search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து ஊராட்சிகளிலும் 15-ந் தேதி கிராம சபை கூட்டம்
    X

    அனைத்து ஊராட்சிகளிலும் 15-ந் தேதி கிராம சபை கூட்டம்

    • மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறும்.
    • இதில் அடுத்த 5 ஆண்டுகளில் கிராமத்தின் வளர்ச்சியை உறுதிசெய்யும் மேற்கொள்ளப்பட வேண்டியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறும். இதில் அடுத்த 5 ஆண்டுகளில் கிராமத்தின் வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய பணிகளான அடித்தட்டு மக்களின் நலன், பெண்களின் முன்னேற்றம், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வழிவகைகளை கண்டறிதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் நீர் மேலாண்மை, குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதேபோன்று கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×