என் மலர்

  ஆட்டோமொபைல்

  இணையத்தில் லீக் ஆன கவாசகி எலெக்ட்ரிக் பைக் காப்புரிமை புகைப்படங்கள்
  X

  இணையத்தில் லீக் ஆன கவாசகி எலெக்ட்ரிக் பைக் காப்புரிமை புகைப்படங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவாசகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் காப்புரிமை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. #Kawasaki #ElectricBike
   


  கவாசகி நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிறுவனம் 2012 ஆம் ஆண்டு இ-மோட்டார்சைக்கிளை உருவாக்க காப்புரிமைக்கு பதிவு செய்திருக்கிறது. தற்சமயம் ஏழு ஆண்டுகளுக்கு பின் கவாசகி நிறுவனம் மற்றொரு எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்க காப்புரிமை பெற்றிருக்கிறது.

  இணையத்தில் லீக் ஆகியிருக்கும் காப்புரிமைகளில் புதிய வாகனம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிளில் எலெக்ட்ரிக் மோட்டார், கிளட்ச் அசெம்ப்ளி, அவுட்புட் ஷாஃப்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. கிளட்ச் இடம்பெற்றிருப்பதால் இந்த வாகனத்தில் கவாசகி கியர்பாக்ஸ் வழங்கலாம் என தெரிகிறது.

  இதுபோன்ற அமைப்பு காரணமாக குறைந்தளவு டார்க் வெளிப்படுத்தக்கூடிய சிறிய மோட்டாரை வழங்க முடியும். இதன் மூலம் பேட்டரியின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகப்படுத்த முடியும். மேலும் இவ்வாறு செய்ய பெரிய பேட்டரியும் தேவைப்படாது.  இத்துடன் காப்புரிமைகளில் ரேம்-ஏர் இன்டக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதே அமைப்பு கவாசகியின் ஸ்போர்ட்ஸ்பைக்களில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் ஏர்-இன்டேக் ஹெட்லேம்ப்பின் கீழ் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் பேட்டரியின் அருகில் குளிர்ந்த காற்று போகச் செய்யும்.

  முன்னதாக எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ்பைக் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக டுகாடி தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருந்தார். உலகம் முழுக்க காற்று மாசு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் எலெக்ட்ரிக் வாகனங்களில் கனவனம் செலுத்த துவங்கிவிட்டன. 

  அந்த வரிசையில் கவாசகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் வடிவத்தை இந்த ஆண்டு நடைபெற இருக்கும் EICMA மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கலாம்.

  புகைப்படம் நன்றி: Rushlane | Visor Down
  Next Story
  ×