search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalishwari College"

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
    • நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வடிவமைப்பு சிந்தனை, விமர்சன சிந்தனை மற்றும் புதுமை வடிவமைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கோவை சி.வி.ஓ. விட்டி வைஸ் நிறுவனர் சன்மதி கார்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வடிவமைப்பு சிந்தனையை விமர்சன சிந்தனையுடன் இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை மைய மாக கொண்ட தீர்வுகளை வழங்கும் படைப்பாற்றலை புதுமை தூண்டுகிறது என்றார். வடிவமைப்பு சிந்தனை என்பது புதிய மற்றும் பழைய தீர்வுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கு வதற்கான உலக ளாவிய பயன்பாடாகும்.

    வணிகத் துறையில் உள்ள இடைவெளியைக் கண்டறிந்து புதுமைகளைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் விளக்கினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வர வேற்றார். தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் முருகன் நன்றி கூறினார். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 114 மாணவர்கள் பங்கேற்றனர். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கலாச்சார போட்டிகள் நடந்தது.
    • வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை முதல்வர் வழங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத் துறை இலக்கிய மன்றமும், ஆங்கிலத்துறையின் முன்னாள் மாணவர்களும் இணைந்து இந்திய கலாச்சார பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில் கலாச்சார போட்டிகளை நடத்தியது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    ஆங்கிலத்துறையின் முன்னாள் மாணவர்களான திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் கோகுலஹரி, சிவகாசி விஸ்டம் வெல்த் சர்வதேச பள்ளி நிர்வாக அதிகாரி முத்துக்குமார், புகைப்பட மற்றும் காணொளி வடிவமைப்பாளர் வித்யஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கலாச்சார சமையல், வண்ண சுவரொட்டி தயாரித்தல், ரங்கோலி, குறும்படம். மாறுவேடப் போட்டிகள் நடந்தன. நடுவர்களாக முன்னாள் செயல்பட்டனர். 108 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 4 அணிகளாகப் பிரிந்து இந்த போட்டிகளில் பங்கேற்றனர். முதல்நிலை வெற்றியாளர்களுக்கான கோப்பையை கிளடியேட்டர்கள் என்ற அணி வென்றது.

    வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை முதல்வர் வழங்கினார். ஆங்கிலத்துறை தலைவர் பெமினா வரவேற்றார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா நன்றி கூறினார். முதுகலை ஆங்கில ஆசிரியர் புவனா, ஆங்கில மொழி பயிற்றுநர் ஹரிஹரன் ஆகியோர் முன்னாள் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றவர்களை ஊக்கப்படுத்தினர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கு நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறை சார்பில் வணிகத்தில் சமீபத்திய கணினி தொழில்நுட்ப பயன்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீ செளடாம்பிகா பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் முத்துக்குமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் இரண்டாமாண்டு மாணவி பத்மகலா அனைவரையும் வரவேறறார். முதல்வர் பாலமுருகன் பேசுகையில் மாணவர்களின் போட்டியிடும் திறனை வளப்படுத்த இத்தகைய கருத்தரங்குகள் அவசியம் என்றார்.

    சிறப்பு விருந்தினர் முத்துக்குமார் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பல்வேறு பயன்பாடுகளை சுட்டிக்காட்டினார். மேலும் நிலையான வளர்ச்சிக்கு கணினி சார்ந்த தொழில்நுட்பத்தின் தற்போதைய கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். நிறைவாக, இரண்டாமாண்டு மாணவி அபிலட்சுமி நன்றி கூறினார். துறை தலைவர் நளாயினி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் கிருஷ்ணன் செய்திருந்தார். இந்தக் கருத்தரங்கில் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறையைச் சேர்ந்த 238 மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடந்தது.
    • இந்த திட்டத்தின் மூலம் 98 மாணவர்கள் பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் நிறும செயலரியல் துறை சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த மாணவர் விளக்க காட்சியை ஏற்பாடு செய்தது.

    இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மாணவர்களின் பகுப்பாய்வுத் திறனை தூண்டுவதாகும். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மத்திய பட்ஜெட் சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் நாட்டின் விரைவான மற்றும் சீரான பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ளது என்றார்.

    துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் செந்தில்குமார் வாழ்த்தி பேசினார். மத்திய பட்ஜெட் குறித்து 22 மாணவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். உதவிப் பேராசிரியை விண்ணரசி ரெக்ஸ் வரவேற்றார்.

    உதவிப் பேராசிரியை சூரியா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் ஜேஸ்மின் பாஸ்டினா செய்தி ருந்தார். இந்த திட்டத்தின் மூலம் 98 மாணவர்கள் பயனடைந்தனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • கண்புரை அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை அடையாளம் காணுதல் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), விரிவாக்க நடவடிக்கைகள், என்எஸ்எஸ் பிரிவுகள் (எண். 192 & 209), உன்னத் பாரத் அபியான் திட்டம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை, ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது. கல்லூரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கண் சோர்வு. நீண்ட பார்வை, குறுகிய பார்வை, கண் விழித்திரை நோய்கள், குழந்தைகளுக்கான கண் பராமரிப்பு மற்றும் கண்புரை அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை அடையாளம் காணுதல் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 183 பேர் பயனடைந்தனர். என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் என்.சி.சி. கேடட்கள் தன்னார்வ தொண்டு செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விரிவாக்கம் மற்றும் உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பிரிவு எண்.209 ராஜீவ்காந்தி, பிரிவு எண். 192 மாரீசுவரன் செய்திருந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
    • உதவிப்பேராசிரியை ஜேஸ்மின் பாஸ்டினா இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறும செயலரியல் துறை ''உன்னுள் இருக்கும் திறன்'' என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வின் நோக்கமானது மாணவர்களிடையே திறனை மேம்படுத்து வதாகும்.

    விருதுநகர் வன்னிய பெருமாள் கல்லூரி முனைவர் காந்திமதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் திறனை வளர்ப்பதின் முக்கியத்துவம் பற்றியும், தலைமைத்துவ திறனை வளர்க்கும் வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.

    சிறந்த குழுவை அமைக்கும் முறை, குழு தலைவரின் தகுதிகள் மற்றும் கூட்டாக செயல்படும் முறையைப் பற்றியும் எடுத்துரைத்தார். துறைத் தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் விண்ணரசி ரெக்ஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    உதவிப்பேராசிரியை சூரியா நன்றி கூறினார். உதவிப்பேராசிரியை ஜேஸ்மின் பாஸ்டினா இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • உதவிப்பேராசிரியர்- கணினி அறிவியல் துறையில் பணிபுரியும் பாலமுருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில் ''வாய்ப்புக்களுக்கான பாதைகள்'' என்ற தலைப்பில் மாணவர்களை நெறிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சிவகாசி யூனோபி டெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநரும், முன்னாள் மாணவருமான விஜயபாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில் , கணினி அறிவியல் துறையில் உள்ள வேலைவாய்ப்பை எளிதில் எவ்வாறு தெரிந்து கொள்வது? என்பது குறித்த வழிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தகவல் தொழில்நுட்ப பிரிவில் வெவ்வேறான பதவிகள் குறித்து உரையாற்றினார். மாணவர்களிடம் எழுந்த கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

    கணினி அறிவியல் துறை இளங்கலை 3-ம் ஆண்டு மாணவி சகாய மேரி வரவேற்றார். இளங்கலை 3-ம் ஆண்டு மாணவர் சூர்யா நன்றி கூறினார். இதில் இளங்கலை 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு பயிலும் கணினி அறிவியல் துறை மாணவ- மாணவிகள் 160 பேர் கலந்து கொண்டனர்.

