search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garlanding"

    • திருமங்கலத்தில் பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • இதனைத்தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏடுத்துக்கொண்டனர்.

    திருமங்கலம்

    பெரியாரின் 144-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி திருமங்கலத்தில் உள்ள அவரது சிலைக்கு தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் தி.மு.க. வினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்து ராமலிங்கம், சாமிநாதன், நகரச் செயலாளர் ஸ்ரீதர், நகர சபை தலைவர் ரம்யா முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, ராமமூர்த்தி, ஜெயசந்திரன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், அணி அமைப்பாளர்கள் மதன், பாசபிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதிமுக சார்பில் நகர செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏடுத்துக்கொண்டனர். இதில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சதீஷ்சண்முகம், நிர்வாகிகள் பாண்டி, சிவனாண்டி, உச்சப்பட்டி செல்வம், வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மகேந்திரன், நகர செயலாளர் வைரன், ம.தி.மு.க. நகர செயலாளர் அனிதா பால்ராஜ், அவைத்தலைவர் சிவனாண்டி, பொருளாளர் முருகன், இளைஞர் அணி துணைச் செயலாளர் ராஜகோபால், நகர துணை செயலாளர் மாரிசாமி, விவசாய அணி துணைச் செயலாளர் காசி ஆகியோரும் பெரியார் சிலைக்கு மாைல அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • வெள்ளையனை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.

    காங்கேயம் :

    காங்கேயம் அருகேயுள்ள மேலப்பாளையத்தில் பிறந்து வெள்ளையனை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலையின் நினைவு நாள் நமது கொங்கு முன்னேற்ற கழகத்தின் சார்பில் மேலப்பாளைந்த்தில் அனுசரிக்கப்பட்டது.

    இதனையொட்டி எம். ரமேஷ் தலைமையில் அவரது திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், மாநில தலைவர் முருகசாமி, அமைப்பாளர் சண்முகம், சென்னிமலை வடிவேல், கார்த்திக், வேலுமணி, கமல்நாத், மதன், மோகன், முத்துவேல், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இன்று காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அவரது சிலைக்கு கலெக்டர்மா, அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விருதுநகர்

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், கல்வி கண் திறந்த கர்மவீரருமான பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த விருதுநகரில் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விருதுநகரில் உள்ள காமராஜரின் நினைவு இல்லம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு கலெக்டர் மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்ற அவர் அங்குள்ள சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.

    பிறந்தநாளையொட்டி நினைவு இல்லத்தில் ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் நூற்புவேள்வி நடந்தது.

    விருதுநகரில் உள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகிே்யார் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நினைவு இல்லத்தில் நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் காமராஜர் சிலை முன்பு நோட்டு, புத்தகங்கள் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

    விருதுநகரில் 4000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் காமராஜர் வேடமணிந்து பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    விருதுநகர் நகராட்சியில் நகரசபை தலைவர் மாதவன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ×