search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Graduation"

    • ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி, மேலாண்மை கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடந்தது.
    • கல்லூரி உங்களுக்கு சிறந்த கல்வியை மட்டுமல்ல சிறந்த வாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மாணவர்களுக்கு தஞ்சை தழிழ்ப்பல்கலை கழக துணை வேந்தர் திருவள்ளுவன் பட்டங்களை வழங்கினார்.

    பட்டமளிப்பு விழா

    மன்னார்குடி அருகே இடையர்நத்தத்தில் உள்ள ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி, மேலாண்மை கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடந்தது.

    விழாவிற்கு ஏ.ஆர்.ஜெ கல்வி குழும தலைவி ராஜகுமாரி தலைமை தாங்கினார்.

    துணைதலைவர் மற்றும் தாளாளர் டாக்டர்.ஜீவகன் அய்யநாதன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக பொறியியல் கல்லூரி முதல்வர் டி. வெங்கடேசன் வரவேற்றார்.

    விழாவில் தஞ்சை தமிழ்ப்பல்கலைகழக துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு அண்ணா பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் உள்பட 475 பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், 75 நிர்வாக மேலாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் 380 பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-

    கிராமப்புறங்கள் சூழ்ந்த இந்த பகுதியில் சாதாரண கிராமத்து மக்களின் பிள்ளைகளும் பொறியியல் கல்வி கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த கல்வி நிறுவனத்தை தொடங்கி

    சிறப்பாக நடத்தி வரும் தாளாளர் மற்றும் நிர்வாகத்தினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

    மேகம் கீழே உள்ள நீரை எடுத்து மேலே கொண்டு சென்று மழையாக பொழிவது தனக்காக அல்ல.

    அதே போல தாங்கள் கற்கும் கல்வியும், அறிவும் தங்களுக்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயன்படும் வகையில் நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்த கல்லூரி உங்களுக்கு சிறந்த கல்வியை மட்டுமல்ல சிறந்த வாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது.

    அதனை நீங்கள் நல்ல முறையின் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும். அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் உங்கள் நேரத்தை விரயம் செய்யாமல் பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட்டு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். முடிவுகள் எடுக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.

    போட்டிகள் நிறைந்த தற்போதைய உலக சூழலில் உங்கள் திறன் மேம்பட்டு இருந்தால் மட்டும் தான் நீங்கள் சிறந்த இடத்தை அடைய முடியும்.

    அதற்கு நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கல்வி சார்ந்த விஷயங்களை தொடர்ந்து கற்பதற்கு முயற்சிக்க வேண்டும். புத்தக வாசிப்பு நல்ல மனிதனை உருவாக்குகிறது.

    மிகச் சிரமமான சூழ்நிலையில் வளர்த்து கல்வி கொடுத்து ஆளக்கிய பெற்றோருக்கும், சிறந்த கல்வி தந்து உங்களை பொறியியல் பட்டதாரியாக்கிய இந்த கல்வி நிறுவனத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் வளர்ந்து வாழ்வில் மேம்பாடு அடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலாண்மை நிறுவன இயக்குனர் கே‌. செல்வராஜ், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர். கமலக்கண்ணன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவில் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 99 மாணவ- மாணவிகளுக்கு பட்டமளித்தார்.
    • நீங்கள் பெற்ற கல்வியின் மூலம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முதல்வர் இளங்குமரன் தலைமை தாங்கினார்.

    கீதாஜீவன் பேச்சு

    99 மாணவ மாணவி களுக்கு பட்டமளித்து வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வரவேண்டும். நான் படித்த காலத்தில் இதுபோன்ற தகவல் தொழில்நுட்பங்கள் இருந்ததில்லை. இருந்தாலும் எனது தந்தை என்னை படிக்க வைத்து ஆளாக்கிய போது நான் ஓர் ஆசிரியராக தான் பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருந்தேன்.

    கால சூழ்நிலை என்னை பொது வாழ்க்கையில் ஈடுபட செய்து தலைவர் கலைஞர் அமைச்சரவையில் ஒருமுறையும், தளபதியாளர் அமைச்சரவையில் இரண்டாவது முறை அமைச்சராகும் பாக்கியம் எனக்கு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்.

    அறிவை வளர்க்க வேண்டும்

    இதே போல் உங்கள் அனைவருடைய வாழ்க்கையும் மகிழ்ச்சி கிடைக்கும் வகையில் கல்வி படிப்பு தகவல் தொழில்நுட்பம் என்ற படிப்போடு சேர்த்து பொது அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். உங்கள் தாய் தந்தையர் இன்றைய பட்டமளிப்பு விழாவில் மகிழ்ச்சியடைவதை கண்டு நீங்களும் மகிழ்ச்சியடைந்துள்ளீர்கள்.

    உங்களுக்கு சில சமயங்களில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களை தாய் தந்தைகளிடம் கூறி அதற்கு தீர்வு கண்டு கொள்வீர்கள். இனி வரும் காலங்களில் நீங்கள் பெற்ற கல்வியின் மூலம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைய வேண்டும். அதற்கேற்றார் போல் அரசு பணியிடம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் இருக்கின்ற பணிகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

    வழிகாட்டி

    படிக்கின்ற காலத்தில் பெற்றோர்கள் கண்காணித்ததை போல் அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் இருக்க வேண்டும். பெற்றோர்கள் முக்கியமாக இருந்ததை போல் ஆசிரியர்களும் உங்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

    நாம் பயின்ற கல்வி ஏதாவது ஓரு வகையில் மற்றவர்களுக்கும் உதவி செய்திடும் வகையில் அமைய வேண்டும். நீங்கள் இன்று இருக்கும் நிலைமைய அடைய பல சிக்கல்களை கடந்து தான் இந்த வாய்ப்பை பெற்றுள்ளீர்கள். உங்கள் அனைவருடைய வாழ்க்கையும் எதிர்காலத்தில் நன்றாக அமைய மனதார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில், கல்லூரி செயலாளர் ஜீவன்ஜேக்கப், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சுதன்கீலர், சுதா, ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி முதல்வர் பாலஷண்முக தேவி, செயின்ட் மேரிஸ் கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி முதல்வர் ரூபா, டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சார்லஸ், கல்லூரி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியுடன் கணினி மேலாண்மை மற்றும் நகைமதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான சான்றிதழ்கள் இப்பயிற்சியிலே வழங்கப்படும்.
    • இப்பயிற்சியில் சேர குறைந்த பட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் வெளியிட்ட அறிவிப்பில் மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ண ப்பங்கள் விநியோகம் 18.07.2022 முதல் தொடங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியுடன் கணினி மேலாண்மை மற்றும் நகைமதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான சான்றிதழ்கள் இப்பயிற்சியிலே வழங்கப்படும்.விண்ணப்பங்களை பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து அல்லது கீழ்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

    விண்ணப்பம் பெற கடைசி நாள் 28.7.2022 ஆகும் விண்ணப்பங்களை முதல்வர், பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், தாலுக்கா அலவலகம் அருகில், முத்துப்பேட்டை ரோடு, நாடிமுத்து நகர் அஞ்சல், பட்டுக்கோட்டை- 614602 என்ற முகவரிக்கு தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்க 1.08.2022 (மாலை 05.30 மணி) கடைசி நாள் ஆகும்.இப்பயிற்சியில் சேர குறைந்த பட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்டபடிப்பு முடித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரின் அலைபேசி எண்கள் 94860 45666, 97888 25339, 63811 46217 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • காரைக்குடி கல்லூரியில் பட்டமளிப்பு-விருது வழங்கும் விழா நடந்தது.
    • கல்லூரி இயக்குனர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி விசாலயன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2016-2022ம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    கல்லூரி நிறுவனர்- தலைவர் சேதுகுமணன் தொடங்கி வைத்தார்.கல்லூரி முதல்வர் கருணாநிதி வரவேற்றார்.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, முன்னாள் காவல்துறை இயக்குனர் ரவி ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். 41 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    விழாவில் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் ரவி, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா ஆகியோர் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது குறித்து பேசினர்.

    விழாவில் பெங்களூரு அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் செங்கப்பா, புளோரிடா பல்கலைக்கழக இளைஞர் நலன் மற்றும் சமுதாய அறிவியல் துறை பேராசிரியர் முத்துசாமி குமரன் சிறப்புரையாற்றினர்.

    கல்லூரி இயக்குனர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பேராசிரியை விஷ்ணுபிரியா நன்றி கூறினார்.

    ×