search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja sold"

    • தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 241 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 387 கிலோ கஞ்சா, 25 கிராம் கொகைன், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் மெத்தபட்டமைன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்புகள், 37 மோட்டார் சைக்கிள்கள், 5 கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் கஞ்சா விற்பனையை முழுவதும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி மதுவிலக்கு உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், சரவணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்லாவரம் ரேடியல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்டபொம்மன் நகர், கணேஷ் அவன்யூவில் சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் சோதனை செய்த போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

    விசாரணையில் அவர்கள் விருதுநகரை சேர்த்த பிரகாஷ், விருத்தாசலத்தை சேர்ந்த நசீர்பாஷா என்பது தெரிந்தது. கல்லூரி மாணவர்களான இவர்களில் பிரகாஷ் பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு சட்டப்படிப்பு (எல்.எல்.பி) படித்து வருவதும் நசீர்பாஷா பல்லாவரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிப்பதும் தெரியவந்தது.

    நண்பர்களாக இருக்கும் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் கஞ்சா பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மாணவர்கள் பிரகாஷ், நசீர்பாஷா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர்கள் தங்கி இருந்த அறையை சோதனை செய்த போது அங்கு 12 கிலோ கஞ்சா சிக்கியது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 241 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 387 கிலோ கஞ்சா, 25 கிராம் கொகைன், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் மெத்தபட்டமைன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்புகள், 37 மோட்டார் சைக்கிள்கள், 5 கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    இதேபோல் 25 பேர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.

    • மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • ஒரு மூதாட்டியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மூதாட்டியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவரது பெயர் விஜயா (வயது 60). இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிவஞானம் என்பவரின் மனைவி ஆவார். இவர் விழுப்புரத்தில் கே.கே.ரோடு பகுதியில் வாடகை வீடு எடுத்து 7 ஆண்டுகளாக வசித்து வந்தார். அங்கிருந்து பல்வேறு பகுதிக்கு கஞ்சா சப்ளை செய்துள்ளார். கூட்டேரிபட்டு-தீவனூர் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் கஞ்சாவிற்றபோது சிக்கியது தெரியவந்தது.

    • பவானி காலிங்கராயன் பாளையம் பகுதியில் வாலிபர்களுக்கு கஞ்சா பொட்டலம் தயாரித்த போது போலீசில் சிக்கியது தெரியவந்தது.
    • விஜயன், பவித்ரா மீது கொலை வழக்கு இருப்பதும், இது தவிர விஜயன்மீது கஞ்சா மற்றும் 18 அடிதடி வழக்குகள் இருப்பதும்தெரியவந்தது.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையம் மாட்டு ஆஸ்பத்திரி அருகே ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த பெண் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 300 கிராம் எடை கொண்ட 42 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு இருந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சரவணா தியேட்டர் பகுதியை சேர்ந்த சரவணன் (24), பவானி காலிங்கராயன் பாளையம் என்.எஸ்.எம்.வீதியை சேர்ந்த மெய்யப்பன் (24). சித்தார் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த அஜித் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தப்பி ஓடியது பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆற்றோரம் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரது மனைவி மகேஸ்வரி என்கிற பவித்ரா (24) என்று தெரியவந்தது.

    இதையடுத்து சித்தோடு போலீசார் பவித்ராவை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த அவரது கணவர் விஜயன் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதையடுத்து போலீசார் விஜயன் மற்றும் அவரது மனைவி பவித்ரா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுப்பற்றிய விபரம் வருமாறு:-

    விஜயன் அவரது மனைவி பவித்ரா ஆகிய 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சேலம் மாவட்டம் சங்ககிரி புள்ளா கவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்து உள்ளனர். இதற்காக இவர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று கஞ்சாவை பொட்டலங்களாக தயாரித்து அவர்களுக்கு கொடுத்து வந்தது தெரியவந்துது.

    இதேபோல தான் பவானி காலிங்கராயன் பாளையம் பகுதியில் வாலிபர்களுக்கு கஞ்சா பொட்டலம் தயாரித்த போது போலீசில் சிக்கியது தெரியவந்தது.

    மேலும் விஜயன், பவித்ரா மீது கொலை வழக்கு இருப்பதும், இது தவிர விஜயன்மீது கஞ்சா மற்றும் 18 அடிதடி வழக்குகள் இருப்பதும்தெரியவந்தது. மேலும் விஜயன் குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலை ஆனதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மதுபானத்தை விட கஞ்சா அதிக போதை தரக்கூடியது. இதன் காரணமாக சமூகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
    • மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு கஞ்சா விற்ற 130 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் 226 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

    மதுரை:

    மதுரை மண்டலத்தில் நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்கள் உள்ளன. இங்கு கஞ்சா விற்பனை கொடி கட்டி பறந்து வந்தது. இந்த நிலையில் மதுரை மண்டல ஐ.ஜியாக அஸ்ரா கார்க் பொறுப்பேற்றார். அவரது உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. இதனால் தென் மண்டலங்களில் இன்றைக்கு கஞ்சா விற்பனை, பதுக்குதல் மற்றும் கடத்தல் ஆகியவை ஓரளவு குறைந்து உள்ளன.

