search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry and money theft"

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பட்டபகலில் தொழிலாளி வீட்டில் 40 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கபூர்கான் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ஓய்வு பெற்ற மில் தொழிலாளி. நேற்று மதியம் இவரது மனைவிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக ரவிச்சந்தின் தனது மனைவியை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வீட்டை பூட்டி விட்டு அழைத்து சென்றார். சிகிச்சை முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது 2 அறைகளில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.பீரோ அருகே சென்று பார்த்த போது அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ரவிச்சந்திரன் உடுமலை போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் சம்பவஇடத்துக்கு மோப்ப நாய் டேவிட் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் மூலம் வீட்டின் உள் பகுதி, வெளிப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்தும் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். பட்டபகலில் ரெயில் நிலையம் அருகே நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    நெய்வேலியில் என்.எல்.சி நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 13-வது வட்டம் சோழன் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 45). இவர் என்.எல்.சி. நிறுவனத்தில் போக்குவரத்து துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    சிதம்பரத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஞானசேகரன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார்.

    இதையறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவு ஞானசேகரன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    நேற்று இரவு ஞானசேகரன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து தெர்மல் நகர் போலீசில் ஞானசேகரன் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றார்.
    திருமங்கலம் அருகே முன் விரோத தகராறில் பெண்ணை தாக்கி வீட்டில் இருந்த நகை-பணத்தை திருடிச் சென்றதாக 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள புங்கன்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மனைவி ஜெயபாண்டி (வயது 39). இவர் அதே ஊரைச் சேர்ந்த ஆட்டுக்கறி வியாபாரி மொக்கராஜுடம் கறி வாங்கினாராம். அதற்கான பணத்தை கொடுப்பதில் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது.

    இந்த விரோதத்தில் மொக்கராஜ், அவரது மனைவி பாப்பு, மகன் சரவணன், உறவினர்கள் பிரேமா, அங்கயற்கண்ணி, சிவனம்மாள் ஆகியோர் ஜெயபாண்டி வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.

    அவர்கள் தன்னை தாக்கியதோடு, வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ. 65 ஆயிரத்தை எடுத்துச் சென்று விட்டதாக திருமங்கலம் தாலுகா போலீசில் ஜெயபாண்டி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மொக்கராஜ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Tamilnews
    கொடைக்கானல் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பெருமாள்மலை:

    கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயன். லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகனுக்கு உடல் நிலை சரி இல்லாததால் வெளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற குடும்பத்துடன் வீட்டை பூட்டிச் சென்றுள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவின் கதவையும் உடைத்து 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

    அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உதயனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து பார்த்த போது நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானலில் கடந்த வருடம் மாதத்திலும் இதே போன்று தொடர் கொள்ளைகள் நடைபெற்றது. குறிப்பாக கடத்தல் வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் தனியாக இருந்த வீடுகளை கொள்ளையடித்துச் சென்றனர். அதன் பின்பு போலீசாரின் தீவிர ரோந்து பணியால் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

    சிறிது காலம் கைவரிசை காட்டாத கொள்ளையர்கள் மீண்டும் திருடிச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோடை சீசன் நடந்து வருவதால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    எனவே போதுமான அளவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #Tamilnews
    ×