search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry driver house robbery"

    கொடைக்கானல் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பெருமாள்மலை:

    கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயன். லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகனுக்கு உடல் நிலை சரி இல்லாததால் வெளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற குடும்பத்துடன் வீட்டை பூட்டிச் சென்றுள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவின் கதவையும் உடைத்து 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

    அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உதயனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து பார்த்த போது நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானலில் கடந்த வருடம் மாதத்திலும் இதே போன்று தொடர் கொள்ளைகள் நடைபெற்றது. குறிப்பாக கடத்தல் வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் தனியாக இருந்த வீடுகளை கொள்ளையடித்துச் சென்றனர். அதன் பின்பு போலீசாரின் தீவிர ரோந்து பணியால் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

    சிறிது காலம் கைவரிசை காட்டாத கொள்ளையர்கள் மீண்டும் திருடிச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோடை சீசன் நடந்து வருவதால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    எனவே போதுமான அளவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #Tamilnews
    ×