக்கும் காப்புரிமைகளில் புதிய வாகனம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிளில் எலெக்ட்ரிக் மோட்டார், கிளட்ச் அசெம்ப்ளி, அவுட்புட் ஷாஃப்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. கிளட்ச் இடம்பெற்றிருப்பதால் இந்த வாகனத்தில் கவாசகி கியர்பாக்ஸ் வழங்கலாம் என தெரிகிறது.

    இதுபோன்ற அமைப்பு காரணமாக குறைந்தளவு டார்க் வெளிப்படுத்தக்கூடிய சிறிய மோட்டாரை வழங்க முடியும். இதன் மூலம் பேட்டரியின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகப்படுத்த முடியும். மேலும் இவ்வாறு செய்ய பெரிய பேட்டரியும் தேவைப்படாது.



    இத்துடன் காப்புரிமைகளில் ரேம்-ஏர் இன்டக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதே அமைப்பு கவாசகியின் ஸ்போர்ட்ஸ்பைக்களில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் ஏர்-இன்டேக் ஹெட்லேம்ப்பின் கீழ் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் பேட்டரியின் அருகில் குளிர்ந்த காற்று போகச் செய்யும்.

    முன்னதாக எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ்பைக் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக டுகாடி தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருந்தார். உலகம் முழுக்க காற்று மாசு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் எலெக்ட்ரிக் வாகனங்களில் கனவனம் செலுத்த துவங்கிவிட்டன. 

    அந்த வரிசையில் கவாசகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் வடிவத்தை இந்த ஆண்டு நடைபெற இருக்கும் EICMA மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கலாம்.

    புகைப்படம் நன்றி: Rushlane | Visor Down
    கவாசகி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த நின்ஜா மோட்டார்சைக்கிளின் விநியோக விவரங்களை பார்ப்போம். #NinjaZX 6R #Motorcycle



    பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வரும் கவாசகி நிறுவனம் தனது நின்ஜா ZX 6R மாடலுக்கான முன்பதிவை கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கியது. இந்தியாவுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த மாடல் விற்பனை சமீபத்தில் துவங்கியது. 

    ஜப்பானில் உள்ள கவாசகி ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு உதிரி பாகங்களாக இந்தியாவில் இறக்குமதி செய்து பின் அதனை ஒன்றிணைத்து விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ.10.49 லட்சம் என நிறுவனம் அறிவித்தது. இதனால் இந்த சலுகை குறிப்பிட்ட காலம் வரையில்தான் இருக்கும். அதன் பிறகு இதன் விலை உயரும் என்று கூறப்படுகிறது.

    இந்த மோட்டார்சைக்கிள்  636 சி.சி. என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 4-சிலிண்டர் என்ஜின்  130 பி.ஹெச்.பி. திறனை 70.8 நியூட்டன் மீட்டர் இழுவிசையைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்சுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 



    இத்துடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி, ஏ.பி.எஸ், கவாசகி க்விக் ஷிப்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த மோட்டார்சைக்கிளின் எடை 196 கிலோவாகும். இதன் உயரம் 830 மி.மீ. ஒற்றை இருக்கையுடன் இது வந்துள்ளது.

    இந்த பிரிவில் நின்ஜாவுக்கு கடும் போட்டியாக இருக்கக் கூடியது டிரையம்ப் ஸ்டிரீட் ஆர்.எஸ். மட்டுமே. விலை மற்றும் செயல்பாடுகளில் ஓரளவு பொருந்தி வரக்கூடியதும் இந்த மோட்டார்சைக்கிள் மட்டுமே. இதேபோல டுகாடி 959 பனிகேல் மோட்டார்சைக்கிளும் ஓரளவு போட்டியாக இருக்கக் கூடும்.

    வாடிக்கையாளர்கள் ரூ. 1.5 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் விநியோகம் தற்சமயம் துவங்கியுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளை வாங்க முன்பதிவு செய்பவர்கள் டெலிவரி குறித்த விவரங்களை அருகிலுள்ள கவாசகி விற்பனையகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    கவாசகி நிறுவனத்தின் வெர்சிஸ் 1000 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது. #kawasaki #motorcycle



    இந்தியாவில் கவாசகி வெர்சிஸ் 1000 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் முன்பதிவு துவங்கியது. இந்தியாவில் லிட்டர் கிளாஸ் அட்வென்ச்சர் டூரர் மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ.1.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டுக்கு முந்தைய முன்பதிவு டிசம்பர் 31ம் தேதி அல்லது ஸ்லாட் இருக்கும் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புது கவாசகி வெர்சிஸ் 1000 மாடல் இம்மாதம் இத்தாலியில் நடைபெற்ற 2018 இ.ஐ.சி.எம்.ஏ. மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. வெர்சிஸ் 1000 மாடலின் விலையை கவாசகி இதுவரை அறிவிக்கவில்லை, எனினும் இதன் விநியோகம் 2019 ஏப்ரல் மாத இறுதியில் துவங்கும் என தெரிவித்துள்ளது.

    வெர்சிஸ் 1000 மாடல் இந்தியாவில் அசம்பிள் செய்யப்படும் என கவாசகி தெரிவித்துள்ளது. இவ்வாறு செய்தன் மூலம் வெர்சிஸ் 1000 விலையை கட்டுப்படுத்தி, போட்டியை ஏற்படுத்தும் வகையில் விலை நிர்ணயம் செய்ய முடியும். 

    2019 கவாசகி வெர்சிஸ் 1000 மாடலில் முந்தைய மாடலை விட பெருமளவு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நின்ஜா மாடல்களை போன்று புதிய மாடலின் முன்பக்கம் கூர்மையாக வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகமுக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. வெர்சிஸ் 1000 மாடலில் புதுவித எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வின்ட்ஸ்கிரீன் மற்றும் செமி டிஜிட்டல் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.



    இத்துடன் வெர்சிஸ் 1000 மாடலின் அதிக-அம்சங்கள் நிறைந்த வேரியன்ட் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் கூடுதல் உபகரணங்களாக கார்னெரிங் லைட்கள், கார்னெரிங் ஏ.பி.எஸ்., குவிக் ஷிஃப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட மாட்டாது.

    இந்திய மாடலின் மற்ற அம்சங்களை பொருத்த வரை ரைடு-பை-வையர், எலெக்ட்ரிக் க்ரூஸ் கன்ட்ரோல், 5-ஆக்சிஸ் போஷ் IMU, ஏ.பி.எஸ்., கவாசகியின் டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் இரண்டு பவர் மோட்கள் வழங்கப்படுகிறது.

    புதிய லிட்டர்-கிளாஸ் அட்வென்ச்சர் டூரர் மாடலில் 1,043 சிசி இன்-லைன் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 120 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்ரும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. வெர்சிஸ் 1000 மாடலின் முன்பக்கம் யு.எஸ்.டி. ஃபோர்க்கள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 310 எம்.எம். டிஸ்க், பின்புறம் 250 எம்.எம். ஒற்றை டிஸ்க் வழங்கப்படுகிறது. 
    கவாசகி நிறுவனத்தின் 2018 நின்ஜா 300 ஏ.பி.எஸ். வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Kawasaki #ninja



    கவாசகி நிறுவனத்தின் 2018 நின்ஜா 300 ஏ.பி.எஸ். வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நின்ஜா ஏ.பி.எஸ். வேரியன்ட் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாகங்களால் உருவாக்கப்பட்டு இருப்பதால், இதன் விலை தற்போதைய மாடலை விட ரூ.62,000 வரை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2018 நின்ஜா 300 ஏ.பி.எஸ். மாடல்: லைம் கிரீன்/ எபோனி மற்றும் கேன்டி பிளாஸ்மா புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. மற்ற மாற்றங்களை பொருத்த வரை ஃபேரிங்-இல் நின்ஜா பிரான்டிங், டூயல் ஹெட்லேம்ப் செட்டப் மற்றும் கூர்மையான முன்பக்கம், விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய நின்ஜா 300 ஏ.பி.எஸ். மாடலில் எம்.ஆர்.எஃப். டையர்கள் மற்றும் என்டூரன்ஸ் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த எடை 7 கிலோ வரை அதிகமாகி தற்சமயம் 179 கிலோவாக இருக்கிறது. இதுதவிர ஒட்டுமொத்த வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 



    2018 நின்ஜா 300 ஏ.பி.எஸ். மாடலில் தற்போதைய மாடல்களை போன்றே 296சிசி பேரலெல்-ட்வின் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 38 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 27 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

    சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்த வரை புதிய நின்ஜா 300 மாடலின் முன்புறம் 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 290 மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க் மற்றும் டூயல் கேலிப்பர்கள், பின்புறம் 220 மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். ஸ்டேன்டர்டு அம்சமாக உள்ளது. 

    இந்தியாவில் புதிய 2018 கவாசகி நின்ஜா 300 ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை ரூ.2.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Kawasaki #ninja
    கவாசகி நிறுவனத்தின் 2019 நின்ஜா 1000 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியானது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    கவாசகி நிறுவனம் 2019 நின்ஜா 1000 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய நின்ஜா தோற்றம் முந்தைய மாடலை போன்றே காட்சியளித்தாலும், புதிய டீக்கல்கள் மற்றும் சிறிய கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    தற்போதைய மாடலின் விலையே புதிய மாடலிலும் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால், இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்படாதது தெரியவந்துள்ளது. பூனே அருகில் இருக்கும் கவாசகியின் சக்கன் தயாரிப்பு ஆலையில் புதிய நின்ஜா 1000 மோட்டார்சைக்கிள் கட்டமைக்கப்படுகிறது.



    புதிய மோட்டார்சைக்கிளில் 1043சிசி இன்லைன் 4-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 141.9 பிஎஸ் @10000 ஆர்பிஎம் மற்றும் 111என்எம் டார்கியூ @7300 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் புதிய மாடலில் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், ஏபிஎஸ் மற்று் 3-லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு நிறங்ககளில் கிடைக்கும் 2019 கவாசகி நின்ஜா 1000 முன்பதிவு இந்தியா முழுக்க துவங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்தியாவில் 2019 கவாசகி நின்ஜா 1000 விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×