    கணினி அறிவியல் துறை பிரியா, பாராட்டுரை வழங்கினார். முதல்வர் பாலமுருகன் முதன்மை உரை ஆற்றினார். உதவிப்பேராசிரியர்- கணினி அறிவியல் துறையில் பணிபுரியும் பாலமுருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
    • இதில் 270 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் ''ஜும்பா உடற்பயிற்சி (கற்றுநர் மற்றும் தகுதி யாகுதல்)'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர்- கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை ஜும்பா உடற்பயிற்சி பயிற்சி யாளர் சுதா தயாளன் கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், ஜூம்பா உடற்பயிற்சி என்பதன் பொருள், மற்ற உடற்பயிற்சிகளை விட இதிலுள்ள உற்சா கமான விஷயம் உடலில் உள்ள கலோரிகளை எரித்தல், மனதிலும், உடலிலும் ஏற்படும் ஆரோக்கியமான மாற்றங்கள் பற்றி எடுத்து ரைத்தார். மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

    வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவி ஹேமியஸ்ரீ தொகுத்து வழங்கினார். மாணவி ஜமுனாதேவி வரவேற்றார். மாணவி ஜெயராசாத்தி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர், ஜூனியர் ஜேசிஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார். இதில் 270 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் நேர்காணல் முறையை எடுத்துரைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    தகவல் தொழில் நுட்பவியல் துறை உதவிப்பே ராசிரியர் முத்துகுமார் வரவேற்றார். துணை முதல்வர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாணவரும், சென்னை அகரம் இன்போடெக் நிறுவனத்தின் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தகவல் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் பாலாஜி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிறப்பு விருந்தினர் ேபசுகையில், பணிபுரியும் நிறுவனம் பற்றியும், நிறுவனத்தின் செயல் முறைகள் பற்றியும், எடுத்துக் கூறினார். மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் நேர்காணல் முறையை எடுத்துரைத்தார். நேர்காண எவ்வாறு எதிர்கொள்வது? தொடக்க நிறுவனங்களில் இருந்து எவ்வாறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்னேறுவது? என்பது பற்றியும் விளக்கினார்.

    கணினிப் பயன் பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர் விசுவநாதன் நன்றி கூறினார். இதில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைகளைச் சேர்ந்த 119 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    • கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 22-வது விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் பால முருகன் வரவேற்றார். தேசியக் கொடியை சிறப்பு விருந்தினர் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னாவும், ஒலிம்பிக் கொடியை மற்றொரு சிறப்பு விருந்தினர்-விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறனும், கல்லூரிக் கொடியை கல்லூரிச் செயலர் அ.பா.செல்வராசனும் ஏற்றினர்.

    தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களின் அணி வகுப்பு நடந்தது. இளநிலை தகவல் தொழில்நுட்பவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் அபிஷேக் விளையாட்டு விழாவுக்கான உறுதிமொழி வாசித்தார்.

    100மீட்டர், 400மீட்டர் ஓட்டம், மாணவர் நடனம். மாணவிகளின் சிலம்பம். பிரமிடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. உடற்கல்வித்துறை உதவி இயக்குநர் யோகசுவரன் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சென்னையை சேர்ந்த சர்வதேச 2-வது கிராண்ட் மாஸ்டர் குகேசின் பயிற்றுநர் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.அவர் ேபசுகையில், ஒழுக்கம், காலம் தவறாமை ஆகிய 2-ம் வெற்றி பெறுவதற்கான வழிகள். மனதை எப்பொ ழுதும் அமைதியான சூழலில் வைத்திருக்க வேண்டும். எதற்கும் பதற்றப்படக் கூடாது.

    நம்முடைய எதிரிகள் மூலமே நமக்கு வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆகவே அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்றார்.மற்றொரு சிறப்பு விருந்தினரான விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்கள் பிரிவில் ராஜேந்திரன் மணி அணியும் பெண்கள் பிரிவில் ஸ்மிரிதி மந்தனா அணியும் ஒட்டு மொத்த புள்ளிகளை பெற்று முதல் இடத்தைப் பிடித்தன.

