search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gram Sabha"

    • பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் நடந்தை வி.ஏ.ஓ. ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் ஏராளமான 100 நாள் வேலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் நடந்தை ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த வசந்தா உள்ளார். உப தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜேஸ்வரி செயல்பட்டு வருகிறார். ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா தலைமையில் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் நடந்தை வி.ஏ.ஓ. ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான 100 நாள் வேலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியசூரம்பாளை யத்தில் கடந்த 40 ஆண்டு

    களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக கூறி பலமுறை கிராமசபா கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2-ல் நடந்த கிராம சபை கூட்டங்களும் குவாரி எதிர்ப்பால் புறக்கணிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது நடந்த கிராம சபை கூட்டத்தில், குவாரிக்கு ஆதரவாக கிராம சபை கூட்டம் நடைபெறு வதாகவும், தீர்மானங்களை படிக்காமலேயே கையெ ழுத்து வாங்குவதா கவும், தலைவர், உபதலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டு கேள்விகள் எழுப்பினர்.

    தொடர்ந்து, வார்டு உறுப்பினர்கள் கையெழுத்து வாங்குவதிலேயே தீவிரமாக இருக்க, தீர்மானத்தை படிக்க வேண்டும் என ஒரு தரப்பு வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய பி.டி.ஓ

    நடராஜன் கிராமசபை கூட்டத்தில் போடப்பட்டுள்ள தீர்மா னங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டது என அறி வித்தார். அசம்பா விதத்தை தடுக்க நல்லூர் போலீ சார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து ஊர்ப்பொது மக்கள் சிலர் கூறும்போது, இங்குள்ள குவாரிகளால் நாங்கள் நிம்மதி இழந்து தவிக்கிறோம். ஆனால் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் எனக் கூறி குவாரி பிரச்சனையை அப்படியே விட்டு விட்டனர் என்றனர்.

    • ஒன்றிய அரசிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.36,000-ம் கோடி பெறப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கப்படுகிறது.
    • விளாத்திகுளம் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில் நேற்று உள்ளாட்சி தின கிராம சபைக் கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் அமுதா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் திட்டங்கள் செயல்ப டுத்துவதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.36,000-ம் கோடி பெறப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கப்படுகிறது. பணி வாரியாக, திட்டங்கள் வாரியாக வரவு- செலவு கணக்குகளை எழுதி வைக்க வேண்டும். கிராம சபை கூட்டங்களில் அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும்.

    மேலும், திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி தேவைப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் மூலமாக கோரிக்கை வைத்தால், கூடுதலாக அரசிடமிருந்து பெற்று தரப்படும். ஆனால், இருக்கும் தொகையை முறையாக செலவழிக்க வேண்டும். உங்கள் பணத்தை வைத்து உங்கள் கிராமத்தை மேம்படுத்த வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சிகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை சிறந்த முறையில் பயன்படுத்தி ஊராட்சிகளை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    குளங்களை தூர்வார கோரிக்கை

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், விளாத்திகுளம் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. விளாத்திகுளம் தொகுதியில் 139 ஊராட்சிகள் இருக்கிறது. விளாத்திகுளம் வட்டத்தில் மட்டும் 92 வருவாய் கிராமங்கள் இருக்கிறது. அனைத்து கிராமங்களிலும் பாசன குளங்கள் உள்ளன. இவை சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளங்கள் நூற்றாண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருக்கிறது.

    இப்பகுதிகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது. ஹெச்.சி.எல். நிறுவனத்துடன் இணைந்து அந்த குளங்களை 2 மீட்டர் ஆழத்துக்கு தூர்வாருவதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஏனென்றால் வில்வமரத்துப்பட்டியில் உள்ள 380 ஏக்கர் பரப்பளவுள்ள குளத்தினை சுமார் 10 அடி ஆழத்திற்கு தூர்வாரினால் ஒரு நீர்த்தேக்கம்போல் மாறி தண்ணீரின் உப்புத்தன்மை நீங்கி அனைவருக்கும் நல்ல குடிநீர் கிடைக்கும். தாமிரபரணி தண்ணீரினை செலவு செய்து கொண்டு வர வேண்டியதில்லை. இங்குள்ள குளங்களை தூர்வாரினாலே போதும் இங்கேயே குடிநீருக்கு ஏற்பாடு செய்ய முடியும் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன், என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணைய மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோட்டாட்சியர் மகாலெட்சுமி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வீரபத்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துகுமார், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் நடராஜன், மிக்கேல் நவமணி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் முனியசக்தி ராமசந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன், ஹெச்.சி.எல். பவுண்டேஷன் வைபவ் சவுக்கான், ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்ன பொன்னு, புஷ்பவல்லி, மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டத்தி லுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தி லுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல்.

    கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு,

    ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி/சொத்துவரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக்குழு உருவாக்குதல்,

    2021 -22 மற்றும் 2022 - 23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களின் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவின அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்து உள்ளார்.

    • சோழவந்தான் பகுதியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • துணை தலைவர் கேபிள்ராஜா முன்னிலை வகித்தார்.

