என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 Kawasaki Ninja ZX 6R"

    • அமெரிக்காவில் சுமார் 17,800 யூனிட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.
    • கவாசகி நிஞ்ஜா ZX-6R பைக்கில் ஒரே ஒரு மாடல் மட்டுமே உள்ளது.

    கவாசகி நிறுவனம் தனது நிஞ்ஜா ZX-6R பைக்கினை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. பைக்கில் எஞ்சின் குறைபாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, இந்த மாடல் உலகளவில் திரும்பப் பெறப்படும் என்று கவாசகி நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், MY24 மற்றும் MY25 யூனிட்கள் மட்டுமே திரும்ப பெறப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    உற்பத்தியின் போது ஏற்பட்டிருக்கக்கூடிய பெரிய கிரான்ஸ்காஃப்ட் குறைபாடு காரணமாக, இந்த நிறுவனம் பைக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மேலும், நிஞ்ஜா ZX-6R பைக்கின் தற்போதைய பயனர்கள், தங்களது யூனிட்டில் திரும்பப் பெறுதல் நடைமுறை நிறைவுற்று பிரசனை தீர்க்கப்படும் வரை பைக்கில் சவாரி செய்வதை நிறுத்துமாறு கவாசகி அறிவித்துள்ளது.

    சர்வதேச சந்தையை தொடர்ந்து கவாசகி நிஞ்ஜா ZX-6R பைக் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நிஞ்ஜா ZX-6R இன் இந்திய பயனர்களுக்கும் திரும்பப் பெறும் நடவடிக்கை பொருந்துமா என்பது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. எனினும், இந்த பைக்கின் KRT எடிஷன் மற்றும் 40வது ஆனிவர்சரி எடிஷன் உட்பட அனைத்து வேரியண்ட்களுக்கும் திரும்பப் பெறுதல் செல்லுபடியாகும்.

     



    அமெரிக்காவில் சுமார் 17,800 யூனிட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. மேலும் ஐரோப்பா, இந்தியா மற்றும் பல சந்தைகளுக்கு அந்தந்த நடவடிக்கைகளில் அது செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் நிஞ்ஜா ZX 6-R திரும்பப் பெறுவது குறித்த கேள்விக்கு, சிறிது காலத்திற்கு பைக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது என்றும் தகவலுக்கு அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களைத் தொடர்புகொள்வது நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    கவாசகி நிஞ்ஜா ZX-6R பைக்கில் 636சிசி இன்லைன் 4-DOHC எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைந்து செயல்படுகிறது. இது முறையே 129 hp பவர் மற்றும் 69 Nm டார்க் உருவாக்குகிறது.

    கவாசகி நிஞ்ஜா ZX-6R பைக்கில் ஒரே ஒரு மாடல் மட்டுமே உள்ளது. இதன் விலை ரூ.11.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

    கவாசகி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த நின்ஜா மோட்டார்சைக்கிளின் விநியோக விவரங்களை பார்ப்போம். #NinjaZX 6R #Motorcycle



    பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வரும் கவாசகி நிறுவனம் தனது நின்ஜா ZX 6R மாடலுக்கான முன்பதிவை கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கியது. இந்தியாவுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த மாடல் விற்பனை சமீபத்தில் துவங்கியது. 

    ஜப்பானில் உள்ள கவாசகி ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு உதிரி பாகங்களாக இந்தியாவில் இறக்குமதி செய்து பின் அதனை ஒன்றிணைத்து விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ.10.49 லட்சம் என நிறுவனம் அறிவித்தது. இதனால் இந்த சலுகை குறிப்பிட்ட காலம் வரையில்தான் இருக்கும். அதன் பிறகு இதன் விலை உயரும் என்று கூறப்படுகிறது.

    இந்த மோட்டார்சைக்கிள்  636 சி.சி. என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 4-சிலிண்டர் என்ஜின்  130 பி.ஹெச்.பி. திறனை 70.8 நியூட்டன் மீட்டர் இழுவிசையைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்சுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 



    இத்துடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி, ஏ.பி.எஸ், கவாசகி க்விக் ஷிப்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த மோட்டார்சைக்கிளின் எடை 196 கிலோவாகும். இதன் உயரம் 830 மி.மீ. ஒற்றை இருக்கையுடன் இது வந்துள்ளது.

    இந்த பிரிவில் நின்ஜாவுக்கு கடும் போட்டியாக இருக்கக் கூடியது டிரையம்ப் ஸ்டிரீட் ஆர்.எஸ். மட்டுமே. விலை மற்றும் செயல்பாடுகளில் ஓரளவு பொருந்தி வரக்கூடியதும் இந்த மோட்டார்சைக்கிள் மட்டுமே. இதேபோல டுகாடி 959 பனிகேல் மோட்டார்சைக்கிளும் ஓரளவு போட்டியாக இருக்கக் கூடும்.

    வாடிக்கையாளர்கள் ரூ. 1.5 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் விநியோகம் தற்சமயம் துவங்கியுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளை வாங்க முன்பதிவு செய்பவர்கள் டெலிவரி குறித்த விவரங்களை அருகிலுள்ள கவாசகி விற்பனையகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    ×