search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "floor test"

    கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், மெஜாரிட்டியை நிரூபிக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் தங்களிடம் இருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். #KarnatakaCMRace #Yeddyurappa #Karnatakafloortest
    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை  இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார்.

    அதன்படி மாநில சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு சட்டசபை கூடுகிறது. முதலில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதன்பின்னர் அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன்மீது மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதையொட்டி சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் எடியூரப்பா இன்று ஓட்டலுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெற போதுமான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என கூறினார். மேலும், அமைச்சரவையை நாளை கூட்டி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.

    மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது அரசு வெற்றி பெற்றதும், மாலை 5 மணிக்கு பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள் என்றும் எடியூரப்பா கூறினார்.



    ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 104 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளது. எனவே, மெஜாரிட்டியை நிரூபிக்க, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என்றும் கூறப்படுவதால் அவர்கள் பா.ஜ.க.விடம் விலைபோயிருக்கலாம் என தெரிகிறது.  #KarnatakaCMRace #Yeddyurappa #Karnatakafloortest
    கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதால் ஐதராபாத் சென்ற காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு நகருக்கு திரும்பினர். #KarnatakaCMRace

    ஐதராபாத்:

    கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். 

    இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதற்காக மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால், பாஜகவினர் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளவோ, அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்கவோ வழி உள்ளது.

    இதனால், எம்.எல்.ஏ.க்களை கேரளாவுக்கு இடம்மாற காங்கிரஸ், மஜத தலைமை திட்டமிட்டன. நேற்று முன்தினம் இரவு, தனியார் விமானம் மூலம் கொச்சி செல்ல ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், விமான போக்குவரத்து அமைச்சகம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால், நேற்று காலை இரண்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஐதராபாத்துக்கு பேருந்து மூலம் சென்றனர். அவர்கள் அங்குள்ள இரண்டு சொகுசு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

    சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று மாலை 4 மணிக்குள் கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டனர்.



    இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காக ஐதராபாத் நகரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் இரவோடு இரவாக பெங்களூரு நகருக்கு திரும்பினர். குமாரசாமி தலைமையிலான மஜத எம்.எல்.ஏ.க்கள் விமானம் மூலம் பெங்களூரு நகருக்கு வந்தனர். #KarnatakaCMRace
    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்தி விட்டதாக மஜத முதல்வர் வேட்பாளர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். #KarnatakaCMRace

    ஐதராபாத்: 

    கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். 

    இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதற்காக மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால், பாஜகவினர் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளவோ, அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்கவோ வழி உள்ளது.

    இதனால், எம்.எல்.ஏ.க்களை கேரளாவுக்கு இடம்மாற காங்கிரஸ், மஜத தலைமை திட்டமிட்டன. நேற்று முன்தினம் இரவு, தனியார் விமானம் மூலம் கொச்சி செல்ல ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், விமான போக்குவரத்து அமைச்சகம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால், நேற்று காலை இரண்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஐதராபாத்துக்கு பேருந்து மூலம் சென்றனர். அவர்கள் அங்குள்ள இரண்டு சொகுசு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

    சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று மாலை 4 மணிக்குள் கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்தி விட்டதாக மஜத முதல்வர் வேட்பாளர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும் எம்.எல்.ஏக்கள் மீண்டும் தங்களிடம் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக காங்கிரஸ் - மஜத கூட்டணியின் 118 எம்.எல்.ஏக்கள் அடங்கிய பட்டியல் ஆளுநரிடம் அளிக்கப்பட்டது. #KarnatakaCMRace
    கர்நாடக மாநிலத்தில் தற்காலிக சபாநாயகர் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை காலை 10:30 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை விரித்துள்ளது. இதனால் தங்களிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசை வீழ்த்தவும் ஆயத்தமாகி வருகின்றன.

    இந்த சூழ்நிலையில் நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சபையை வழிநடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை நியமனம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    போபையா நியமனத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. போபையாவின் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இரவு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    உச்ச நீதிமன்ற பதிவாளரை சந்திக்க அவர்களுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பதிவாளரை சந்திக்க அனுமதி கிடைத்தது. பதிவாளிடம் மனுவை அளித்து, தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். நாளை  நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். 

    இதையடுத்து தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்துக்கு எதிராக காங்கிரஸ், மஜத சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. #KarnatakaElection #FloorTest #ProtermSpeaker 
    நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதில் 100 சதவிகிதம் உறுதியாக உள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். #Karnataka #FloorTest
    பெங்களூர்:

    கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டிருந்தார்.

    இதற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அடுத்து, தலைமை செயலாளர் உடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெரும்பான்மையை நிரூபிப்பதில் 100 சதவிகிதம் உறுதியாக உள்ளோம்” என தெரிவித்தார். #Karnataka #FloorTest
    ×