    இது தொடர்பாக மதுரை மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் கூறியதாவது:-

    மதுபானத்தை விட கஞ்சா அதிக போதை தரக்கூடியது. இதன் காரணமாக சமூகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

    எனவே மேற்கண்ட குற்றங்களுக்கு மூல காரணியாக விளங்கும் கஞ்சாவை ஒழிப்பது என்று முடிவெடுத்து செயல்பட்டு வருகிறோம். இதற்காக 10 மாவட்டங்களிலும் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் போலீசாருடன் ஒருங்கிணைந்து கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு கஞ்சா விற்ற 130 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் 226 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இதேபோல விருதுநகரில் 103 வழக்குகளில் 200 வங்கிக் கணக்குகளும், திண்டுக்கல்லில் 77 வழக்குகளில் 116 வங்கிக் கணக்குகளும், தேனி மாவட்டத்தில் 142 வழக்குகளில் 225 வங்கிக் கணக்குகளும், ராமநாதபுரத்தில் 32 வழக்குகளில் 72 வங்கிக் கணக்குகளும், சிவகங்கையில் 17 வழக்குகளில் 30 வங்கிக் கணக்குகளும், நெல்லை மாவட்டத்தில் 20 வழக்குகளில் 36 வங்கி கணக்குகளும், தென்காசியில் 34 வழக்குகளில் 31 வங்கிக் கணக்குகளும், தூத்துக்குடியில் 124 வழக்குகளில் 182 வங்கி கணக்குகளும், கன்னியாகுமரியில் 75 வழக்குகளில் 120 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 1,238 பேர் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    தென் மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் அசையும், அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இது தொடர்பாக மதுரை போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் கூறுகையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நடப்பாண்டில் மட்டும் 14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தவிர 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.70 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள 703 கிலோ கஞ்சா, 3 வீடுகள், 13 செல்போன்கள், 30 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள் மற்றும் ஒரு கனரக வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், குற்றவாளிகளின் நெருங்கிய உறவினர்களில் சந்தேகத்திற்கு உரிய நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

    மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரகாஷ் என்பவர் சரக்கு லாரியில் 1000 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார். திருவேடகம் கல்லூரி அருகில் உள்ள தோட்டத்தில் 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்த பாண்டி என்பவரை சோழவந்தான் போலீசார் கைது செய்து உள்ளனர்.

    திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாலதண்டாயுதபாணி கோவில் அருகே சரக்கு லாரியை சோதனை செய்த போது, திண்டுக்கல் ஆத்தூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி, ரோசன் ஆகிய 2 பேரும் 6.10 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டனர்.

    மதுரை மாவட்டத்தில் போலீசாரின் கஞ்சா வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டது.
    • அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய கூட்டாளி அருண் என்பவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த தாம்பரம் சானடோரியம் காமாட்சி நகரை சேர்ந்த அர்ஜூன், பல்லாவரம், சஞ்சய் காந்தி நகரை சேர்ந்த தினேஷ் ஆகிய 2 பேரை நேற்று பல்லாவரம் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய கூட்டாளி அருண் என்பவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கும்பகோணம் அருகே கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே வளையபேட்டை யானையடி பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 45).

    இவர் அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த தாலுகா போலீசார், மாரியம்மாளிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே மாரியம்மாளை கைது செய்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் கஞ்சாவை மறைத்திருந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 22 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் ஆரம்பாக்கம் போலீசார் அங்கு சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த தொம்பரை (21) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட 22 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திருமங்கலம் 4 வழிச்சாலையில் கஞ்சா விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பேரையூர்:

    திருமங்கலம் நகர் போலீசார் 4 வழிச்சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

    அவர்களில் ஒருவன் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டான். மற்ற 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பிடிபட்ட 2 பேரையும் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் அவர்களை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

    அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேரிடம் இருந்தும் 1 கிலோ 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து 2 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களது பெயர் மணிகண்டன் (வயது 20) பசுமலை குறிஞ்சி நகர், சல்மான்கான் (23) பழங்கா நத்தம் என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய விவேக்கை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் திருந்தி வாழ்வதாக கூறிய பெண் கஞ்சா விற்றபோது போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 40). இவர் கஞ்சா விற்றதாகவும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாகவும் புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் போன்ற போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் 22-ந்தேதி குற்ற விசாரணை சட்டத்தின் கீழ் புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனி முன்னிலையில் வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளி பிரியாவிடம் சாந்தி 1 வருடம் திருந்தி வாழ்வதாக பிராமண பத்திரம் கொடுத்தார்.

    இந்த நிலையில் சில மாதங்களே ஆன நிலையில் சாந்தி மீண்டும் கஞ்சா விற்றார். இதையடுத்து அவரை இன்ஸ்பெக்டர் பழனி கைது செய்தார்.

    1 வருடத்தில் சாந்தி திருந்தி வாழ்ந்த நாட்கள் போக மீதமுள்ள 239 நாட்கள் அவரை சிறையில் அடைக்க வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளிபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து சாந்தி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ×