search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
    X

    மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பட்டங்கள் பெற்ற மாணவ-மாணவிகளுடன் ஏ.ஆர்.ஜெ கல்வி குழும தலைவி ராஜகுமாரி, கல்லூரி தாளாளர் டாக்டர்.ஜீவகன் அய்யநாதன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் மற்றும் பலர் உள்ளனர்.

    ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    • ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி, மேலாண்மை கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடந்தது.
    • கல்லூரி உங்களுக்கு சிறந்த கல்வியை மட்டுமல்ல சிறந்த வாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மாணவர்களுக்கு தஞ்சை தழிழ்ப்பல்கலை கழக துணை வேந்தர் திருவள்ளுவன் பட்டங்களை வழங்கினார்.

    பட்டமளிப்பு விழா

    மன்னார்குடி அருகே இடையர்நத்தத்தில் உள்ள ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி, மேலாண்மை கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடந்தது.

    விழாவிற்கு ஏ.ஆர்.ஜெ கல்வி குழும தலைவி ராஜகுமாரி தலைமை தாங்கினார்.

    துணைதலைவர் மற்றும் தாளாளர் டாக்டர்.ஜீவகன் அய்யநாதன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக பொறியியல் கல்லூரி முதல்வர் டி. வெங்கடேசன் வரவேற்றார்.

    விழாவில் தஞ்சை தமிழ்ப்பல்கலைகழக துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு அண்ணா பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் உள்பட 475 பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், 75 நிர்வாக மேலாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் 380 பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-

    கிராமப்புறங்கள் சூழ்ந்த இந்த பகுதியில் சாதாரண கிராமத்து மக்களின் பிள்ளைகளும் பொறியியல் கல்வி கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த கல்வி நிறுவனத்தை தொடங்கி

    சிறப்பாக நடத்தி வரும் தாளாளர் மற்றும் நிர்வாகத்தினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

    மேகம் கீழே உள்ள நீரை எடுத்து மேலே கொண்டு சென்று மழையாக பொழிவது தனக்காக அல்ல.

    அதே போல தாங்கள் கற்கும் கல்வியும், அறிவும் தங்களுக்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயன்படும் வகையில் நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்த கல்லூரி உங்களுக்கு சிறந்த கல்வியை மட்டுமல்ல சிறந்த வாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது.

    அதனை நீங்கள் நல்ல முறையின் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும். அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் உங்கள் நேரத்தை விரயம் செய்யாமல் பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட்டு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். முடிவுகள் எடுக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.

    போட்டிகள் நிறைந்த தற்போதைய உலக சூழலில் உங்கள் திறன் மேம்பட்டு இருந்தால் மட்டும் தான் நீங்கள் சிறந்த இடத்தை அடைய முடியும்.

    அதற்கு நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கல்வி சார்ந்த விஷயங்களை தொடர்ந்து கற்பதற்கு முயற்சிக்க வேண்டும். புத்தக வாசிப்பு நல்ல மனிதனை உருவாக்குகிறது.

    மிகச் சிரமமான சூழ்நிலையில் வளர்த்து கல்வி கொடுத்து ஆளக்கிய பெற்றோருக்கும், சிறந்த கல்வி தந்து உங்களை பொறியியல் பட்டதாரியாக்கிய இந்த கல்வி நிறுவனத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் வளர்ந்து வாழ்வில் மேம்பாடு அடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலாண்மை நிறுவன இயக்குனர் கே‌. செல்வராஜ், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர். கமலக்கண்ணன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×