search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka Victory"

    தோல்வியை வெற்றியாக சித்தரிக்கும் புதிய வழிமுறையை காங்கிரஸ் கட்சி கண்டறிந்துள்ளது என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். #AmitShah #Congress
    புதுடெல்லி:

    புதுடெல்லியில் உள்ள பரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது.

    தோல்வியை வெற்றியாக சித்தரிக்கும் புதிய வழிமுறையை காங்கிரஸ் கட்சி கண்டறிந்துள்ளது. இதுவே 2019 வரை தொடரும். கர்நாடக மாநிலத்தில் வெற்றியடைந்ததாக காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கொண்டாடி வருகின்றன. ஆனால், இங்கு உள்ள மக்களுக்கு எந்த கொண்டாட்டமும் இல்லை. காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை கர்நாடக மக்கள் விரும்பவில்லை. எனவே, தான் அவர்களுடைய திடீர் கூட்டணியை புனிதமில்லா கூட்டணி என நாங்கள் கூறுகிறோம்.

    கர்நாடகத்தில் பா.ஜ.க.வே தனிப்பெரும் கட்சி, முந்தைய தேர்தலை விட தற்போது எங்களின் ஒட்டு சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் 15 அமைச்சர்கள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். எனவே, இது காங்கிரஸ் கட்சிக்கு தான் மிகப்பெரிய தோல்வியாகும்.

    நாங்கள் குதிரை வியாபரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டும் காங்கிரஸ் கட்சி, ஒட்டுமொத்துமாக குதிரை லாயத்தையே விலைக்கு வாங்கிவிட்டது. மின்னனு ஓட்டு பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது முன்னர் நம்பிக்கை இழந்திருந்த காங்கிரஸ் இப்போது இவற்றை எல்லாம் நம்ப தொடங்கியுள்ளது. #AmitShah #Congress
    ×