    உடற்கல்வித்துறை உதவி இயக்குநர் புனிதவதி நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெண்கள் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறை உதவிப்பேராசிரியை தர்ஷனா நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி உள்தர உத்தரவாத அமைப்பு மற்றும் மாண வர்கள் ஆலோசனை அமைப்பு இணைந்து கல்லூரி பெண்களுக்காக "மனம் மற்றும் ஆரோக்கியம்'' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

    கணினிப் பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியை மகாலட்சுமி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் மற்றும் மாணவர்கள் ஆலோசனை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக, சிவகாசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். கலுசிவலிங்கம், சிவகாசி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலக நேர்முக உதவியாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு "பொது சுகாதார பிரச்சினைகள்" என்ற தலைப்பில் பேசினர்.

    விருதுநகர் சுகாதார பணிகள் துணை இயக்கு நர்-தேசிய வளர் இளம் பருவத்தினருக்கான நலத்திட்ட ஒருங்கி ணைப்பா ளர் உதயசங்கரி பேசினார் ''வளரும் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகள்" என்ற தலைப்பில் பேசினர். தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய ஊட்டச்சத்து குறைபாடு- பிரச்சினைகளை மாணவர்களுக்கு விளக்கினார்.

    மேலும் இந்த வயதில் ரத்த சோகை, அதிக எடை மற்றும் குறைந்த எடை போன்ற முக்கிய பிரச்சினைகளை விவரித்தார். இன்றைய சூழலில் மாணவர்கள் உட்கொள்ளும் உணவு முறை ஆரோக்கிய மற்ற உணவுமுறை என்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு திட்டங்கள் அவசியம் என்றும் எடுத்துரைத்தார்.

    திருத்தங்கல் அரசு மருத்துவமனை ஆலோசகர் சங்கர் "இளம் பருவ மனநலப் பிரச்சினைகள்" என்ற தலைப்பில் பேசினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தழுவி நல்வாழ்வுக்காக மாணவர்களை வழி நடந்தியது. மேலும் ஆரோக்கி யமான வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து மதிப்புகள் மற்றும் நினைவாற்றலை மதிப்பீடு செய்ய இது மாணவர்களை ஊக்கப்படுத்தியது.

    சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறை உதவிப்பேராசிரியை தர்ஷனா நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணிதவியல் துறை கருத்தரங்கு நடந்தது.
    • இந்த கருத்தரங்கில் 114 கணிதத்துறை மாணவர்கள் மற்றும் 9 உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ''காளீஸ் கணித மன்றம்'' சார்பில் ''தரவு பகுப்பாய்வின் தற்போதைய போக்கு'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் சிவகாசி மெப்கோ ஷ்லெங்க் பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை உதவிப்பேராசிரியர் வீணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கணிதவியல் துறைத் தலைவர் லலிதாம்பிகை வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினர் பேசுகையில், தரவு பகுப்பாய்வு என்பது மூலத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து நமக்குத் தேவையான முடிவுகள் மேற்கொள்ளப் பயன்படுத்தும் கருவிகள் ஆகும். தரவு பகுப்பாய் விற்குப் பயன்படக்கூடிய கருவிகள் மற்றும் நுட்பங்கள் பற்றி விளக்கினார். தரவு பகுப்பாய்விற்கு உறுதுணையாக இருக்கும் மென்பொருள்களின் வகைகளைச் சுட்டிக்காட்டி அவற்றின் நன்மைகள் மற்றும் வரம்புகள் பற்றி எடுத்துரைத்தார். தரவு பகுப்பாய்விற்கு நிகழ் நிலையில் கிடைக்கப்பெறும் மென்பொருள்கள் பற்றி செய்முறை விளக்கம் அளித்தார். "Tableau" என்ற மென்பொருளின் Excel பதிப்பு பற்றி விரிவான செய்முறை விளக்கம் அளித்தார்.

    இந்த கருத்தரங்கில் 114 கணிதத்துறை மாணவர்கள் மற்றும் 9 உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உதவிப்பேராசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார்.

    ×