    சோழவந்தான்

    வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடந்தது. திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் தலைவர் சகுபர்சாதிக் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் மாலிக், பற்றாளர் சுஜாதா முன்னிலை வகித்தனர். செயலர் வேலன் அறிக்கை வாசித்தார். திருவேடகம் ஊராட்சி தலைவர் பஞ்வர்ணம் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பற்றாளர் பேச்சியம்மாள் முன்னிலை வகித்தார். சுதாபிரியா அறிக்கை வாசித்தார். காடுபட்டி ஊராட்சி தலைவர் ஆனந்தன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் பிரதாப், பற்றாளர் வீரலட்சுமி முன்னிலை வகித்தனர். செயலர் ஒய்யணன் அறிக்கை வாசித்தார்.

    தென்கரை ஊராட்சி தலைவர் மஞ்சுளா தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயலர் முனிராஜ் அறிக்கை வாசித்தார். மன்னாடிமங்கலம் ஊராட்சி தலைவர் பவுன்முருகன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் பாக்கியம், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, பற்றாளர் கருப்பையா முன்னிலை வகித்தனர். செயலர் திருசெந்தில் அறிக்கை வாசித்தார்.

    கருப்பட்டி ஊராட்சியில் தலைவர் அம்பிகா தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் சித்ரா முன்னிலை வகித்தார். செயலர் முணியாண்டி அறிக்கை வாசித்தார். இரும்பாடி ஊராட்சியில் தலைவர் ஈஸ்வரி பண்ணை செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயலர் காசிலிங்கம் அறிக்கை வாசித்தார்.

    ரிஷபம் ஊராட்சியில் தலைவர் மணி என்ற சிறுமணி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பற்றாளர் நாகராஜ், துணை தலைவர் சிவசாமி முன்னிலை வகித்தனர். எழுத்தர் முத்துவேலம்மாள் அறிக்கை வாசித்தார். நெடுங்குளம் ஊராட்சியில் தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் இஞ்சி தேவர் பற்றாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். செயலர் ரேவதி அறிக்கை வாசித்தார்.

    முள்ளிபள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல் தலைமையில் நடந்த கூட்டத்தில் துணை தலைவர் கேபிள்ராஜா முன்னிலை வகித்தார். செயலர் மனோபாரதி அறிக்கை வாசித்தார். இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர்.

    • மதுரை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும்.
    • கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டக் கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம்,ஜல் ஜீவன் திட்டம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள், 2022-23-ஆம் ஆண்டு பயனாளிகள் விவரங்கள் கிராம சபையில் ஒப்புதல் பெறுதல் போன்ற கூட்டப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

    பொதுமக்கள் கிராம சபை விவாதங்களில் பங்கேற்று பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்து உள்ளார்.

    • ஏற்காட்டில் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி ரவிசந்திரன் தலைமையில் நேற்று கிராமசபா நடைபெற்றது.
    • கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் தங்கள் பகுதிக்கு செய்யப்பட வேண்டிய பனிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி ரவிசந்திரன் தலைமையில் நேற்று கிராமசபா நடைபெற்றது.

    கூட்டத்தை துணை தலைவர் பாலு தொடங்கிவைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் கலந்து கொண்டு கிராம மக்களிடம் குறைகளை கேட்டார்.

    கூட்டத்தில் ஊராட்சி மன்றம் சார்பாக செய்யப்படட் பனிகள் அதற்காக செலவிடப்படட் தொகை குறித்து பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் தங்கள் பகுதிக்கு செய்யப்பட வேண்டிய பனிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.பொதுவாக தண்ணீர், தெரு விளக்கு, கழிப்பிடம், சாலை வசதி போன்றவைகளுக்கு இருந்தது.

    இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள அழைப்பு இருந்தும் ஓரு சில துறை ஊழியர்கள் மட்டுமே கலந்து கோண்டனர்.

    லாங்கில் பேட்டை வார்டு உறுப்பினர் ராஜா என்பவர் பட்டா இல்லாமல் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு மனு அழித்தார்.

    இதில் அனைத்து வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பராணி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கோகிலா மற்றும் ஒரு சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல் மஞ்சகுட்டை பஞ்சாயத்தில் அதன் தலைவர் சுகந்தா ராமசந்திரன் தலைமையில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது.தலைச்சோலை கிராமத்தில் அதன் தலைவர் செந்தில் பிரபு தலைமையில் கூட்டம் நடந்தது.

    • மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறும்.
    • இதில் அடுத்த 5 ஆண்டுகளில் கிராமத்தின் வளர்ச்சியை உறுதிசெய்யும் மேற்கொள்ளப்பட வேண்டியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறும். இதில் அடுத்த 5 ஆண்டுகளில் கிராமத்தின் வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய பணிகளான அடித்தட்டு மக்களின் நலன், பெண்களின் முன்னேற்றம், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வழிவகைகளை கண்டறிதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் நீர் மேலாண்மை, குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதேபோன்று கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×