என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
- மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் நேர்காணல் முறையை எடுத்துரைத்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
தகவல் தொழில் நுட்பவியல் துறை உதவிப்பே ராசிரியர் முத்துகுமார் வரவேற்றார். துணை முதல்வர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார்.
முன்னாள் மாணவரும், சென்னை அகரம் இன்போடெக் நிறுவனத்தின் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தகவல் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் பாலாஜி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினர் ேபசுகையில், பணிபுரியும் நிறுவனம் பற்றியும், நிறுவனத்தின் செயல் முறைகள் பற்றியும், எடுத்துக் கூறினார். மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் நேர்காணல் முறையை எடுத்துரைத்தார். நேர்காண எவ்வாறு எதிர்கொள்வது? தொடக்க நிறுவனங்களில் இருந்து எவ்வாறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்னேறுவது? என்பது பற்றியும் விளக்கினார்.
கணினிப் பயன் பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர் விசுவநாதன் நன்றி கூறினார். இதில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைகளைச் சேர்ந்த 119 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.






